இருளான முடிவுகள்

 

"மரணமும், மனிதனும்" என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுத விரும்பினார் இத்தாலியில் உள்ள ஒரு எழுத்தாளர். இந்த புத்தகத்தின் மூலமாக மிகவும் பிரபலமாக வேண்டும் என்று விரும்பினார். அறிய பல தகவல்களை மரணத்தைப் பற்றி குறிப்பிட விரும்பினார். எனவே மரணத்தை ருசி பார்த்தால் தான் அது எப்படிப்பட்டது என்று எழுத முடியும் என எண்ணி ஒரு கையில் பேனாவையும், மற்றொரு கையில் விஷத்தையும் வைத்துக் கொண்டார்.

கையில் வைத்திருந்த விஷத்தை கொஞ்சம் கொஞ்சமாக அருந்திக் கொண்டே பேனாவிற்கு வேலையைக் கொடுத்தார். அவர் மரணத்தின் வாயிலுக்குள் நுழையும் போது அதாவது எழுதிக் கொண்டிருந்தவரின் கடைசி வரிகள் இவ்வாறாக அமைந்தது. "Everything is dark" (எல்லாமே இருளாக இருக்கிறது) என்பது தான்.

இன்று தங்கள் மரணத்தின் மூலமாக பெற்றோருக்கு அல்லது தான் தண்டிக்க விரும்புகிறவர்களுக்கு ஒரு பாடத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். எனவே கடைசி நேரத்தில் உள்ளம் உருக கடிதம் எழுதுகின்றனர். யார் யாரெல்லாம் தன் மரணத்திற்காக வருந்துவார்களோ அவர்களிடம் மன்னிப்புக் கேட்பதும், யார் யார் தனது மரணத்திற்கு காரணமென்றும் எழுதி வைத்து விட்டு மரணத்தை தாங்களாகவே வருவித்துக் கொள்ளுகின்றனர்.

ஒருவர் இளம்வயதில் மரணத்தை தாங்களாகவே வருவித்துக் கொள்ளும்போது அந்த குடும்பத்தின் மக்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி விடுகின்றனர். சில பெற்றோர் வாழ்வின் கடைசி வரையிலும் நடை பிணங்களாகவே மாறி விடுகின்றனர்.

தண்டிக்கப்பட வேண்டியவர்கள் பட்டியலை குறிப்பிட்டு தற்கொலைச் செய்துக் கொள்பவர்கள் உண்மையிலேயே உலகிலே நேரடியாக எதிர்த்து போராடி வெல்வதே சிறந்த முடிவாக இருக்க முடியும்

தற்க்கொலைச் செய்யும் அளவிற்கு ஒருவர் செல்கிறார் என்றால் நிச்சயமாக நண்பர்களுடன் அதை ஏதாவது ஒரு விதத்தில் பகிர்ந்துக் கொள்ளாமல் இருக்க மாட்டார்கள்.

மைக்கேல் ஜாக்சன் போதை பழக்கம் உள்ளவர். ஆனால் இறந்த அன்று இரவு அளவுக்கு அதிகமாக (Propofol) "புரபொபோல்" என்ற மயக்க மருந்தை எடுத்துக் கொண்டார். இந்த மருந்தானது அறுவை சிகிச்சைக்குப் போகும் முன் நோயாளிகள் மயக்க நிலைக்குச் செல்ல பயன்படுத்துவது. இந்த மருந்தை ஜாக்சனின் வற்புறுத்தலால் கொன்ராட் முரே (Conrard Murray) என்ற மருத்துவர் தான் அவருக்கு செலுத்தியுள்ளார். நிச்சயமாக இந்த மருந்துடைய தன்மைகளை மருத்துவர் நன்றாக அறிந்திருப்பார். இருப்பினும் மைக்கேல் ஜாக்சனை சரியான வழிக்கு அவர் அழைத்துச் செல்லவில்லை.

தற்கொலைக்கு முன்பாக இருக்கும் ஏக்கம், தனிமையுணர்வு, எரிச்சல், நிறைவின்மை, பழிவாங்கும் உணர்வு, வெறுமையான நிலை எல்லாவற்றையும் அருகில் இருப்பவர்களிடம் நிச்சயமாக அவர்கள் ஏதோ ஒரு வகையில் வெளிப்படுத்திக் கொண்டு தான் இருக்கிறார்கள். குடும்ப அங்கத்தினர்கள், நண்பர்கள், எல்லாம் இதனை சாதாரணமானதாக எடுத்துக் கொள்வதால் தான் தற்கொலைக்கு முயல்பவர்களை தடுக்க இயலாமல் போய் விடுகிறது.    

திருமறையில் அகித்தோப்பேல் தற்கொலைச் செய்வதற்கு முன் தன் வீட்டுக் காரியங்களை ஒழுங்குபடுத்தினான் என்று திருமறை கூறுகிறது (2 சாமுவேல் 17:23). அப்பொழுது அவன் வீட்டார் அதனை seriousஆக எடுத்துக் கொள்ளவில்லை. ஏன் இப்படிப் பேசுகிறார் என்பதை கவனிக்கவில்லை. தன் கடமைகள் நிறைவுற்றது போன்று பேசும் போதே அவர்கள் மன நிலையிலே ஒரு முடிவுக்கு வந்து விட்டனர் என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும்.      

அகித்தோப்பேல் நல்ல ஆலோசனைக்காரனாகக் காணப்பட்டாலும் அவன் தவறான முடிவுகளை எடுத்த போது அவனுக்கு ஆலோசனைச் சொல்வதற்கு ஆட்கள் இல்லாமல் போய் விட்டார்கள். இது ஒரு சிக்கலான சூழல் தான்.

சில வேளைகளில் கர்த்தரின் சமூகம் தான் நமக்கு நம்பிக்கையளிக்கிறது. தவறான முடிவுகளை எடுப்பதை தவிர்க்கவும் உதவுகிறது.

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் :  என் ரூபவதியே
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

புத்தியுள்ள மனைவி

உண்மையை உரக்க சொல்வோம்