கொஞ்சம் முயற்சி
இந்திய நாட்டின் முன்னாள் ஜனாதிபதியாக விளங்கிய மாண்புமிகு A.P.J. அப்துல்கலாம் அவர்கள் தன் வாழ்க்கையில் எப்படிப்பட்ட முயற்சிகள் தன்னை வாழ்க்கையில் உந்தித்தள்ளியது என்பதை குறிப்பிட்டுள்ளார்கள்.
அப்பொழுது ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார் இளம் அப்துல்கலாம். மாணவர்களுக்கு கணக்கு பரீட்சை முடிந்து மதிப்பெண் வாசிக்கப்பட்டது. அப்துல்கலாம் என்ற உடன் எழுந்து நின்றார். மதிப்பெண்ணைப் பார்த்த உடன் ஆசிரியருக்கே ஆச்சரியமாக இருந்தது! மதிப்பெண் 40.
"என்னப்பா, எல்லா பாடத்திலேயும் 80 மதிப்பெண்ணுக்கு மேலே இருக்கிறது. கணிதத்தில் மட்டும் 40. என்ன விசயம்? என்று கேள்வி கேட்டார்.
நன்றாக படிக்கும் மாணவர்கள் அப்துல்கலாமோடு சேர்ந்து தலையை குனிந்துக் கொண்டே நின்றனர். ஆசிரியர் யோசித்தார். "மாணவர்களை எப்படி படிக்க வைப்பது?" புதிய வழியில் கற்றுக்கொடுக்க முடிவெடுத்தார்.
கணக்கு பாடத்தில் பத்து கேள்விகளைக் கொடுத்து படிக்க வைத்து தேர்வை வைக்க ஆரம்பித்தார். சிறுவன் அப்துல்கலாம் முதற்கொண்டு சில மாணவர்கள் சென்டம் அடித்தனர். அவ்வளவு தான் அவர்களால் நம்ப முடியவில்லை. நான் நூறு மதிப்பெண் எடுத்திருக்கிறேனா? ஆச்சரியத்தில், கணக்கு பாடத்தின் மீதே ஒரு ஆர்வம் பிறந்தது. எப்பொழுதும் நூற்றுக்கு நூறு எடுக்க வேண்டும் என்ற வேகத்தில் கணக்கையே போட்டுப் போட்டுப் பார்க்க ஆரம்பித்தனர். முடிவு என்னவென்றால் அனைத்து மாணவர்களும் கணக்குப் பாடத்தில் முதன்மையான இடத்தைப் பெற ஆரம்பித்தனர்.
அடைய முடியாத ஒன்றை கண் முன் வைத்து படி படி என்று பிள்ளைகளை தொந்தரவுச் செய்வதை விட சின்ன சின்ன தொடும் தூரத்திலுள்ள இலக்குகளை நியமித்து ஊக்கப்படுத்த வேண்டும். இடை இடையே பெறும் வெற்றிகள் தான் வாழ்க்கையில் சிறப்பான உயர்வான இலக்குகளை அடைவதற்கு உதவியாக இருக்கும்.
இன்று பிள்ளைகள் just pass பண்ணுகிற ஒரு subjectயையே main subject ஆக மாற்றியும், விருப்பமில்லாததை திணித்தும் நிர்பந்திக்கிறார்கள். பிள்ளைகளுக்கு சரியான பாதையைப் பெற்றோர் காட்டுவது முக்கியம் தான். ஆனால் நாம் காட்டுகிற வேலை வாய்ப்புகள் அல்லது Achievementகள் என்பது பிள்ளைகளுக்கும் உற்சாகத்தைக் கொடுப்பதாக அமைய வேண்டும்.
பிள்ளைகள் மீது பாடத்தை திணிப்பதைக் காட்டிலும், ஊக்கம் பெற வைப்பது மிகவும் முக்கியம். அப்துல் கலாம் என்ற ஒரு பெரிய விஞ்ஞானி உருவாகுவதற்கு ஒரு ஆசிரியர் காரணமாக இருந்தார். அவர் தன்னுடைய மாணவர்களுக்கு எப்படி கற்றுக் கொடுப்பது என்பதை யோசித்து முடிவெடுத்தார். ஆசிரியர்கள், பெற்றோர்கள் தங்களுடைய அணுகுமுறையை மாற்றுவதற்கு தயங்கக் கூடாது.
நீதிமொழிகள் புத்தகத்தில் தன்னுடைய அறிவுரையை பல விதங்களில் மாற்றி மாற்றி ஒவ்வொருவருக்கும் ஏற்ற விதமாக கொடுக்கிறார் ஆசிரியர். நீதிமொழிகள் 2 முதல் 7 அதிகாரங்கள் வரையிலும் துவங்கும் போது "என் மகனே", "பிள்ளைகளே" என்று அழைத்து பல்வேறு காரியங்களைப் பகிர்ந்துக் கொள்ளுகிறார். எப்படியாகிலும் மக்கள் வாழ்க்கையில் பயனுள்ள மாற்றங்களை உருவாக்க விரும்புகிறார். குறிப்பாக ஞானத்தை பெற்றுக் கொள்ள வழிகளை சொல்லுகிறார். நல்ல ஒரு சமுதாயம் உருவாகுவதற்கு விரும்புகிறார். அதைப்போல் இன்றைய பெற்றோர்கள், ஆசிரியர்கள் தங்கள் கைக்குள் உள்ள பிள்ளைகளை சரியாக உற்சாகப்படுத்தி, வழிப்படுத்தி கொண்டுச் செல்ல முன் வர வேண்டும். பிள்ளைகள் கசந்துக் கொள்ளும் அளவிற்குச் செல்லக் கூடாது.
இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள்.
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
Comments
Post a Comment