என் உடன்பிறப்பே!

ரஷ்யா, உக்கிரைன் போர் போன்று கணவன் மனைவி இடையே உச்சக்கட்டப் போர் நடந்தது. யாரிடம் சொல்லி என் கோபத்தைக் கட்டுப்படுத்துவது என்று Bright யோசித்துக் கொண்டே வந்தான். ஆலயத்தின் அருகே வந்த போது வாகனத்தை நிறுத்தி விட்டு மட மட வென்று ஆலயத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

போதகர் ஆலயத்தின் வாசலில் நின்றுக் கொண்டிருந்ததைப் பார்த்த Bright வணக்கம் சொல்லி விட்டு, "ஐயா ஒரு நிமிடம் உங்களிடம் பேச வேண்டும்" என்றான்.

வாங்க”, Bright என்று ஆலயத்திற்குள் இருந்த ஒரு அறைக்கு அழைத்துச் சென்றார் போதகர்.   

ஐயா, எனக்கு கோபம் அளவுக்கு அதிகமாக எப்பொழுதும் வந்து விடுகிறது. இதனால் மனைவி, பிள்ளைகள் எல்லாரையும் மிகத் தரக் குறைவாக பேசி, வீட்டில் உள்ள பொருள்களை வீசி எறிந்தும் என் கோபத்தை வெளிப்படுத்தி விடுகிறேன். “எனவே என் கோபத்தை எப்படியாவது கட்டுப்படுத்த வழி சொல்லுங்கள்” என்றார்.

போதகர், Brightயை பார்த்து, "அப்படியா? அந்த கோபத்தை என்னிடம் கொஞ்சம் காட்டினால் அதை போக்குவதற்கான வழிகளை உங்களுக்கு அழகாகச் சொல்லிவிடுவேன்” என்றார்.

Brightடிடம் அப்பொழுது கோபம் இல்லை. எனவே, "ஐயா என்னிடம் இப்பொழுது கோபம் இல்லை, எனவே அதை இப்பொழுது காட்ட முடியாது" என்றான்.

அப்படியென்றால் எப்பொழுது கோபம் உங்களிடம் இருக்கிறதோ அப்பொழுது என்னிடம் கொண்டு வந்துக் காட்டுங்கள். அப்பொழுது உங்களுக்கு வழிச் சொல்லுகிறேன் என்றார் போதகர்.

Brightக்கு என்னச் சொல்வதென்று தெரியாமல் ஐயா, "கோபம் எப்பொழுது வரும், எப்பொழுது போகும் என்று எனக்கேத் தெரியாது.   அப்படி இருக்கும் போது எப்படி அதைக் காட்ட முடியும்?" என்றான்

Bright மீது பிரிவுடன், "மகனே கோபம் திடீரென்று வந்து தீடீரென்று போகுமானால் நிச்சயமாக அது உன் குணம் அல்ல. எப்பொழுதும் உன்னோடே ஓட்டிக் கொண்டிருப்பது தான் உன் பிறவி குணம். உன்னுடைய கண், காது எல்லாம் உன்னோடு பிறந்தவைகள். அது எப்பொழுதும் உன்னோடே இருக்கும். ஆனால் கோபம் என்பது நீ பிறக்கும் போது உன்னோடு பிறக்கவில்லை. அது பின்னால் வந்து உன்னிடம் ஒட்டிக் கொண்டது. அது காலில் பட்ட சகதிப் போன்று கழுவி விட்டுப் போய் கொண்டே இருக்க வேண்டும்" என்றார்.

அனேகர் கோபம் எனது பிறவி குணம் அதை மாற்ற முடியாது என்று வீராப்பாய் பேசுவார்கள். அவர்கள் கோபத்தை அவர்களிலும் வலியவர்களிடம் காட்டக் கூறுங்கள்! அவர்களால் முடியாது. அங்கே அடக்கமாக இருந்துக் கொள்வார்கள்.  

மனைவி எதிர்த்து ஓன்றும் செய்துக் கொள்ள மாட்டாள் என்ற எண்ணம் வருவதினால் தானே அடித்து விடுகிறீர்கள். உங்களுக்கு கோபம் வந்தால், கோபப்படும் இடத்திலிருந்து வெளியேறி விடுங்கள். கோபத்தின் உச்சநிலை குறைந்து விடும்.

தாவீது தன் மகனாகிய அப்சலோமுக்கு பயந்து நாட்டை விட்டு வெளியேறும் போது சீமேயி என்பவன் தன் உக்கிரத்தை வெளிக்காட்டுவதற்கு இது தான் நேரம் என்று "இரத்தப் பிரியனே, தொலைந்து போ, தொலைந்துப் போ" என்று கற்களை வீசி எறிந்தான். (2சாமுவேல் 16:6-9) அவசரப்பட்டு தன் உக்கிரத்தை காட்டின சீமேயி பின்பு மனம் வருந்த வேண்டிய காலம் ஏற்பட்டது. (2சாமுவேல் 19:18-23)

கோபம், எரிச்சல் எல்லாவற்றையும் அளவுக்கு அதிகமாக வெளிப்படுத்தினால் வாழ்க்கை பிரச்சனைக்குறியதாக மாறிவிடும். நிதானமாக வாழ பழகிக் கொள்ள வேண்டும். இவையெல்லாம் நம்முடைய உடன் பிறப்புக்கள் அல்ல!

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் :  என் ரூபவதியே
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

புத்தியுள்ள மனைவி

உண்மையை உரக்க சொல்வோம்