அப்பாவின் செல்லமான ஏஞ்சல்கள்

 

ஹேனா அப்பாவின் கையைப் பிடித்துக் கொண்டே எப்பொழுதும் அலைவாள். அவள் கேட்டதை எல்லாம் அப்பா வாங்கிக் கொடுத்து விடுவார். அவள் அழுதுவிட்டால் அவருடைய மனம் உடைந்து விடும். நிம்மதியே போனதைப் போல் உணருவார். அந்த அளவிற்கு அப்பாவும் மகளும் சதையும், நகமுமாக இருந்தனர்.

ஹேனாவின் கையில் உள்ள ஆப்பிள் போனின் விலை  எழுபதாயிரம், கையில் உள்ள வாட்சின் விலை 30 ஆயிரம், உடைக்கேற்ற எடுப்பான சப்பல்களை விதவிதமாக அணிவாள், Branded Dressயை தான் உடுத்துவாள். சின்னத்திரையில் வரும் நடிகைகள் பயன்படுத்தும் அணிகலன்களையெல்லாம் அடம்பிடித்து அப்பாவிடம் வாங்கி விடுவாள். அவரைப் பொருத்தவரையில் அவள் அவருக்கு ஒரு ஏஞ்சல் போன்றவள்.

அன்று கல்லூரிக்குச் சென்றவள் திரும்பி வரவில்லை. அவள் இரகசியமாக விரும்பிய ஜூலியஸ் உடன் இரகசிய திருமணம் செய்துக் கொண்டு அப்பாவுக்கு WhatsAppல் Sorry Daddy, புதுவாழ்வு வாழப்போகிறேன் என்று Message மட்டும் அனுப்பி வைத்து விட்டு, bye போட்டு முடித்திருந்தாள்.

ஜூலியஸ் வேலைப் பார்க்காத, வெட்டிப் பந்தா. காதலுக்கு பணம் முக்கியமில்லை. அன்பு தான் முக்கியம் என்று ஹேனா தன் மாணவிகளுடன் பட்டிமன்றம் நடத்துபவள்.

அன்று Valentine's Day, ஜூலியஸ் என்ன surprise கொடுக்கப் போகிறான் என்று எதிர்பார்த்தாள். காலையில் இருந்து மாலை வரை காத்திருந்தவளுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. அதைத் தொடர்ந்து பெண்கள் தினம் வந்தது. காத்திருந்தாள் surprise Giftக்காக! அதுவும் இலவு காத்த கிளி போல் மாறியது. முன்பெல்லாம் அப்பாவின் பணத்தில் எப்பொழுதும் restaurantல் உட்கார்ந்து சாப்பிட்டு அரட்டை அடிப்பாள் ஜூலியஸ் உடன்! ஆனால் ஜூலியஸ் அந்த restaurant பக்கமே இப்பொழுது போகாமல் பார்த்துக் கொண்டான். ஹேனாவின் Birthday வந்தது. Dress எடுக்க அழைத்து சென்றவன், சாதாரண துணிக்கடையில் கொண்டு விட்டான். அந்த கடைகளிலெல்லாம் Branded Dress என்பது கிடையாது என அவளுக்குத் தெரியும். இதையெல்லாம் தாங்க முடியாமல் ஹேனாவிற்கு கோபம் கொப்பளித்துக் கொண்டு வந்தது. ஏண்டா நீ எல்லாம் ஒரு மனுஷனா? பொண்டாட்டிக்கு நல்ல dress எடுத்துக் கொடுக்க வழியில்லாதவன் ஏண்டா என்னை love பண்ணினே என்று போட்டு உடைத்தாள்.

ஜூலியஸ் அதிர்ந்துப் போய், விழி பிதுங்கி நின்றான். காதல் காதல் என்று பணம், அந்தஸ்து, வேலை எதுவும் தேவையில்லை என்று வந்த அவள் மண் குதிரை என்ற ஜூலியஸை நம்பி, வாழ்க்கை என்ற ஆற்றில் தெரியாமல் குதித்து விட்டோமே என்று தேம்பி தேம்பி அழுதாள். பலர் வேடிக்கைப்பார்க்க ஆரம்பித்தனர்.

