குற்றம் பார்க்கின்...


ஒரு வயதான தாயாருடைய வீட்டிற்கு நான் செல்லும் போதெல்லாம் தன் மருமகளைப் பற்றி ஏதாவது ஒரு குறையைச் சொல்லுவார்கள். எனக்கே ஆச்சரியமாக இருக்கும்! எப்படி ஒவ்வொரு முறையும் நான் போகும் போதெல்லாம் ஒரு குறையை சரியாக சொல்வதற்கென்று வைத்திருக்கிறார்கள் என்று!!

இளம் வயது பெண்கள் அதிகமாக வேலைப் பார்க்கும் இடங்களில் மாமியார் பற்றி தான் உரையாடல் மற்றும் பட்டி மன்றம் நடக்கும். என் மாமியாரைக் காட்டிலும் உன் மாமியார் பரவாயில்லை என்று பேசிக் கொள்வர். வயதானவர்கள் ஓன்று கூட வாய்ப்பு வரும் போது மருமகள் பற்றிய கருத்துரையாடல் தான் அதிகமாக இடம் பெறும்.  

மனிதர்கள் பிறர் குற்றத்தைப் பற்றி பேசியே தங்கள் காலங்களை வீணடிக்கின்றனர். பிறரின் நிறைகளைப் பார்த்து மெச்சுவது இல்லை. ஆசிரியர்கள் பிள்ளைகளின் நிறைவுகளைக் காணாமல், குற்றங்களை பார்த்துப் பார்த்து டென்சன் ஆகிக் கொண்டே இருக்கிறார்கள். அப்படியே மாணவர்கள் ஆசிரியர்களின் முயற்சிகளைக் கண்டு சந்தோஷப்படாமல், குற்றங் கண்டு பிடித்து கசப்பு உணர்வுகளையே வளர்த்துக் கொள்ளுகிறார்கள்.

ஒரு மளிகைக் கடைகாரர் இருந்தார். அவர் மிகவும் நல்லவர். மக்கள் தாங்கள் விரும்பிய படி காய்கறி, பழங்களை எடுத்துக் கொள்ள விட்டு விடுவார். தராசில் நிறுக்கப்பட்ட பின்பும் கூட ஒரு பழம் போடுங்கள் என்று எடுத்துப் போட்டுக் கொள்வார்கள். அதற்கு ஒரு எதிர்ப்பும் தெரிவிக்க மாட்டார்.

சில வேளைகளில் கிழிந்த ரூபாய் நோட்டுகளை நல்ல பணத்துடன் வைத்து அவரிடம் தள்ளி விடுவர். அவர் அதைப் பார்த்தாலும் ஒன்றும் எதிர் பேசாமல் கிழிந்த ரூபாய் நோட்டுகளை வாங்கி வைத்துக் கொள்வார்.

இவரின் குணத்தைப் பார்த்த சிலர் வேறு எங்காவது தேங்காய், முட்டை வாங்கியது கெட்டுப் போயிருந்தாலும் அதனை இவரிடம் திருப்பிக் கொடுத்து, உங்கள் கடையில் வாங்கியது தான் என்று நல்ல தேங்காய், முட்டையை வாங்கி சென்று விடுவர்.

இவருடைய நல்ல குணத்தை சிலர் பகடிபண்ணினர்! முட்டாள் என்று விமர்சித்தனர்!!   அவருக்கு வயதாகியது, கடைக்கு வர முடியவில்லை. அப்பொழுது படுத்துக் கொண்டே ஒரு ஜெபத்தை செய்தார்.

"ஆண்டவரே நான் மக்கள் கொடுத்த கிழிந்த ரூபாய் நோட்டுகளை வாங்கிக் கொண்டேன். அதை நான் தூக்கி எரிந்து விடவில்லை, நிராகரிக்கவுமில்லை. அது போல் நானும் உம்முடைய பார்வையில் மதிப்பற்ற கிழிந்த ரூபாய் போன்றவன் தான். உம் மக்களை நான் எப்படி ஏற்றுக் கொண்டேனோ அதைப் போல் என்னை ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்றார்.

மற்றவர்களை குற்றவாளி என்று நியாயம் தீர்க்காதிருங்கள் என்று இயேசு கிறிஸ்து கூறுகிறார். நம் கண்ணில் உத்திரத்தை வைத்துக் கொண்டு, பிறருடைய கண்களில் உள்ள தூசியை எடுத்துப் போடட்டுமா? என்று கேட்டுக் கொண்டு அலைகிறோம். 

பிறரை குற்றவாளி என்று தீர்ப்பதும், Prejudgment செய்வதும் இன்று பலரின் குணமாகவே உள்ளது. ஆனால் நிறைகளைப் பார்க்கப் பழகினால் குறைகள் பெரிதாக தெரிவதில்லை. நம்முடைய பிள்ளைகள் எவ்வளவு தவறு செய்தாலும் நல்ல காரியங்களை அவர்கள் செய்யும் போது உற்சாகப்படுத்தினால், நாளடைவில் நல்ல பண்புகளை வளர்த்துக் கொள்ளும் மனப்பக்குவத்தை அவர்கள் பெற்றுக்கொள்வர். அதை விட்டு குறையே கூறிக் கொண்டிருந்தால் பெற்றோரை வெறுக்க ஆரம்பித்து விடுவர்.

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் :  என் ரூபவதியே
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

புத்தியுள்ள மனைவி

உண்மையை உரக்க சொல்வோம்