மன நலமும் மகிழ்ச்சியான குடும்பமும்

அக்டோபர் 2021ல் வெளியான லான் செட் இந்தியாவின் மனநலப் பிரச்சனை என்பது கொரானாவின் தாண்டவத்தால் 35% அதிகரித்துள்ளதாக கூறுகிறது. நவம்பர் 2021ல் வெளியான தேசிய குற்றவியல் பதிவேட்டின் படியாக தற்கொலை என்பது இந்தியாவைப் பொருத்த வரையில் எகிறிக்கொண்டே போய் இருக்கிறது. மாணவர்கள், இளைஞர்கள் அதிகமாக இந்தியாவில் தற்கொலைப் புரிவதாகவும் மனநல மருத்துவர் சிவபாலன் இளங்கோவன் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் 3ல் ஒருவருக்கு மனநலப் பிரச்சனை இருக்கிறது என்றும் குறிப்பிடுகிறார். அப்படியென்றால் இந்த கட்டுரையை வாசிக்கும் நாமும் இருப்போமோ என்று அஞ்சவேண்டாம்.

வாழ்க்கையில் திடீர் திடீரென்று முடிவுகளை எடுத்து விட்டு பின்பு ஏன் இதை எடுத்தோம். இப்படி வசமாக வாழ்க்கையின் பிரச்சனையில் மாட்டிக் கொண்டோமே என்று தவிக்கிறீர்களா? இப்படி உங்களை மாட்டி விடுவது யார் தெரியுமா? அந்த ஆள் பெயர் அமிக்டலா (Amygdala)! 

மூளையில் தான் இந்த அமிக்டலா ஒளிந்து ஒரு பகுதியில் இருந்துக் கொண்டிருக்கிறது. அது தான் நாம் நேசித்த மனைவியை ஒரு நொடிப் பொழுதில் வீட்டை விட்டு விரட்டி விட வைக்கிறது. அந்த அமிக்டலா தான் திடீர் முடிவுகளை நம்மை எடுக்க வைத்து நல்ல jobயை ஒரு நொடிப் பொழுதில் தூக்கி எரிய வைத்து விடுகிறது. அந்த அமிக்டலா தான் வளர்த்து ஆளாக்கிய  தகப்பனை, தாயை ஒரு நொடிப்பொழுதில் தூக்கி எரிந்து விட்டு சில மாதம் பழகியவனே/ளே தியாகியாக நினைத்து பின்னால் போக வைத்து விடுகிறது. அந்த அமிக்டலா தான் ஒரு நொடிப் பொழுதில் பெற்ற பிள்ளைகளுக்கு விஷம் வைத்து கொன்று விட்டு தவறான நபருடன் பயணிக்க முடிவெடுக்க வைத்து விடுகிறது. 

சைமன் அன்று தன்னுடைய மனைவியுடன் wedding dayக்கு dress எடுக்க மாலை வேளையில் வருகிறேன் என்று கூறிவிட்டு companyக்கு போனான். Shiny மதியமே அலுவலகத்திற்கு  விடுப்பு போட்டு விட்டு தன் மகளை மாலை வேளையில் ஸ்கூலில் இருந்து அழைத்து வந்தாள். இருவரும் மாலை 5 மணிக்கு ரெடியாகி சைமனின் வருகைக்காக காத்திருந்தார்கள். என்ன dress எடுக்க வேண்டும், இரவு எந்த கடையில் உணவை சாப்பிட வேண்டும் என்று planயை இருவரும் போட்டனர். மாலை 5.30 மணி ஆனது. 6,7 என தாண்டிச் சென்றுக் கொண்டே இருந்தது. ஆனால் சைமன் வரவில்லை.   Phone Switch off.

Shinyக்கு கோபம் கொப்பளிக்க ஆரம்பித்தது. உங்க அப்பா ஒரு மனுஷனே கிடையாது.   இவருக்கெலாம் எதற்கு ஒரு குடும்பம்? மனைவி, பிள்ளை என்ற பாசமும் கிடையாது! இப்படி ஒரு மனுஷனைத் திருமணம் செய்து வாழ்வதைக் காட்டிலும் பேசாமல் தனியாக வாழ்ந்து விட்டுப் போகலாம் என்று மனம் பொறுமினாள்.

இரவு 2 மணிக்கு வீட்டுக்கதவு தட்டப்பட்டது. கதவு திறக்கப்படவில்லை. சைமன் எவ்வளவோ கெஞ்சினான். Shiny மனதை இறுக்கமாக பூட்டிக் கொண்டு A/C  அறைக்குள் போய் படுத்துக் கொண்டாள். காலை எழுந்த உடன் சைமனைப் பார்த்தால் அதிர்ந்துப் போனாள். வீட்டின் முன் உடைந்த Car, கைகால்களில் அடிப்பட்டு கட்டுப் போடப்பட்ட நிலையில் வரண்டாவில் படுத்து, தூங்கி கொண்டிருந்தான் சைமன்.

மாலை வேளையில் வீட்டிற்கு வரும் போது எதிர்பாராத accidentல் மாட்டிக் கொண்டதை புரிந்துக் கொள்ளாமலே செயல்பட்ட shiny, சைமனிடம் வருத்தம் தெரிவித்தாள்.

இப்படி shiny வாழ்க்கையில் திடீர் முடிவுகளை எடுக்க வைப்பதுதான் இந்த 'அமிக்டலா'.   சிந்தித்து முடிவெடுக்கும் முன், முந்தியடித்து நமக்கு தீர்வுகளைக் கொடுப்பது.

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் :  என் ரூபவதியே
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

புத்தியுள்ள மனைவி

உண்மையை உரக்க சொல்வோம்