எதிர்பாராமல் துணிக்கடையின் முன் அழுதுக் கொண்டிருந்த ஹேனா முன் ஒரு Car வந்து நின்றது. அதில் இருந்து ஒருவர் இறங்கி ஹேனா உங்க Daddy கொடுத்தாங்க என்று பார்சல் ஒன்றை கையில் திணித்து விட்டு கார் கண் இமைக்கும் நேரத்தில் மறைந்தது. Wish u a Happy Birth Day by loving Daddy என்று குறிப்பிட்டிருந்தது.

திருமண வாழ்க்கை என்பது கடற்கரையில் உள்ள மண்ணைக் கொண்டு கட்டி விளையாடும் விளையாட்டல்ல. குடும்பமானால் தங்குவதற்கு வீடு வேண்டும், இல்லையென்றால் வீட்டு வாடகைக் கொடுக்க பணம் வேண்டும், மளிகை பொருள்கள், காய்கறிகள் தினமும் வாங்கிக் கொடுக்க வேண்டும். பண்டிகை நாட்கள், பிறந்த நாள், திருமண நாள் போன்றவற்றிற்கு ஆடைகள் வாங்க வேண்டும். குடும்ப விசேஷங்களில் கலந்துக் கொண்டு நம் பங்குக்கு மொய் பணம், பொருள் கொடுக்க வேண்டும். வேலையில்லாமல், பணம் இல்லாமல் குடும்பத்தை நடத்த முடியாது.

உளவியல் நிபுணர்கள் கருத்து என்னவென்றால் "ஒருவர் தன்னுடைய நிதிநிலையில் எந்த அளவுக்கு பாதுகாப்பான உணர்வில் இருக்கிறாரோ அந்த அளவுக்கு தன்னுடைய தனிப்பட்ட உறவுகளுக்கும் பாதுகாப்பான உணர்வை தருவார்கள்" என்கின்றனர்.

ஆகவே தான் arranged marriage  நடக்கும் முன் பலர் கேட்கிற கேள்வி உங்கள் மகன் என்ன வேலைப் பார்க்கிறார்? நிரந்தரமா? அல்லது தற்காலிகமா? அரசுப்பணியா? அல்லது தனியார் நிறுவனமா? மாத சம்பளம் எவ்வளவு? நிலம், வீடு உண்டா? நம்ம பிள்ளையை கண்கலங்காமல் பார்த்துக் கொள்ள தகுதியிருக்கிறதா? என்று அலசி ஆராய்ந்து திருமணத்திற்கு சம்மதிக்கின்றனர்.

திருமறையில் ஆபிரகாமின் மகனாகிய ஈசாக்குக்கு திருமண வரன் பார்க்கும் போது ஆபிரகாமின் ஊழியக்காரன் பெண் வீட்டாரிடம் ஈசாக்கின் பொருளாதார நிலைமைக் குறித்து "கர்த்தர் என் எஜமானை மிகவும் ஆசிர்வதித்திருக்கிறார். அவர் சீமானாயிருக்கிறார். கர்த்தர் அவருக்கு ஆடுமாடுகளையும், வெள்ளியையும், பொன்னையும், வேலைக்காரரையும், வேலைக்காரிகளையும், ஓட்டங்கங்களையும், கழுதைகளையும் கொடுத்திருக்கிறார்" (ஆதியாகமம் 24:35) என விளக்குகிறார். உங்கள் வீட்டு பெண் எங்கள் வீட்டில் கஷ்டப்பட வேண்டியதில்லை என்பதை குறிப்பாக உணர்த்துகிறார்.

வேலையே பார்க்காமல் குடும்பத்தை நடத்த முடியாது என்பதை சில இளைஞர்கள், இளம் பெண்கள் உணராததற்கு காரணம் பெற்றோர்களின் அளவுக்கு மிஞ்சிய செல்லம் தான்! கேட்பதையெல்லாம் கொடுக்கும் பணம் காய்க்கும் மரமாக பெற்றோரைப் பார்த்து வளரும் சில பிள்ளைகள் வாழ்வின் உண்மை நிலையைப் புரிந்துக் கொள்வதே இல்லை. திருமணத்திற்கு பின்பும் யாராவது நமக்கு உழைத்து தருவார்கள் நாம் பைக்கில் ஏறி பட்டாம் பூச்சியாய் பறந்து கொண்டே அலையலாம் என்பது திரைப்படத்திற்குத் தான்  பொருந்துமேயன்றி நிஜவாழ்க்கைக்கு ஏற்புடையதல்ல.

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் :  என் ரூபவதியே
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

புத்தியுள்ள மனைவி

உண்மையை உரக்க சொல்வோம்