துணிந்தவனுக்கு பயமில்லை
இளைஞர்கள் சிலர் திருமண வாழ்வை நினைத்தாலே ஐயோ அதற்கு நான் இன்னும் ready ஆகவில்லை. எனக்கு வருகிற சம்பளம் எனக்கு மட்டும் தான் போதுமானது. அப்படி இருக்கும் போது எனக்கு மனைவி, பிள்ளைகள் என்று வந்து விட்டால் என்ன ஆகும் என்று பயந்து திருமணத்தைத் தள்ளிப் போட்டுக் கொண்டே செல்வர்.
சில வேளைகளில் பெற்றோரின் அளவுக்கு அதிகமான பாதுகாப்பில் வளருகிற பிள்ளைகளும் வாழ்க்கையில் பயத்தோடே காலத்தைப் போக்குகின்றனர். எதெற்கெடுத்தாலும் எனக்கு ஒன்றும் தெரியாது என் பெற்றோரிடம் கேட்டுக் கொள் என்று இளம் வயது மனைவியை பெற்றோரிடம் திருப்பி விடும் ஆண்கள் இருக்கின்றனர். காரணம் பயம், முடிவெடுக்க தயக்கம் தான் காரணம்.
எந்த ஒரு முடிவையும் என் பிள்ளை எடுத்துக் கொள்ள மாட்டான். அவனுக்கு வயசு கொஞ்சம் என்று 30 வயது ஆனாலும் பிள்ளைகளை பேச விடாமல் தானே பேசி பேசி பிள்ளைகளை பயந்த சூழல்களுக்குள்ளே தள்ளி விட்டு விடுகிறார்கள் சில பெற்றோர்.
இளைஞர்களே, திருமணமான இளம் சிங்கங்களே சற்று நிமிர்ந்து உட்கார்ந்து வாசியுங்கள்.
இனிமையான தென்றல் வருடும் பசுமை நிறைந்த காட்டிற்குள் ஒரு இறை மனிதர் வாழ்ந்து வந்தார். குற்றாலம் போன்று அருவியின் சத்தம் எப்பொழுதும் கேட்டுக் கொண்டே இருக்கும். அப்பகுதிக்கு பலர் அவரைக்கான வருவர். தங்களது பிரச்சனைகளுக்கு விடையை அவரிடம் பெற்று மகிழ்வோடு திரும்புவர்.
அன்று இளைஞன் ஒருவன் அவரை கணவந்தான். வெகுநேரம் அவரோடு பேசிக் கொண்டிருக்க நேரம் போனதே தெரியவில்லை. நன்றாக இருட்டி விட்டது.
ஐயா நான் வீட்டிற்குப் போகிறேன் என்று வேகமாக கிளம்பினான். இருட்டி விட்டதால் அவன் உள்ளத்திற்குள் சற்று பயம் கவ்வ ஆரம்பித்தது. இருப்பினும் புறப்பட வேண்டும் என்ற ஆர்வத்தில் கிளம்பினான். சற்று தூரம் சென்ற அவன் பயத்தினால் நின்றான்.
அவனை உற்று கவனித்த அந்த இறை மனிதர் ஒரு விளைக்கை எடுத்துக் கொடுத்தார். அவனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. மெதுவாக விளக்கை வைத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தான்.
சற்று தூரம் சென்றவன் உள்ளமானது பயத்தினால் சற்று படபடக்கவே நடை மெதுவாகவே இருந்தது. இதை கவனித்த அந்த இறை மனிதர் அவனைப் பார்த்து “தம்பி நில்” என்றார்.
அவன் நின்றபோது அந்த இறைமனிதர் அந்த விளக்கை வாங்கி ஊதி அணைத்தார்.
சற்றும் எதிர்பார்க்காத அந்த இளைஞன் அவரை நோக்கினான்.
அவரோ அவனைப் பார்த்து, தம்பி இந்த வெளிச்சம் நிரந்தரமற்றது. இங்கு வீசும் காற்றில் அது எப்பொழுதும் அணைந்து விடலாம், அல்லது எண்ணெய் தீர்ந்து போனாலும் அணைந்து விடும். நீ பாதி வழியில் பயந்து நடுங்குவாய்.
வெளிச்சம் என்பது உன் உள்ளத்தில் இருந்து தான் வெளிப்பட வேண்டும். அதை அணைப்பதற்கு யாராலும் முடியாது துணிந்து செல் என்று தைரியத்தை ஊட்டி அனுப்பி வைத்தார். அவன் வீடு போய் சேரும் வரையில் உள்ளத்தின் விளக்கு அணையவில்லை.
திருமறையில் தாவீது, சிங்கத்தையும், கரடியையும் விரட்டி அதன் வாயை கிழித்து, தன் ஆட்டுக்குட்டியை காப்பாற்றினான். அந்த துணிவு அவனுக்குள் இருந்த போது இராட்சதன் போன்று உயரமாக இருந்த கோலியாத்தை கொன்று போட துணிவுடன் செல்கிறான். சவுல் உட்பட பலர் தொடை நடுங்கிக் கொண்டிருக்க, ராணுவ பயிற்சி பெறாத துணிவு மிக்க இளம் வாலிபனாகிய தாவீது வெற்றிக் கொள்கிறான்.
தாவீதின் வாழ்க்கையில் இறைவன் மீது கொண்டுள்ள நம்பிக்கை அவனுக்கு துணிவை ஒவ்வொரு நரம்புகளிலும் கொடுத்துக் கொண்டிருந்தது. அதே ஆண்டவர் உங்களுக்கும் துணிவைக் கொடுப்பாராக.
இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள்.
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம்
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
Comments
Post a Comment