கோபம் ஒரு நிமிடம்

 

கப்பல் பயணத்தில் காந்தியடிகள் அமர்ந்திருந்தார். அந்த கப்பலில் பல நாட்டு மக்களும் அமர்ந்திருந்தனர். காந்தியடிகளை வெறுக்கிற ஒரு வெள்ளையரும் அந்த கப்பலில் பயணம் மேற்கொண்டார்.

கப்பல் சென்றுக் கொண்டிருந்த போது அந்த வெள்ளைக்காரன் மோசமான வார்த்தைகளால் வருணித்து எழுதிய ஒரு கடிதத்தை காந்தியடிகளிடம் கொடுத்தார். அதை வாசித்துப் பார்த்து விட்டு அதனை கடலில் வீசி விட்டார் காந்தி. அவன் பேப்பருடன் இணைத்திருந்த குண்டு ஊசியை மட்டும் எடுத்துக் கொண்டார்.

மீண்டும் அடிக்கடி வந்து பேப்பரில் எழுதிக் கொடுத்துக் கொண்டே இருந்தான். கப்பல் பயணம் முடியும் போது மீண்டும் காந்தியைப் பார்த்து, "நான் எழுதிக் கொடுத்தது உங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததா?" என்றான்.

இருந்தது! உங்கள் குண்டுசி" என்றார் காந்தி. அவன் திரும்ப திரும்ப கொடுத்த பேப்பர்களை அவர் வாசிக்கவேயில்லை, மாறாக அவன் பேப்பர்களை இணைப்பதற்காக பயன்படுத்திய குண்டுசியை மட்டும் எடுத்து விட்டு கடலிலே வீசி விட்டார்.

வாழ்க்கை பயணத்திலும் கணவன், மனைவியாக பயணிக்கும் போது கணவன் அல்லது மனைவி பயன்படுத்தும் தடித்த வார்த்தைகளை காதில் போட்டுக் கொள்ளாமல் நல்ல விசயங்களை மட்டும் மனதில் தேக்கி வைக்க பழகிக் கொள்ள வேண்டும்.

என்றோ ஒரு நாள் பேசிய வார்த்தைகளை மனதில் வைத்துக் கொண்டே வாழ்ந்தால் அவைகள் நமக்கு பாரமாக மாறிவிடும்.

பிறரிடம் உள்ள நல்ல குணங்களை மட்டும் நாம் மனதில் வைத்து பழகிக் கொள்ள வேண்டும். அப்படி வாழ்ந்தால் மட்டுமே உறவுகள் நீடிக்கும்

"இனிய நாவு எலும்பையும் நொறுக்கும்" (நீதிமொழிகள் 25:15) "பட்டயக் குத்துகள் போல் பேசுகிறவர்களும் உண்டு; ஞானமுள்ளவர்களுடைய நாவோ ஒளஷதம்" (நீதிமொழிகள் 12:18) என்று திருமறை கூறுகிறது. இனிமையாக பேசுகிறவர்களும் உண்டு, பிறரை துன்பப்படுத்தும் வகையில் பேசுகிறவர்களும் உண்டு. அதே வேளையில் சிலர் சில சூழல்களில் இனிமையாக பேசுவர். சிக்கல்கள் வரும் போது கோபத்தில் கடினமான வார்த்தைகளை கொப்பளித்துவிடுவர். இவ்வாறு கடினமான வார்த்தைகள் அம்பு போல் நம் உள்ளத்தை தைக்கும் போது உடனடியாக இப்படிப்பட்ட மனஷனோடே அல்லது பெண்ணோடே வாழ்வது வீண் என்று முடிவு எடுத்து விடக் கூடாது.

சிலர் கடினமான வார்த்தைகளை மையமாகக் கொண்டே divorce க்குப் போகிறார்கள். முடிந்த அளவு கடினமான வார்த்தைகளை ஒருவர் பேச முனையும் போது அந்த இடத்தை விட்டு பொறுமையாக காலி செய்து விட வேண்டும். வழியில்லாத பட்சத்தில் பாத்ரூமில் போய் தண்ணீரை திறந்து விட்டு சிறு குளியல் போட்டு விடுங்கள். அவர் பேசுவது உங்கள் காதுகளில் விழாது. அரை மணி நேரம் கழித்து வந்தால் அவர்கள் கோபம் தணிந்து இருக்கும்.     

இன்னும் கோபம் தனியவில்லையா அருகில் உள்ள ஆலயத்திற்கு சென்று ஒரு மணி நேரம் அமைதியுடன் உட்கார்ந்து விட்டு வாருங்கள். அது உங்களுடைய மனதிற்கு இதமானதாகவும், உள்ளத்தை குளிர பண்ணுகிறதாகவும் இருக்கும். டென்சன் உங்களுக்கும் குறைந்து விடும். அதே வேளையில் சண்டையிடும் உங்கள் கணவரும் அல்லது மனைவியும் தனியாக சண்டைப் போட முடியாமல் சண்டையை முடித்துக் கொள்வார்கள். 

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் :  என் ரூபவதியே
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

Comments

Popular posts from this blog

கலாச்சார நீரோடையில் அடித்துச் செல்லப்படும் திருச்சபை

நற்கிரியை செய்யும் பெண்

கவர்ச்சியா? கண்ணியமா?