உண்மையை மூலதனமாக்கு
இளைஞர்கள் படித்து முடித்த பின் சரியான வேலையில் அமர்வது என்பது முக்கியமான ஓன்று. அதற்காக எவ்வளவு கம்பெனிகளுக்கு Biodataவை அனுப்பமுடியுமோ அவ்வளவுக்கு அனுப்பிக் கொண்டே இருப்பார்கள். இடை விடாமல் interviewக்கு செல்லுவார்கள். பெற்றோர்கள் இளைஞர்களைப் பார்த்து இந்த வேலையாவது கிடைக்குமா? அல்லது போக்கு வரத்து காசு தான் வீணா? என்று அலுத்துக் கொள்வார்கள்.
அப்படித்தான் பல இடங்களுக்கு நடையாய் நடந்தான் ஒரு இளைஞன். கடைசியில் ஒரு வேலையும் சரியாக அமையவில்லை. சரி கிடைக்கிற கொஞ்ச பணத்தைக் கொண்டாவது வாழ்க்கையை ஓட்ட வேண்டும் என்ற எண்ணத்தோடு கால் நடை மருத்துவரிடம் வேலைக் கேட்டு நின்றான்.
அவன் வந்த நேரத்திலே அவர் தன்னுடைய பழைய காரை விற்பதற்காக ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தார். கார் நன்றாக ஓடினால் வாங்கிக் கொள்ளுகிறேன் என்று கூறினார் வந்தவர்.
மருத்துவர் எப்படியாவது வண்டியைத் தள்ளி விட வேண்டும் என்று எண்ணினார். வண்டி வாங்குபவரின் வீடு வரை போகுமானால் அதற்கு பணம் கொடுத்து வாங்கிக் கொள்ளுகிறேன் என்று முடித்துக் கொண்டனர்.
Ok என்று கூறிய மருத்துவர் வண்டியை ஓட்டுவதற்கு ஒரு ஆளை தேடினார். அப்பொழுது வேலைத் தேடி வந்த இளைஞனிடம் அந்த பொறுப்பை கொடுத்தார்.
வண்டியை கவனமாக ஓட்டி கொடுத்து விட்டு வந்தால் வண்டி விற்ற பணத்தில் கமிஷனும், வேலையும் தருகிறேன் என்று பேசி அனுப்பினார் மருத்துவர்.
வண்டி பழைய வண்டி எங்காவது நின்றுவிடக் கூடாதே என்று மிகவும் கருத்தோடு ஓட்டிச் சென்று சரியாக சேர்த்தான். அப்பாடா கமிஷனும், வேலையும் OK ஆகிவிடும் என்று நிம்மதி பெரு மூச்சு விட்டான்.
தம்பி கார் எப்படி condition என்று குதர்க்கமான கேள்வியை கேட்டார் காரை வாங்கியவர். என்னச் சொல்வது என்று தெரியாமல் தலையை தடவிக் கொண்டே Sir, உண்மையில் வண்டி Condition கொஞ்சம் மோசம் தான் என்று உண்மையைப் போட்டு உடைத்தான்.
அப்படியா, ஆனால் நீ உண்மையைக் கூறியதால் இந்த வண்டியை வாங்கிக் கொள்ளுகிறேன். இல்லையென்றால் உனக்கு பணமும், வேலையும் கிடைக்காது. இருப்பினும் உன்னுடைய பொறுப்பான குணமும், உண்மையைப் பேசும் பழக்கமும் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. ஏன் நீ என்னிடமே வேலைக்குச் சேரக்கூடாது ' என்றார்.
இதை சற்றும் எதிர்பார்க்காத அந்த இளைஞன் உள்ளத்தில் குளிர்ந்த நீரை வார்த்தது போல் இருந்தது! உடனே தலையை அசைத்து சம்மதம் செய்தான். அந்த இளைஞன் பின்னாளில் அவன் அமெரிக்காவின் நிதி ஆலோசகராகவும், மிகப் பெரிய பொருளாதார நிபுணராகவும் மாறினான். அவர் தான் பால் ஹாப் மென்.
"உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்" என்ற திருமறை வாக்குக்கு இணங்க வாழ்க்கையில் சிறு வயதில் இருந்தே உண்மையைப் பேசி பழக வேண்டும். ஏழ்மை நிலையாக இருந்தாலும் உண்மையை விற்று விடக் கூடாது. உண்மையாய் வாழ வாழ மேல் அதிகாரிகள் மத்தியில் உங்கள் மதிப்பு கூடிக் கொண்டே போகும். ஏற்ற காலத்தில் இறைவன் உங்களை உயர்த்தி மகிழ்வார்.
இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள்.
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
Comments
Post a Comment