மனித நேயங்கள் மறையலாமா?

தற்காலத்தில் மனித நேயங்கள் குடும்பத்திலும், சமூகத்திலும் தேய்பிறையாக மாறி வருவது வருந்தத்தக்கது. குடும்பங்களில் வறுமை, கடன் வருகிற போது பெற்றோர் மட்டும் தற்கொலைச் செய்வது மட்டுமல்லாமல் ஒன்றுமறியாத பிள்ளைகளுக்கும் விஷத்தைக் கொடுத்தும், விஷ வாயுவை செலுத்தியும், நீருக்குள் மூழ்கடித்தும் கொலை செய்கிற செயல் மிகவும் மோசமான ஓன்று. தற்கொலைச் செய்வதே கோழைத்தனம் என்றால் மற்றவர்களையும் சாகடித்து தானும் சாவது எவ்வளவு மோசமான செயல்.

அதேப்போல் சாதியின் பெயரில், சமயத்தின் பெயரால் சிறு பிரச்சனைகள் வரும் போது அதனைப் பெரிதுப்படுத்தி ஒரு சமுதாயத்தையே அழிக்க முற்படுவதும் மிகவும் கொடுஞ்செயலே. ஒரு குறிப்பிட்ட சமயத்தை, சாதியைச் சார்ந்தவர் என்பதற்காக ஒன்றுமறியாத மக்களை கொல்வதும், வீடுகளை சூறையாடுவதும், துன்புறுத்துவதும் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? நாம் படித்த கல்வியின் பயன் கொஞ்சம் கூட நம்முடைய வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லையா?  

ஒருவருடைய அவல நிலை நாம் காணும் போது நம்முடைய வாழ்வில் மாற்றம் உருவாக வேண்டும். நாம் மிருகங்களைக் காட்டிலும் உயர்வுடையவர்கள் என்பது ஆறாவது அறிவு நமக்கு இருப்பதினால் மட்டுமே. ஒரு சிறுமியின் அவலம் ஒரு போரையே முடிவுக்கு கொண்டு வந்த சரித்திரத்தை பாருங்கள்.

ஆசியா கண்டத்திலுள்ள வியட்நாம் நாட்டுடன் அமெரிக்காவிற்கு பிரச்சனை, எனவே போர் மூண்டது. அமெரிக்க வீரர்கள் வியட்நாமைத் தாக்குவதற்கு அனுப்பப்பட்டனர். அவ்வாறு சென்ற கூட்டத்துடன் பத்திரிக்கை நிருபர்களும் சுட சுட செய்தியைத் தெரிவிக்க, சென்றிருந்தனர். புகைப்படங்களுடன் அவ்வப்போது, செய்திகளை பத்திரிக்கையில் வெளியிட்டு வந்த போது, ஒரு புகைப்படம் அமெரிக்க மக்களின் இதயங்களை கிழித்தெரிந்தது.

ஒரு பத்து வயது சிறுமி ஆடையில்லாமல் தன்னுடைய குடிசையிலிருந்து ஓடி வரும் காட்சி அது. அன்று அமெரிக்க படை வீரர்கள் போட்ட குண்டுகளினால் அச்சிறுமியின் வீடும் பாதிக்கப்பட்டது. வீடு தீப்பற்றி எரிந்தது. அவள் தன் உடையில் தீப்பிடித்ததினால் அதனை கழற்றி வீசி எறிந்து விட்டு, அழுகையோடும், பயத்தோடும், பீதியோடும் அந்த சிறுமி தெருவில் ஓடி வருகிறாள். தான் உயிர் பிழைக்க வேண்டும் என்று ஓடுகிற இச்சிறுமியின் காட்சி மக்களை சிந்திக்க வைத்தது. மக்கள் உயிர் பிழைக்க ஓடுகின்றனரே இப்படி மக்களை துன்பத்திற்குள்ளாக்கும் போர் நமக்கு நிச்சயம் தேவை தானா? இதனால் நாம் என்ன சாதித்து விடப் போகிறோம் என்ற எண்ணம் மக்கள் இதயத்தில் ஓட வியட்நாம் போர் முடிவுக்கு வந்தது. அச்சிறுமி அமெரிக்காவிற்கு வரவழைக்கப்பட்டாள். தற்பொழுது அமெரிக்காவில் திருமணம் செய்து வாழ்ந்து வருகிறாள்.

ஒரு சிறுமியின் வாழ்வு ஒரு நாட்டின் மக்களையே மாற்றிப் போட்டது. ஆனால் தினமும் செய்தித்தாளில் முழு குடும்பத்தை கொன்று தற்கொலைச் செய்துக் கொள்ளும் செயல்பாடு எப்பொழுது இந்தியாவில் நிற்கப் போகிறது? துன்பமான சூழல்கள் வரும் போது கர்த்தரிடத்தில் நம்முடைய காரியங்களை ஒப்புவிக்க வேண்டும். (நீதிமொழிகள் 16:3) நம்மைக் குறித்தும், நம் குடும்பத்திலுள்ள பிள்ளைகளைக் குறித்தும் கர்த்தருக்கு அக்கரை உண்டு. நம்முடைய பிரச்சனைகளுக்கு வேறு முடிவே கிடையாது, குடும்பமாக தற்கொலைச் செய்துக் கொள்வது தான் தீர்வு என்று முடிவெடுக்கக் கூடாது. உங்களைக் காட்டிலும் அவமானப்பட்ட, வட்டிக் கடன் வாங்கி கட்ட முடியாமல் இருக்கிறவர்கள் பலர் உயிருடன் வாழ்ந்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். எப்பொழுது ஆண்டவர் விடிவு காலத்தைத் தருவார்? என்று ஏக்கத்துடன் இருக்கிறார்கள். நிச்சயமாகவே முடிவு உண்டு, உன் நம்பிக்கை வீண் போகாது என்ற வார்த்தைப்படி கர்த்தர் நம்முடைய சூழலை மாற்றுவார். நம்பிக்கையோடிருங்கள். நம்முடைய வாழ்வையோ, பிறர் வாழ்வைப் பறிக்கவோ நமக்கு உரிமை இல்லை.

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் :  என் ரூபவதியே
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி