கடைசி இலை
'மிஸ் அமெரிக்கா' பட்டத்தை 2019 ம் ஆண்டு பெற்ற செஸ்லி கிறிஸ்ட், 29 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைச் செய்துக் கொண்டார் என்பது ஒரு அதிர்ச்சியான செய்தியாக இருக்கிறது.
செஸ்லி கிறிஸ்ட் நியூயார்க் நகரில் 60 மாடிகளைக் கொண்ட ஓரியன் கட்டிடத்தின் 9 வது மாடியில் தங்கி வாழ்கிறார். ஆனால் இவர் 29 வது மாடியில் இருந்து கீழே குதித்திருக்க வேண்டும் என்று கருதுகிறார்கள்.
இவ்வளவு பெரிய புகழும், பணமும், செல்வாக்கும் உடையவர்கள் ஏன் இப்படிப்பட்ட முடிவுகளை எடுத்தார் என்பது அனேகருக்குக் கேள்வியாக இருக்கலாம். பலருடைய வாழ்க்கையில் எப்பொழுது இனி வாழ வேண்டாம், வாழ்ந்தது போதும் என்று நினைக்கிறார்களோ அப்பொழுது தான் தவறான முடிவுகளை எடுக்க முயற்சிக்கின்றனர். பொதுவாகவே சந்தோஷம் இல்லாமல் விரக்தியாக செலவிடும் நிகழ்வுகள் தான் தற்கொலை எண்ணங்களை உள்ளத்தில் உருவாக்கி விடும். சில வேளைகளில் தற்கொலை எண்ணங்கள் வந்தாலும் பிறருடன் பேசி மகிழும் போது போய் விடும். ஆனால் சிலருக்குள் மாத்திரமே அந்த எண்ணங்கள் வலுப்பெற்று வருகிறது.
வாழ்க்கையில் மீண்டும் மகிழ்ச்சியான தருணங்கள் வரும். இறைவன் என்னை மகிழ்ச்சியாக வைக்க முடியும் என்ற நம்பிக்கை துளிர் விட வேண்டும். Fr.தனிஸ்லாஸ் அவர்கள் 'கடைசி இலை' என்ற ஒரு கதையின் வழியாக மனிதன் எவ்வாறு நம்பிக்கையுடன் வாழ முடியும் என்பதனை கீழ்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்கள்.
ஒரு கொடிய நோயில் ஒருவர் மாட்டிக் கொண்டார். அவருடைய உடலின் நிலையானது ஒவ்வொருநாளும் குன்றிக்கொண்டே சென்றது. எனவே தமது வாழ்க்கையானது கவுண்ட் டவுண் தொடங்கிவிட்டது என்று மனம் வருந்தினார்.
அவர் படுத்திருந்த படுக்கையின் எதிரில் ஒரு சிறிய மரம் ஓன்று நின்றது. அது பட்டுப்போகும் சூழலில் ஒவ்வொரு நாளும் இலைகளை உதிர்ந்துக் கொண்டே இருந்தது. தன் அறைக்கு சிகிச்சையளிக்க வரும் செவிலியரிடம் எனக்கு சிகிச்சை அளித்து என்ன பெலன்? பாருங்கள் என் எதிரில் நிற்கும் செடிப் போல் ஒவ்வொரு நாளும் பட்டுக் கொண்டே இருக்கிறேன் என்று புலம்பினார்.
ஒரு நாள் மருத்துவம் செய்ய காலை வேளையில் நர்ஸ் வந்த உடன் அந்த பெண்மணியைப் பார்த்து பாருங்கள் அந்த செடியில் இன்னும் ஒரு இலை தான் மீதம் இருக்கிறது. அது நாளை உதிர்ந்து விடும், நானும் நாளை மரித்து விடுவேன் என்றார்.
தன்னுடைய வாழ்நாளின் கடைசி எல்லைக்கு வந்தவராக இருந்த அந்த நோயாளி அடுத்த நாள் காலையில் கண் விழித்ததும் எதிரில் இருந்த செடியை எட்டிப் பார்த்தார். ஆனால் அந்த இலை விழவே இல்லை. அவருக்கு அது surprise ஆக இருந்தது. ஒற்றை இலையுடன் அடுத்த நாளும் காட்சியளித்த போது அங்கு வந்த Nurse அவரைப் பார்த்து நீங்களும் அந்த செடி போல் ஒரு இலையுடன் கூட, வாழ முடியும் என்று நம்பிக்கையூட்டினார். இதைக் கேட்ட அந்த நோயாளி தலையை அசைத்து மருந்துக்களை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டார். விரைவில் நல்ல சுகம் பெற்று வீடு திரும்பினார்.
அந்த ஒற்றை இலை வேறு ஒன்றும் அல்ல. அந்த Nurse artificial இலை ஒன்றை பட்ட மரத்துடன் இணைத்து ஒட்டி வைத்திருந்தார்கள். அது அந்த நோயாளிக்கு ஊக்கத்தைக் கொடுத்தது.
"கர்த்தாவே, நீர் எனக்குத் துணைச் செய்து என்னைத் தேற்றுகிறதை என் பகைஞர் கண்டு வெட்கப்படும்படிக்கு, எனக்கு அனுகூலமாக ஒரு அடையாளத்தைக் காண்பியும்" (சங்கீதம் 86:17) என்று சங்கீதக்காரன் இறைவனிடம் வேண்டுதல் செய்கின்றார். வாழ்க்கையில் இறைவன் நம்மோடு இருக்கும் போது சூழ்நிலைகள் எல்லாம் தலைகீழாக மாறும் என்ற நம்பிக்கை இதை வாசிக்கிறவர்களுக்கு உண்டாகட்டும். ஏனென்றால் தற்கொலை என்பது திடீரென்று ஏற்படுகிற எண்ணம் தான். ஆண்டவரே ஒரு அடி இன்னும் எடுத்து வைக்க உதவிடும் என்று கேளுங்கள். பிரச்சனைகள் அதற்குள்ளாக காணாமல் போய் விடும்.
இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள்.
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம்
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
Comments
Post a Comment