பாராட்டு மழை
மாணவ மாணவியருக்கான counselling கூடுகை நடத்தச் சென்றிருந்தேன். மாணவர்கள் எல்லாரும் அமைதியாக உட்கார்ந்திருந்தனர். அவர்கள் எல்லாரையும் ஒரு வெள்ளை பேப்பரை எடுத்து அதன் மீது அவர்கள் பெயரை மட்டும் எழுதச் சொன்னேன். பின்னர் அந்த பேப்பரை அடுத்து இருப்பவர்களிடம் கொடுக்கச் சொல்லிவிட்டு ஒரு condition யை மட்டும் கூறினேன்.
நீங்களெல்லாம் மேலே குறிப்பிட்ட உங்கள் சக மாணவனிடம் காணப்பட்ட நல்ல குணம் ஒன்றை மட்டும் நீங்கள் எழுத வேண்டும். எந்த காரணத்தைக் கொண்டும் Negative ஆக எழுதக் கூடாது என்று கூறி, Start என்றேன்.
Class பரபரப்பானது. நான் என்ன எழுத என்று யோசித்துக் கொண்டு எழுத ஆரம்பித்தனர். அமைதியாக தூங்கி வழிந்த Class இப்போது தீப்பொறிப் போன்று மகிழ்ச்சி பரவ ஆரம்பித்தது. அனைவரும் உற்சாகத்துடன் எழுத ஆரம்பித்தனர்.
பத்து நிமிடத்தில் அந்த பேப்பர் அவரவர் கைக்கு வந்து சேர்ந்தது. அதை எடுத்துப் பார்த்த உடன் ஒவ்வொருவருக்கும் Surprise ஆக இருந்தது. நானா இப்படி இருந்திருக்கிறேன் என்று உற்சாகத்தில் குதுகலித்தனர்.
சில மாணவர்களுக்கு தங்களிடம் இப்படிப்பட்ட நல்ல குணம் இருக்கிறதை அவர்களே அறியவில்லை என்று மகிழ்ச்சிப் பொங்க கூறினர்.
ஒருவரிடம் உள்ள நல்ல குணங்களை நாம் சொல்லி உற்சாகப்படுத்தினால், பாராட்டினால் அவர்கள் அடைகிற மகிழ்ச்சி என்பது அளவில்லாமல் இருக்கிறது. இதைப் போன்று தான் குடும்ப வாழ்வில் கணவன், மனைவி, பிள்ளைகள் எல்லாருமே பாராட்டி உற்சாகப்படுத்தி பழக வேண்டும்.
புதிதாக திருமணமான பெண்கள் கணவனுக்கு முன்பாக தனக்கு நன்றாக சமைக்கத் தெரியும் என்றுக் காட்டிக் கொள்வதற்காக தனக்குத் தெரிந்த Youtube சமையலை செய்து அசத்துவர். ஆனால் உறைப்பு, உப்பு அளவு என்பது அனுபவக்குறைவில் ஏறிப் போய் கண்களிலிருந்து கண்ணீர் வடிய வைக்கலாம். அதை ஆனந்த கண்ணீராக நினைத்துக் கொள்ளுங்கள். கண்கள் கலங்கி கலங்கி சாப்பிட்டு விட்டு super என்று சொல்லிவிட்டால் பெண்கள் அடையும் மகிழ்ச்சி அளவில்லாமல் இருக்கும். பின்பு அவர்கள் சாப்பிடும் போது உள்ள உறைப்பை, உப்பைப் பார்த்து வாயில் வைக்க முடியவில்லையே என்று உணர்ந்து காலப்போக்கில் சரி செய்துக் கொள்வார்கள். இப்படிப் பாராட்டுவதை விட்டு விட்டு ஏசி, பேசி விட்டால் காலம் முழுவதும் உங்களுக்கு கடைச் சாப்பாடு தான் கிடைக்கும்.
சிறிய சிறிய விஷயத்திலும் பாராட்டிப் பழகுங்கள். Psychologist பாராட்டைப் பற்றிக் கூறும் போது "திருமண உறவின் சந்தோஷத்துக்கான சாவியே பாராட்டு தான் என்கின்றனர்". அப்படி இருக்கும் போது சாவியைத் துலைத்து விட்டு மகிழ்ச்சி என்ற பூட்டை திறக்க முடியுமா? முடியாது எனவே தான் பலர் முட்டி மோதி மண்டையை உடைத்துக் கொள்ளுகின்றனர்.
ஆண்டவரே சில வேளைகளில் மனிதனைப் பாராட்டுகிறார். மோசே என் வீட்டில் எங்கும் உண்மையுள்ளவன் என்றும், தாவீதை இதயத்துக்கு பிரியமானதையெல்லாம் செய்வான் என்றும் புகழுகிறார். ஆனால் நாமோ நீங்க குடும்பம் நடத்துவதற்கே தகுதியற்றவன் என்றும், பொறுப்பே இல்லாத மனுஷன் என்றும், உங்களுக்கு குடும்பம் என்ற ஒன்றே தேவையில்லை என்றும் எதிர்மறையாகப் பாராட்டினால் அன்பு வளருவதற்கு பதிலாக தேய்ந்துக் கொண்டே போய் விடும்.
சரி, இப்பொழுதே உங்கள் மனைவி அல்லது கணவன் அல்லது பிள்ளைகளை கொஞ்சம் பாராட்டித்தான் பாருங்களேன்! அவங்க ரீ ஆக்சன் எப்படி இருக்கிறது என்று!!
இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள்.
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
Comments
Post a Comment