JACKPOT


WhatsApp Trending ஒன்றினை தினசரி நாளிதழில் வாசித்தேன். அன்று காதலர் தினம்.

"காதலித்து ஏமாற்றம் அடைந்தவர்களுக்கு வலி அதிகம். ..

தெரியுமா உங்களுக்கு?"

"தம்பி.. சும்மா எதுவுமே தெரியாம பேசாதே.. நீ காதலிச்ச புள்ளையவே கல்யாணம் செஞ்சு பாரு. அப்புறம் எதுல வலி அதிகம்ன்னு தெரியும்

திருமணம் arranged marriage ஆக இருந்தால் சிறந்ததா? அல்லது love marriage ஆக இருந்தால் சிறந்ததா என்று பட்டி மன்றம் போட்டு பேசிக் கொண்டிருக்கும் காலத்தில் பல மாணவர்கள் படிப்பதை விட திருமணம் செய்து கொள்வது தான் இப்பொழுது முக்கியம் என்று முடிவெடுக்கும் போது பெற்றோர்கள் அதிர்ந்து விடுகின்றனர்.

திருமண வயதை ஏன் ஐயா கூட்டிக் கொண்டே போகிறார்கள்? காந்தி காலத்தைப் போன்று 13 வயதில் திருமணம் செய்துக் கொண்டு படித்தால் என்ன? என்று சில இளைஞர்கள் வேதனைப் பட்டுக் கொண்டிருக்கின்றனர். மற்றொரு புறத்தில் திருமணம் செய்து நாம் என்ன பெரிதாக சாதித்து விடப் போகிறோம் என்று திருமணமே கெட்ட வார்த்தையாகப் பார்க்கிற கூட்டம் மற்றொரு புறம்.

Arrange marriage பண்ணினவர்கள் எல்லாம் கசந்த வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டும் இருக்கவில்லை! Love marriage பண்ணினவர்களெல்லாம் சொர்க்கத்தில் வாழ்வது போல் இவ்வுலகில் வாழ்வதும் இல்லை என்பதே நடைமுறை உண்மை.!!

இளம் வயதில் கல்வியும், நல்ல எதிர்காலத்தை நோக்கிய நேர்மையான பயணமும் தேவை. அப்பொழுதுதான் வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும். அதற்கு டாக்டர் பி.வி. பட்டாபிராமன் என்பவர் தன்னுடைய புத்தகத்தில் JACKPOT என்ற சூத்திரத்தை முன் வைக்கிறார்.

J - Jealousy - பொறாமை. இளம் வயதில் உள்ளவர்கள் மற்ற மாணவர்களுடன், நண்பர்கள், நண்பிகளுடன் தங்களை compare பண்ணி பொறாமையை வளர்த்துக் கொள்ளாமல் இசைந்து வாழ, உதவிச் செய்து வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.

Anger - கோபம். இளம் வயதில் இளைஞர்கள் தங்கள் பெற்றோர், உடன் பிறப்புகள், ஆசிரியர்கள், நண்பர்கள் என்று பலரிடம் கோபத்தை வெளிக்காட்டுவர். ஆனால் கோபத்தை கட்டுப்படுத்தி வாழ முற்பட வேண்டும். குறிப்பாக வீட்டில் உள்ள பொருட்களை தூக்கி வீசுவது, சாப்பாட்டை தட்டுவது போன்ற அதிக கோபத்தை கட்டுப்படுத்தி வாழ முற்பட வேண்டும்.

Cricket - கிரிக்கெட். முன்பு bat யை எடுத்துக் கொண்டு இளைஞர்கள் அலைவர். ஆனால் தற்பொழுது cell phone லேயே கிரிக்கெட், pubg, freefir போன்ற விளையாட்டுகளில் அளவுக்கு மிஞ்சி விளையாடி தங்கள் பொன்னான நேரங்களை செலவிடுவதை தவிர்க்க வேண்டும்.       

Kick back - ஒவ்வொன்றிக்கும் லஞ்சம் - பெற்றோரிடம் ஒவ்வொரு செலவைச் செய்யும் போதும் Terms and condition போட்டு பணத்தை கறக்க பழகக் கூடாது. அது பின்நாட்களிலும் அட்டைப் பூச்சியைப் போன்று மனதில் ஒட்டிக் கொள்ளும்.

Postponement  - காலங்கடத்துதல். தங்களுடைய படிப்பு மற்றும் பிற காரியங்களிலேயும் அன்றன்று செய்ய வேண்டியதை அன்றன்று முடிப்பதற்கு முனையுங்கள். எதையும் தேக்கி வைக்காதீர்கள்.

Over Sleeping - அதிக தூக்கம். ஏழு மணி நேரத்திற்கு மேல் தூங்குவதை தவிருங்கள். உடல் ஆரோக்கியம் முக்கியம். அதிக நேரம் இரவில் விழித்திருந்து காலையில் 10 மணி வரையிலும் தூங்கி பழகினால் வாழ்க்கையில் காலை உடற்பயிற்சி போன்றவற்றை இழந்து உடல் சுகத்தை இழந்து விடுவோம்.

Television - தொலைக்காட்சி. முன்பு தொலைக்காட்சியில் நேரத்தை செலவு செய்த இளந்தலைமுறை தற்பொழுது cell phoneலேயே முடங்கி கிடக்கின்றனர். வலை தளத்திலிருந்து வெளியே வர முடியாமல் சிக்குண்டு எதிர்கால நோக்கத்தை இழந்து கல்வியின் நாட்டத்தை மறந்து வேலைவாய்ப்பை தேட மனமற்று பரிதாபமாக காணப்படுகின்றனர்.

"ஞானிகளின் வாக்கியங்கள் தாற்றுக் கோல்கள் போலவும், சங்கத்தலைவர்களால் அறையப்பட்ட ஆணிகள் போலவும் இருக்கிறது... என் மகனே! இவைகளினாலே புத்தியடைவாயாக...(பிரசங்கி 12:11,12) என்று பிரசங்கியின் ஆக்கியோன் குறிப்பிடுகிறார். வாழ்க்கையில் நிதானத்துடன் எதை எப்பொழுது செய்ய வேண்டும், எந்த வயதில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அந்த காலத்தை, நேரத்தை இழந்த பின்பு அதை திரும்ப பெற இயலாது என்பதை உணர்ந்து நல்ல முடிவுகளை எடுக்க இளைஞர்களுக்கு இறைவன் உதவிபுரிவாராக. திருமறையில் வாக்கியங்கள் நமக்கு நன்றாக வழிகாட்டும் நன்றாக படித்து உணர்வடையுங்கள்

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் :  என் ரூபவதியே
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php


Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

புத்தியுள்ள மனைவி

உண்மையை உரக்க சொல்வோம்