எது முக்கியம்?

 

வரலாற்று ஆசிரியர் வகுப்பறையில் உள்ள மாணவர்களிடம் கேள்விக் கேட்டுக் கொண்டே வந்தார். ஒரு மாணவனிடம், "வாட்டர்லூ என்ற இடத்தில் எந்த ஆண்டு பிரிட்டிஷ்காரர்கள் பிரஞ்சுகாரர்களை தோற்கடித்தார்கள்?" என்ற கேள்வியை முன்வைத்தார்?

மாணவன், "சரியாகத் தெரியவில்லை" என்று பதிலை சடார் என்று போட்டான்.

ஆசிரியர் தன்னுடைய பாணியிலேயே, "சரியாகத் தெரியவில்லையா அல்லது படிக்கவில்லையா?" என்று துருவினார்.

மாணவன் உண்மையை ஒத்துக் கொண்டு, "படிக்கவில்லை" என்றான்.

ஏன் படிக்கவில்லை?

எனக்கு அது முக்கியமானதாக தெரியவில்லை!

அப்படியா? அப்படியென்றால் உனக்கு எது முக்கியமானது?

"என்னைப் பொருத்தவரையில் யார், யாரை, எப்பொழுது வென்றார்கள் என்பது முக்கியமல்ல. இதை எப்பொழுது பார்க்க வேண்டுமென்றாலும் புத்தகத்தை புரட்டிப் பார்த்துக் கொள்ளலாம். ஆனால் ஏன் ஒரு நாட்டினர் மீது மற்றொரு நாட்டினர் போர் தொடுத்தனர்? இந்த அழிவுக்கு காரணம் என்ன? என்பதற்கான பதில்களை கண்டுபிடிப்பதே தேவை என்பதை உணருகிறேன்" என்றான் அந்த இளம் மாணவன் ஐன்ஸ்டீன். இப்படி படிப்பதில் கூட எது முக்கியம்? எது வாழ்வோடு சம்பந்தப்பட்டது? என்று சிந்திக்கிற சிந்தனையானது முளையிலேயே சிறு வயதிலேயே வெளிப்பட்டதால் தான், இரண்டாம் உலகப் போரில் அணுகுண்டுகள் பயன்படுத்தப்பட்டு விடக்கூடாது என்று அங்கலாய்த்தார்.    அறிவியல் கூட ஆக்கப்பூர்வமானதற்கு பயன்படுத்தப்பட வேண்டும் என்ற விருப்பம் உடையவராக இருந்தார் ஐன்ஸ்டீன்.

இளம் வயது மாணவர்களுக்குள்ளும் இப்படிப்பட்ட சிந்தனைகள் வளர வேண்டும். நம்முடைய உடலாலும், உள்ளத்தாலும், அறிவினாலும், ஞானத்தினாலும் இந்த உலகத்தில் வாழும் வரை அனேகர் பயன்படும் அளவிற்கு நமது வாழ்க்கை அமைய வேண்டும். அதே நோக்கில் தான் நம்முடைய வாழ்க்கையை நகர்த்திக் கொண்டே செல்ல வேண்டும்.    

மாணவர்கள் பலர் படிப்பை select பண்ணும் போதே இந்த படிப்பை முடித்தால்  நான் எவ்வளவு சம்பளம் வாங்குவேன்? எனக்கு எவ்வளவு வருமானம் வரும்? என்று கணக்கு போட்டுத்தான் கனக்குப் பாடத்தையே தேர்வுச் செய்கின்றனர்

இந்த உலகத்தில் வாழும் வரை நன்றாக வாழ வேண்டும் என்ற குறுகிய மனப்பான்மையோடு மட்டும் வாழாமல் இந்த உலகம் இருக்கும் வரையிலும் நாம் மக்களின் உள்ளத்தில் வாழ வேண்டும் என்ற சிந்தையை நமக்குள் இருத்தி வைக்க வேண்டும்.

எத்தனையோ தலைவர்கள் இந்திய மண்ணிலே தோன்றி மறைந்துள்ளனர். ஆனால் சில தலைவர்கள் மட்டும் இன்னும் மக்களின் உள்ளத்தில் காலங்காலமாக நிலைத்து நிற்கிறார்கள். காரணம் தங்களுக்காக மட்டும் வாழாமல் பரந்த சிந்தனையோடு வாழ்வதற்கு கற்றுக் கொண்டார்கள். ஆகவே காலத்தால் அழிக்க முடியாதவர்களாக மாறி விட்டனர். ஆடுகள், மாடுகள், பறவைகள் கூட தனக்காக உணவை சாப்பிடுகிறது. தனக்காகவே வாழ்ந்து முடித்துக் கொள்கிறது. ஆனால் மனிதர்களாகிய நாம் "அவனவனுக்கானவைகளை மாத்திரமல்ல பிறனுக்கானவைகளையும் நோக்குகிறவனாக" வாழ திருமறை நமக்கு அழைப்புக் கொடுக்கிறது. நாம் பறவைகளைக் காட்டிலும் விஷேசித்தவர்களாக படைக்கப்பட்டுள்ளோம். ஆபத்தில் உதவுவதற்கே சகோதரன் பிறந்திருக்கிறான் என்பதையும் மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள்.

ரஷ்யா, உக்கிரைன் போர் நிகழ்ந்துக் கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் ஏன் இந்த அழிவு? என்று யோசித்து மனுக்குலம் வாழ்வதற்கான வழிகளைத் தேடுவது மிகவும் அவசியமான ஓன்று.     

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் :  என் ரூபவதியே
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

புத்தியுள்ள மனைவி

உண்மையை உரக்க சொல்வோம்