சிந்திப்பீர்

 

மனிதனுடைய சிந்தனைகள் எல்லாம் எப்படி பணத்தை சம்பாதிப்பது? எப்படி அதிகாரத்தில் போய் அமருவது? எப்படி பிறரை வீழ்த்துவது? என்பதே. பணம் கிடைக்கிறது, அதிகாரம் கிடைக்கிறது, பிறர் வீழ்த்தப்பட்டு கிடக்கிறார்கள். ஆனால் மனிதனோ எனக்கு மன அமைதியில்லை என்று தூக்கம் இல்லாமல் பஞ்சு மெத்தையில் புரண்டு தவிக்கிறான்.

உயர்வு என்பது நேர்மையான வழியில் வருகிறதா? பணம் என்பது சரியான வழியில் கல்லாபெட்டிக்கு வருகிறதா? என்பதை நிதானித்துப் பார்த்து செயல்பட்டால் மகிழ்ச்சிதானாக வந்து விடும்.

1925 ம் ஆண்டு கார்ல் ஜங் (Carl Jung) என்ற உளவியலாளர் மெக்ஸிகோ நகரத்திலுள்ள டாவோஸ் பூவவோ என்ற இடத்திற்கு சென்றிருந்தார். அப்பொழுது ஆச்வேய் பயனோ (Ochwiey Biano) என்ற பழங்குடி இன தலைவனை சந்திக்க வாய்ப்புக் கிடைத்தது. இருவரும் பேசிக் கொண்டிருந்த போது பயனோ கார்ல்லைப் பார்த்து "வெள்ளைக்காரர்கள் பைத்தியக்காரர்கள். அவர்கள் நிதானமாக வாழாமல், பரபரப்பாகவே வாழ்கின்றார்கள்" என்றார்.

சற்றும் எதிர்பாராத கார்ல் அவரைப் பார்த்து "ஏன் அவர்கள் பைத்தியக்காரர்கள்? என்று முடிவெடுத்தீர்கள்" என்றார்.

"வெள்ளைகாரர்கள் எப்பொழுதும் தலையை வைத்து தான் சிந்திக்கிறார்கள். இது எங்களைப் பொறுத்த வரையில் முட்டாள்தனம்" என்றார். மேலும் "நாங்கள் எப்பொழுதும் இதயத்தைக் காட்டி இதை வைத்துத் தான் சிந்திப்போம்" என்று ஒரு போடு போட்டார். 

கார்ல் அசந்துப் போனார் வாழ்க்கையில் ஒரு உண்மையை அந்த பழங்குடி இன மக்களிடம் இருந்து கற்றுக் கொண்டார் கார்ல். வாழ்க்கையில் நாம் எடுக்கும் முடிவுகள் எல்லாம் சுயநலமானதாகவும் பொருளாசையின் அடிப்படையில் இருக்குமானால் சந்தோஷம் என்பது நிரந்தரமற்றது. எதன் மூலம் சந்தோஷம் கிடைக்கும் என்று நினைத்தோமோ அங்கே இருந்து சந்தோஷம் வருவதில்லை. வெறுமையும், தனிமையும் தான் தாண்டவமாடுகிறது.

"புத்தியும் அறிவுமுள்ள மனுஷனாலோ அதின் நற்சீர் நீடித்திருக்கும்" (நீதிமொழிகள் 28:2) என்று திருமறை கூறுகிறது. வெறும் மூளையினால் மாத்திரம் கனக்குப் போட்டு பணத்தை சம்பாதிக்கலாம். ஆனால் உறவுகளை, நல்ல பெயர்களை, நல்ல வாழ்க்கையை சம்பாதிக்க முடியாது என்பதை மனதில் கொண்டு எது சரியான முடிவு என்பதை இதயத்தை கொண்டு அலசி ஆராயுங்கள். அப்பொழுது மகிழ்ச்சியான வாழ்க்கை கிடைக்கும்.

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் :  என் ரூபவதியே
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி