Great Master



தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் 16 வயது நிரம்பிய தமிழ் இளைஞர் பிரக்ஞானந்தாவை பாராட்டியுள்ளார். இவர் உலகின் சிறந்த சதுரங்க ஆட்டக்காரராகிய நார்வே நாட்டைச் சார்ந்த மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தியதற்கு கீழ்கண்டவாறு வாழ்த்தை தெரிவித்தார், "Super Computerயையே தோற்கடித்த, நான் பார்த்து வியந்த உலகின் சிறந்த சதுரங்க ஆட்டக்காரரான கார்ல்சனை வீழ்த்தி ஒட்டு மொத்த உலகையே திகைப்பில் ஆழ்த்திய  கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். மென் மேலும் வெற்றிகள் குவியட்டும்" என!

இந்த பிரக்ஞானந்தாவின் தந்தை ஒரு வங்கி ஊழியர். தன் சகோதரியின் மூலமாகவே சதுரங்க ஆட்டத்தை அறிந்துக் கொண்ட பிரக்ஞானந்தா 6 வயதிலேயே புனேயில் நடைப் பெற்ற தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துக் கொண்டு பதக்கத்தோடு வீடு திரும்பி துவக்க அடியை எடுத்து வைத்தார்.

12 வயதிலேயே இத்தாலியில் 2018ம் ஆண்டு நடைப்பெற்ற கிரெடின் ஜப்பான் தொடரில் கலக்கி எடுத்தார். இதனால் 'கிராண்ட் மாஸ்டர்' பட்டத்தை வென்றார். இளம் பருவத்திலேயே இன்டர் 'நேஷனல்ஸ் மாஸ்டர்' பட்டத்தையும் தன் வசப்படுத்திக் கொண்டார்.

நம்ம மக்கள் Computer ல் ரம்மி விளையாடி விளையாடி சம்பளத்தைக் கொடுத்து, வீட்டை விற்றுக் கொடுத்து, அருகில் உள்ளவர்களிடத்தில் கடன் வாங்கியும் ரம்மிக்காக கொடுத்து நடுத்தெருவுக்கு வந்து விடுகின்றனர். சிலர் தற்கொலையும் செய்துக் கொள்ளுகின்றனர். காரணம் கம்பியூட்டருடன் விளையாடுவது என்பது மிகவும் சாதாரணமானதல்ல. எனவே தான் விஸ்வநாதன் ஆனந்த், "கம்பியூட்டருடன் போட்டிப் போட்டு விளையாடுவது என்பது ஓட்டப்பந்தயத்தில் காருடன் போட்டிப் போடுவது போன்றது", என்கிறார். ஆனால் 16 வயது நிரம்பிய பிரக்ஞானந்தா Super computerயையும் மடக்கி தலை குனிய வைத்து தமிழகத்தை தலை நிமிரச் செய்துள்ளார்

Computer மூலம் நடைப்பெற்ற Airthings Masters என்ற தொடரில் மோதி வெற்றிப் பெற்ற போது கொஞ்சமும் பெருமைப்பட்டுக் கொள்ளாமல் இலக்கியத்தில் படிப்பது போல் விளைந்த நெல்மணி கதிர்கள் தலை வணங்கி நிற்பது போல் வெற்றியின் மிதப்பில் வாழ விரும்பாமல் 'நான் தூங்கப் போகிறேன்' என்று கம்பியூட்டரை shutdown பண்ணி விடுகிறார்

இளைஞர்களே, இளம் பெண்களே வாழ்க்கையில் கிடைக்கும் வெற்றிகளைக் கண்டு பெருமிதம் கொள்ளக்கூடாது. சில இளைஞர்கள் பணம், புகழ், செல்வாக்கு வந்த உடன் கை, கால் புரியாமல் பெற்றோரை, உறவினர்களை ஆசிரியர்களைக் கூட துச்சமாக கருதி பேசவும், செயல்படவும் ஆரம்பித்து விடுகின்றனர்.

கணவன் மனைவியிடம் கூட சில வேளைகளில் சமுதாயத்தில் கிடைக்கும் உயர்வை பெருமையாக நினைத்து விதற்பமாக நடந்துக் கொள்ளுகின்றனர். தன்னை உயர்வாகவும், தன் துணையை தாழ்வாகவும் மதிக்கத் தொடங்கி விடுகின்றனர். நம்முடைய உயர்வு எல்லாம் சில காலம் இருக்கும், சில காலம் பறந்துப் போய் விடும். இவை நிரந்தரமற்றது.

இன்று தோற்ற கார்ல்சன் 2013ல் சென்னையில் நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் அன்று உலக சாம்பியனாக விளங்கிய விஸ்வநாதன் ஆனந்தை வென்று நம்பர் 1 இடத்தைப் பெற்றவர் தான். எனவே வெற்றியில் பெருமிதம் கொள்வதை தவிர்க்க வேண்டும். அது நிரந்தரமற்றது. பெருமைக்கு, அகந்தைக்கு இடம் கொடுக்கக் கூடாது.

"மேன்மைக்கு முன்னானது தாழ்மை" (நீதிமொழிகள் 15:33) "அழிவு வருமுன் மனுஷனுடைய இருதயம் இறுமாப்பாயிருக்கும்; மேன்மைக்கு முன்னானது தாழ்மை" (நீதிமொழிகள் 18:12) இவ்வாறு தாழ்மையாக நடந்துக் கொள்ள வேண்டும் என்று திருமறை திரும்ப திரும்ப நமக்குப் போதிக்கிறது. மேலும், மேலும் முன்னுக்குச் செல்ல வேண்டுமானால் எவ்வளவு தாழ்மையாக இருக்க வேண்டுமோ அவ்வளவு தாழ்மையாக நடந்துக் கொள்ள வேண்டும்.

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் :  என் ரூபவதியே
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி