தலை சூடாகும் போது!


ரோஜர் திருமண வாழ்க்கை ஓகோ ஆகா என்று போகும் என்ற கனவோடு நுழைந்தான். ஸ்வீட்டியும் ரோஜரும் பொருத்தமான ஜோடிகள் என்று பார்த்தவர்களெல்லாரும் புகழத்தான் செய்தார்கள். நாட்கள் உருண்டோடிய போது பழைய களை இல்லாதவனாகவே ஆலயத்திற்கு வந்துச் சென்றான் ரோஜர். யாராவது என்ன ரோஜர் சோகமாக இருக்கிறாய் என்றால், "என்னச் சார் சொல்லுவது! பிரச்சனைகள் மனுஷனுக்கு வரலாம் ஆனால் வாழ்க்கையே பிரச்சனையாய் மாறிப் போய் விட்டால் என்னச் செய்வது?" என்று புலம்பித் தள்ளினான். ஒரு நாள் பிரச்சனையைத் தாங்கிக் கொள்ள முடியாமல் போதகரிடம் வந்து முறையிட்டான். ஐயா, என் வாழ்க்கையில் பிரச்சனை மேல் பிரச்சனை வந்துக் கொண்டே இருக்கிறது. எனவே என்னால் மகிழ்ச்சியாகவே வாழ முடியவில்லை என்று கண்கள் கலங்கி நின்றான்.

போதகருக்கு ரோஜரை சரிச் செய்ய ஒரு வழிமுறையை பின்பற்றினார். தன்னுடைய வீட்டிற்கு அழைத்து சென்று மூன்று பாத்திரங்களில் தண்ணீர் நிரப்பினார். ஒன்றில் உருளைக்கிழங்கைப் போட்டார், ஒன்றில் கோழி முட்டையைப் போட்டார், மற்றொன்றில் காபி தூளைப் போட்டார். மூன்று பாத்திரங்களையும் அடுப்பில் வைத்து விட்டுப் பேசிக் கொண்டிருந்தார்.   

கால் மணி நேரம் கழித்து ரோஜரை அழைத்து உருளைக் கிழங்கை தொட்டுப் பார்க்கக் கூறினார். அது நன்றாக வெந்து Soft ஆக மாறிவிட்டது. முட்டையைத் தொட்டுப் பார்க்க கூறினார் போதகர். "ஐயா இது கடினமாக இருக்கிறது" என்றார். காப்பி பாத்திரத்தை காட்டினார். காபி மணக்கிறது என்றான் ரோஜர்.

போதகர் இப்பொழுது ரோஜரைப் பார்த்து ரோஜர் குடும்ப வாழ்க்கையில் பிரச்சனை என்பது வரத்தான் செய்யும். சண்டை, மனஸ்தாபம், கோபம் இல்லாத குடும்பத்தைப் பார்ப்பது கடினம். ஆனால் ஒவ்வொருவரும் தங்கள் மனைவியை, கணவனை, பிள்ளைகளை அணுகுகிற முறையில் தான் வித்தியாசப்படுகிறது.

மனைவி, பிள்ளைகளை Soft ஆக அணுகி பிரச்சனையைச் சரி செய்யவும் முடியும், கடினமாக அணுகி ஊர் அறிய பிரச்சனையைப் பெரிதுபடுத்தவும் செய்யலாம். பிரச்சனை வந்தாலும் பிரச்சனையை மகிழ்ச்சியோடு சிரித்துக் கொண்டே விவேகமாக அணுகி ஊர் மணக்க வாழவும் செய்யலாம்!   எல்லாம் அவரவரைப் பொருத்தது தான்! என்றார்.    

வாழ்க்கையில் பிரச்சனைகள் வர வர அதை அணுகுகிற முறையிலே முதிர்ச்சி வரவேண்டும். பிரச்சனைகள் என்பது மனிதனையே பக்குவப்படுத்துகிறதாகவும் அமைகிறது. பிரச்சனையே இல்லாத மனிதன் யாரும் இல்லை!   

ஏழை குடும்பத்தில் பணத்தைக் கையாளுவதில் பிரச்சனை வரலாம், பணக்காரர்களுக்கு ஒருவருக்கொருவர் இசைவாய் போவதில் இடித்துக் கொள்ளலாம், கற்றவர்களுக்கு சம அந்தஸ்தில் பிரச்சனை வரலாம். ஆனால் பிரச்சனையே எனக்கு இல்லை என்று யாரும் சொல்வதில்லை என்றார்.    

ஆபிரகாமுக்கு ஆகார் நிமித்தம் சாராளிடம் பிரச்சனை, ஈசாக்குக்கு ரெபெக்காள் நிமித்தம் பிரச்சனை, யாக்கோபுக்கு ராகேலிடம் பிரச்சனை, தாவீதுக்கு மீகாள் நிமித்தம் பிரச்சனை, சாலமோனுக்கு மனைவிகள் இழுத்தப்படியெல்லாம் போக வேண்டிய பிரச்சனை, உலகத்தில் பிரச்சனை இல்லாத நபர் தான் யார்? எல்லாரும் பிரச்சனையோடே வாழ்ந்து பிரச்சனை இல்லாதது போல் மகிழ்ச்சியோடு காணப்படுவது தான் அதிசயம்!   "கர்த்தர் மேல் உன் பாரத்தை வைத்து விடு அவர் உன்னை ஆதரிப்பார்" என்ற வசனத்தின் படி பாரத்தை அவர் மேல் வைத்து விட்டு மனமுள்ள வாழ்க்கை வாழுங்கள் ரோஜர் என்றார். முட்டைப் போல்  கல்லான உள்ளத்தோடு வந்தவன் மென்மையான உருளைக் கிழங்கைப் போல் பக்குவமாய் சென்றான் ரோஜர்.

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் :  என் ரூபவதியே
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

Comments

Popular posts from this blog

கலாச்சார நீரோடையில் அடித்துச் செல்லப்படும் திருச்சபை

நற்கிரியை செய்யும் பெண்

கவர்ச்சியா? கண்ணியமா?