அன்பு ஓய்ந்திடலாமா?
காதலர் தினத்தன்று காதல் மனைவி தன்னை மாய்த்துக் கொண்ட செய்தி மனதை வறுத்துகிறதாக தினசரி செய்தித்தாளில் வந்தது. இளம் வயதில் வாழ்ந்தால் உன்னோடு இல்லையேல் வாழ்க்கையே வேண்டாம் என்று காதல் திருமணம் செய்துக் கொண்டனர். வாழ்க்கை ஜோராகத்தான் சென்றது. திரைப்படங்களில் வருவது போல் வாழ்க்கை என்பது நொடிக்கு நொடி அமர்க்களமாக எல்லார் வாழ்விலும் செல்வதில்லை.
சரியான வேலை இல்லாமல் மனைவியை எப்படிக் காப்பாற்றுவது? இது மண் வீடு கட்டி சோறு பொங்கி விளையாடும் விளையாட்டு அல்ல வாழ்க்கை, ஆகவே வேலையை தேடி மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல வேண்டிய சூழல். செல்லுமிடமெல்லாம் மனைவியை அழைத்துச் செல்ல முடியாமல் தனியே விட்டு விட்டு தங்கி பணியாற்ற வேண்டிய சூழல்.
கல்யாணத்திற்கு முன்பு காதலர் தினத்தில் தான் விரும்புகிற பெண்ணை எப்படியாகிலும் தன் வசப்படுத்துவதற்காக பல்வேறு திட்டம் தீட்டி உள்ளத்தில் இடம் பிடிக்க விரும்பும் ஆண்கள், திருமணமான பின்பு அவளை மகிழ்ச்சிப்படுத்த எந்த விதமான அதிரடி திட்டத்தையும் செய்வது இல்லை. அவள் தான் நம் மனைவி ஆகிவிட்டாளே இனி என்ன? என்று எந்த விதமான உணர்வுகளையும் உற்சாகப்படுத்தும் செயல்களில் பலர் ஈடுபடுவதில்லை.
அப்படித்தான் இந்த இளந்தம்பதியர் வாழ்விலும் நடந்தது. காதலர் தினம் என்றால் T.V, WhatsApp, Twitter போன்று பல வலைதளங்கள் உணர்வுகளை துயில் எழுப்புகிறது. அன்று அந்த பெண்ணும் தன் காதல் கணவருக்கு phone செய்து வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளாள். ஆனால் அன்பு நமத்துப் போன ஆண்மகனுக்கு காதலாவது கத்தரிக்காயாவது பேசாமல் வேலையைச் செய்தோமோ படுத்து தூங்கினோமா என்று மாறவே வீட்டிற்கு போக மனமற்றுப் போய் விட்டான்.
நீங்கள் வீட்டிற்கு மாலை வராவிட்டால் இறந்து விடுவேன் என்று கூறியும் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
I love you மாமா என்று கோலப்பொடியால் எழுதி வைத்து விட்டு வாழ்க்கையின் கடைசி எல்லைக்குச் சென்று தன்னையே மாய்த்துக் கொண்டாள் அந்த இளம்பெண்.
வாழ்க்கையில் அன்பு என்பது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து தேய் பிறையாக பலருக்குச் சென்று விடுகிறது. அன்பு என்பது ஒவ்வொரு நாளும் வளர் பிறையாக மாறினால் வெளிப்புற அழகால் அல்ல, உள்புற வாழ்வில் மெறுகேறும்!
டால்பின் போன்ற ஒரு வகை மீன்களை சோதனைக்காக அமெரிக்காவில் உள்ள florida மாநிலத்தில் வளர்த்து வந்தனர். சோதனைகள் எல்லாவற்றையும் முடித்து விட்ட பின்னர் அவைகளை மீண்டும் கடலில் விட்டு விடலாம் என்று தீர்மானித்து அவைகளின் அருகில் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அன்று தொடங்கி அந்த டால்பின் வகை மீன்கள் சாப்பிடுவதற்கு மறுத்து வந்தன. நான்கு நாட்கள் அவைகள் முழுவதுமாக உணவை அருந்தவே இல்லை. அன்புடன் வளர்க்கப்பட்டு பராமரிக்கப்பட்ட அம்மீன்கள் தங்களைத் தாங்களே சாகடித்துக் கொண்டது மிகுந்த ஆச்சரியத்தைக் கொடுத்தது! மனிதன் மட்டுமல்ல மிருகங்கள் கூட அன்பை குறைத்துக் கொண்டால், வாடி வதங்கி விடுகிறது. மனிதர்களாகிய நாம் பணம் பணம் என்று கணவனை விட்டு மனைவியை விட்டு குடும்பங்களை விட்டு விட்டு பொருளுக்காகவே ஓடிக் கொண்டிருக்கிறோமே, என்று தான் வாழப் போகிறோம்? வாழ்க்கைக்கு பணம் அவசியம். அதற்காக பணமே வாழ்க்கையாகி விடக் கூடாது.
“அன்பே பிரதானம்” என்கிறது திருமறை. குடும்ப வாழ்விலும் இந்த ஒரே வார்த்தையை மையமாகக் கொண்டு வாழ்ந்தாலே, வாழ்க்கை சக்கரத்தின் அச்சாணியாக அன்பு இருந்து மகிழ்ச்சியைக் கொடுத்துக் கொண்டே இருக்கும். ஆபிரகாம் முதிர்வயது வரையிலும் தன் மனைவியாகிய சாராளோடே பயணப்பட்டுக் கொண்டிருந்தான்! அவளை ஒரு பாரமாக எண்ணவே இல்லை. ஆண்டவர் துணையாக தந்த மனைவியை அன்போடு நேசித்து வாழப் பழகுவோம்.
இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள்.
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
Comments
Post a Comment