சத்தமும், சீற்றமும்
19வது வயதில் 1986 ம் ஆண்டு மைக் டைசன் (Trevor Berbick) டெர்வோர் பெர்பிக்கை வென்று குத்துச் சண்டையில் மாபெரும் வெற்றிக்கான அடித்தளத்தை அமைத்தார்.
இவாண்டர் ஹோலீபீல்ட் உடன் Nov 9, 1996ல் மோதிய போது 11 வது roundல் மைக் டைசனை round கட்டி விட்டார். தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாமல் மனதிலே அனல் கொண்டார். மீண்டும் வெற்றிப் பெற்று காட்டுகிறேன் வா, வா, வா என்று கொக்கரிக்க ஆரம்பித்தார் மைக் டைசன்.
1997ல் மீண்டும் அனல் பறக்கும் போட்டிக்கு ஆயத்தமாகினர். ஒவ்வொரு roundகளிலும் மைக் டைசன் காது வழியாக புகைப் போக ஆரம்பித்தது. எதிரியை வீழ்த்தியே ஆக வேண்டும் என்று ஆக்ரோசமாக மாறினார் மைக் டைசன். முழு பலத்தையும் கொடுத்து எதிரியை தாக்கிக் கொண்டே இருந்தாலும் அவ்வப்போது நடுவர் விசில் அடித்து தடுத்துக் கொண்டே இருந்தார்.
மூன்றாவது roundல் தான் இன்று "The Sound and Fury" என்று உலக முழுவதும் அழைக்கும், கண்களையும் நம்ப முடியாத செயல் ஒரு நொடிப் பொழுதில் நடந்து விட்டது.
எவ்வளவு தான் குத்து விட்டாலும் முறைப்படிதான் குத்து விட்டு Pointயை வாங்க வேண்டும் என்பது மைக் டைசனுக்கு நன்றாகத் தெரியும். ஆனால் கோபமும், ஆத்திரமும் உடல் முழுவதும் பரவி ஆக்ரோசமாக இவாண்டர் ஹோலிபீல்டின் காதைக் கடித்து துப்பி விட்டார். இப்படி விளையாட்டில் disqualify ஆவேன் என்று அவர் நினைத்துக் கூட பார்க்கவில்லை.
நிதானத்தை இழந்த மைக் டைசன் பேட்டியின் போது "I really lost consciousness of the whole fight. It took me out of my fight Plan and everything" என்று குறிப்பிட்டார்.
மைக் டைசன் வாழ்க்கை மட்டுமல்ல நம் ஒவ்வொருவர் வாழ்விலேயும் நம்முடைய சிந்தனைத் திறனை பலவேளைகளில் இழந்து, கைகள் கால்கள் நடுங்க, கண்கள் கோபங்களை கொப்பளிக்க நோடிப் பொழுதில் தவறான முடிவுகளை எடுத்து விடுகிறோம். மனைவி/கணவன் வேண்டாம் என்ற முடிவுக்கு வந்து விடுகிறோம். என் சொல்லைக் கேட்காமல் நீ திருமணம் செய்ததால் இனி நீ எனக்கு பிள்ளையும் இல்லை, நான் உனக்கு தகப்பனும் இல்லை என்று முடிவெடுத்து விடுகிறோம்.
சில முடிவுகளை நாம் எடுத்து விட்டு பின்பு, ஐயோ நாம் இப்படி பெற்று வளர்த்த தகப்பனை தாயை தூக்கி வீசி எறிந்து விட்டோமே, இன்று வந்தவனுக்காக வாழ்வை தியாகம் செய்த பெற்றோரை இழந்து விட்டோமே என்று பிள்ளைகள் வருந்துவதும் உண்டு.
சிலவேளை உணர்ச்சிகள் பொங்கி எழும்போது கோபமும், ஆத்திரமும் நம் வாழ்வில் தாண்டவம் ஆட ஆரம்பித்து விடும் அவ்வேளைகளில் சற்று முடிவெடுப்பதை தாமதப்படுத்தி போடுவது தான் புத்திசாலித்தனம். உடனே போன் போட்டு ஒரு முடிவுக்கு வந்தே ஆக வேண்டும் என்று ஒரு நாளும் முடிவெடுக்காதிருங்கள்.
"அகித்தோப்பேல் சொல்லும் ஆலோசனை தேவனுடைய வாக்கைப் போல் இருந்தது". (2 சாமுவேல் 16:23) அந்த அளவிற்கு புத்திசாலியாக காணப்பட்டான். ஆனால் இந்த புத்திசாலி தன்னுடைய வார்த்தைப் படி தான் ராஜா நடக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தான். ஆனால் தன் வார்த்தைப்படி செய்யவில்லை என்று கேள்விப்பட்ட உடன் ஆத்திரப்பட்டான். உடனடியாக தன் வீட்டுக்காரியத்தை ஒழுங்கு படுத்தி விட்டு தவறான முடிவை எடுத்து விடுகிறான். காரணம் ஆத்திரம், கோபம் அந்த அளவிற்கு அவனை ஆட்டிப் படைத்தது.
இன்றைய இளைஞர்களுக்கும், இளம்பெண்களுக்கும் இப்படிப்பட்ட ஆத்திர உணர்வு மேலோங்கி பலவேறு தவறான முடிவுகளை எடுப்பதால் வாழ்க்கை முழுவதும் துன்பத்தை சுமந்து, குடும்ப வாழ்வில் தனித்து வெறுப்புடன் வாழ்கின்றனர். சற்று 'சத்தத்தையும், சீற்றத்தையும்' குறையுங்கள். இனிமையான இளந்தென்றல் வாழ்வில் வலம் வரும்!
இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள்.
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம்
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
Comments
Post a Comment