நிதானம் தவறலாமா?
வாழ்க்கை என்பது மனிதனுக்கு ஒரே ஒரு முறைதான் வழங்கப்படுகிறது. அதனை எப்படி பயன்படுத்துகிறோம் என்பது அவரவரைப் பொறுத்தது. மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வதிலும், துக்கமாய் வைத்துக் கொள்வதிலும் நம்முடைய பங்கு இருக்கிறது என்பதை மறுக்க இயலாது.
ரஷ்யாவின் புகழ்பெற்ற எழுத்தாளர் ஃபியோதர் தஸ்தாயெவ்ஸ்கி. இவருடைய எழுத்துக்கள் மக்களிடையே நல்ல மாற்றங்களை உருவாக்க வல்லதாகக் காணப்பட்டது. நாளடைவில் இவருடைய எழுத்துக்கள் ரஷ்யா அரசாங்கத்தையே எதிர்ப்பதாக அமைந்தது. அத்தோடு மட்டுமல்லாமல் 16 பேர் அடங்கிய அவருடைய கூட்டம் கலகத்தை தூண்டி விடுபவர்களாகவும், அதிலே ஈடுபடுகிறவர்களாகவும் மாறினர்.
நிலைமை மோசமானபோது இந்த 16 பேரும் கைதுச் செய்யப்பட்டனர். இறுதியில் மரணத்தண்டனையும் பெற்றனர். தஸ்தாயெவ்ஸ்கி இதனை கொஞ்சம் கூட நினைத்துப் பார்க்கவில்லை. அதிர்ந்துப் போனார்.
மரண தண்டனை நிறைவேற்றுவதற்காக ஒரு பெரிய மைதானத்தில் நிறுத்தப்பட்டனர். அவர்களை சுட்டு சல்லடை ஆக்க இராணுவ வீரர்கள் பார்த்துக் கொண்டிருந்தனர்.
உள்ளம் அதிர்ந்து வேர்த்து வியத்துப் போன 16 பேரில் ஒருவன் மயங்கி விழுந்தான். இதனைப் பார்த்த இராணுவ வீரன் ஒருவன் ஓடி வந்து அவன் மீது தண்ணீர் தெளித்து எழுந்து நிற்கச் செய்தான். அவனைப் பார்த்து, "நீ மயங்கி விழுவதினால் சாவிலிருந்து தப்பிக்க முடியாது. மரணம் என்பது உங்களுக்கு உறுதி" என்றான்.
மீண்டும் round கட்ட ஆரம்பிக்கும் போது ஒரு ராணுவ வீரன் ஓடி வந்தான். ராணுவ அதிகாரியிடம் ஒரு பேப்பரை நீட்டினான். அதை வாசித்த போது 16 பேரின் மரண தண்டனையும் மாற்றப்பட்டு ஆயுள் தண்டனையாக குறைத்து எழுதப்பட்டிருந்தது. உடனே மரண தண்டனை நிறுத்தப்பட்டது.
தாஸ்தாயெவ்ஸ்கி முகங்குப்புற விழுந்து ரஷ்ய மன்னனை முத்தஞ்ச் செய்து விட்டு தனக்குள்ளே இவ்வாறு சொன்னான். “இந்த உலகத்தில் இன்னொரு முறை வாழ வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த வாழ்க்கை மகத்தானது, உயர்வானது, விலை மதிப்புமிக்கது. ஆனால் நான் வேற்றுமை உணர்வாலும், பகையினாலும், வெறுப்பினாலும், தரமற்ற செயலைச் செய்து இந்த உன்னதமான வாழ்க்கையை பாழ்படுத்தி, மற்றவர்களை துன்புறுத்தி விட்டேன். ஆனால் இனி நான் புது மனிதன். அன்பு செய்யும் மனிதன். இன்றோடு என் வாழ்க்கை மாறுகிறது" என்றார்.
குடும்ப வாழ்க்கையும் கடவுள் கொடுத்த வாய்ப்பு. இதனை சரியாக பயன்படுத்திக் கொண்டால் குட்டி பரலோகம். இல்லையென்றால் நரகம். பிள்ளைகள், மனைவி, கணவன், மாமியார், மாமனார், என அத்தனை உறவுகளும் இறைவன் கொடுத்த சொந்தங்கள். இவர்களை பகைத்து, உறவை பாழ்படுத்துவதினால் என்ன பயன்?
ஈசாக்கு, ரெபெக்காள் வாழ்க்கையில் பஞ்சத்தினால் ஏற்பட்ட இடற்பாடுகள், பிற மக்களால் நெருக்கங்கள் எல்லாம் வந்தது. ஆனால் ஈசாக்கு தன் மனைவியாகிய ரெபேக்காளுடன் மகிழ்ச்சியாகவே வாழ்ந்தான். மாலை வேளையில் தியானம் பண்ணச் சென்றான். இவ்வாறு இறைவனோடும், கடவுள் கொடுத்த துணையோடும் சரியானபடி நேரத்தை செலவிட்டு குதுகலமாக வாழ்ந்தான். வாழ்க்கையில் பதட்டங்கள் வந்தாலும், நிதானத்தை கடைபிடித்தான்.
இன்று மனைவி அல்லது கணவன் ஒருவரை ஒருவர் வேண்டாமென்று திடீரென்று விலக்கி விட்டு விட்டு தனியாக சந்தோஷமாக வாழ முற்படுகின்றனர். என்னால் தனித்து வாழ இயலும், எவ்வளவு சம்பளம் வாங்குகிறேன், நான் கூப்பிட்டால் என் நண்பர்கள் ஓடோடி வருவார்கள், ஒரு order போட்டால் சாப்பாடு வீட்டில் வந்து நிற்கும் என்று நினைத்து துணையை அற்பமாக எண்ணி நிதானமின்றி விரட்டி விடுகின்றனர்.
ஆனால் நாட்கள் போகும் போது தான் பணத்தினால் மனைவி/கணவனின் அன்பை விலைக் கொடுத்து வாங்க இயலாது என்பதை புரிந்துக் கொள்வர். மீண்டும் சேர்ந்து வாழ முடியாத அளவிற்கு சிலருக்கு ego வந்து ஆட்டிப்படைக்கிறது. சிலருக்கு Divorce அதற்குள் வந்து விடுகிறது.
சேர்ந்து வாழ்ந்தால் நன்றாக இருக்குமே என்று எண்ணியும் சேர்ந்த வாழ இயலாமல் போய் விடுகிறது. சண்டை வந்தால் உடனே வக்கீலை அணுகாமல் கர்த்தரை அணுகுங்கள். காவல் நிலையம் செல்லாமல் காக்கும் கர்த்தரை நோக்குங்கள்.
காலத்தின் மாற்றத்தாலும், கர்த்தரின் அருளாலும் மீண்டும் இணைய வாய்ப்பு உண்டு. நிதானத்தோடு முடிவெடுங்கள், காத்திருங்கள்!
இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள்.
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
Comments
Post a Comment