Spin ராஜா
"உங்கள் மனதில் இந்தியாவிற்கென்று தனி இடம் உண்டு. அதைப் போல் இந்தியர்களின் மனதிலும் உங்களுக்கென்று தனி இடம் உண்டு" என்று Spin ராஜா ஷேன் வார்னைப் பற்றி குறிப்பிட்டவர் சச்சின் டெண்டுல்கர்.
Spin பந்து வீச்சாளர், வர்ணனையாளர், தொகுப்பாளர், பயிற்சியாளர், கிரிகெட் ஆலோசகர் என்று கிரிக்கெட் உலகையே தன் வசப்படுத்தியவர் தான் ஷேன் வார்ன். ஆனால் 52 வயதிலேயே கிரிக்கெட் உலகை உறைய வைத்து விட்டு, அவரது ரசிகர்களை கண்ணீர் வெள்ளத்தில் மிதக்கவிட்டுச் சென்று விட்டார்.
1993 களில் கிரிக்கெட் உலகை தன்னுடைய மந்திர பந்து வீச்சால் மயக்கி வைத்தவர். 22 வயதாக இருக்கும் போது இந்திய அணி ஆஸ்திரேலியாவில் விளையாடிய போது அறிமுக வீரராக களமிறக்கப்பட்டார். ஏழு முதல் தரப் போட்டியில் மட்டுமே விளையாடிய ஷேன் சர்வதேசப் போட்டிகளில் அழுத்தமாக கால் பதித்தார். குறிப்பாக இந்தியாவுக்கு எதிரான முதல் சர்வதேசப் போட்டியில் இந்திய ஜாம்பவானாக விளையாடி 206 ரன் குவித்து பெருமிதமாய் விளையாடிக் கொண்டிருந்த சாஸ்திரியை மாய பந்து வீச்சினால் வீழ்த்தினார்.
இங்கிலாந்தில் 1993ல் நடந்த ஆஷஸ் தொடரில் மைக் கேட்டிங்கை தனது துல்லியமான மாயா ஜாலப் பந்து வீச்சால் off ஸ்டெம்பை சிதற வைத்து பிரமிக்க வைத்தார். மைக் கேட்டிங் என்ன நடந்தது! என்று சிந்திக்க முடியாமல் பிரம்மையாக்கினார்.
இப்படிப்பட்ட பிரபலமானவர் சூதாட்டக்காரர்களுடன் தவறான தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு சர்ச்சைகளில் சிக்கினார். தடைச் செய்யப்பட்ட மருந்துகளை எடுத்துக் கொண்டதால் 2003ல் நடைப் பெற்ற உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து விலக்கி வைக்கப்பட்டார். தொடர்ந்து விளையாட முடியாமல் ஓராண்டு தடை விதிக்கப்பட்டார்.
தடை செய்யப்பட்ட மருந்தை எடுக்கும் வீரர்கள் பலர், மீண்டு வந்து சர்வதேச போட்டிகளில் கலந்துக் கொள்ள முடியாமல் தவிப்பர். ஆனால் வாழ்வில் மீண்டும் தன்னை சரி செய்துக் கொண்டு சர்வதேசப் போட்டிகளில் தடம் பதித்தார் ஷேன். தொடர்ந்து விளையாடிய அவர் டெஸ்ட் போட்டியில் 1001 விக்கெட்டை வீழ்த்தி பெருமையுடன் திகழ்ந்தார்.
இளைஞர்கள் மத்தியில் போதைப் பொருட்கள் பயன்படுத்துவதும், மதுவுக்கு அடிமையாவதும் தற்காலங்களில் பெருகி வருகிறது. உயர்ந்த எதிர்நோக்கோடு வாழ வேண்டியவர்களின் ஆற்றல் சிதறிப் போவதற்கு காரணமாக மாறி விடுகின்றன. நம்முடைய ஆற்றல், கடின உழைப்பு, உயர்வு அத்தனையையும் இழக்க வைத்து நிர்பந்தமாக்கி விடுகிறது.
வாழ்க்கையில் தவறுச் செய்யாதவர்கள் யாரும் இல்லை. ஆனால் நம்மை சரிச் செய்துக் கொண்டால் மீண்டும் நல் வாழ்வை அடைய முடியும், சிறந்த சாதனைகளைச் செய்ய முடியும்.
சிம்சோன் நல்ல பலசாலி. இறைவன் அவனைக் கொண்டு செய்ய சிறந்த திட்டத்தை வைத்திருந்தார். ஆனால் அவன் வழி தடுமாறின போது அவன் ஆற்றல்கள் எல்லாம் அநியாயமாக அவனிலிருந்து உறிஞ்சப்பட்டது. மற்றவர்கள் கண்ணில் கைவிட்டு ஆட்ட வேண்டியவன், ஆனால் அவன் கண்ணுக்குள் எதிரிகள் கையை விட்டு நோண்டியே விட்டனர். உலகை ஆட்டிப் படைக்க வேண்டியவன் சிறைச்சாலையில் மாவறைத்துக் கொண்டிருக்கும் நிலைக்குள் தள்ளப்பட்டான். உலகை தன் வசப்படுத்த வேண்டியவன் வேடிக்கைக் காட்டும் கோமாளியாக மாறிப் போனான். (நியாயாதிபதிகள் 16)
தேவனே என்னை நினைத்தருளும், என்னைப் பெலப்படுத்தும் என்று மன்றாடிய போது, மீண்டும் பெலனைப் பெற்று எதிரிகளை பழி வாங்கினான். வாழ்க்கையில் தவறும் போது இறைவனின் அருளால் மீண்டும் சரிச் செய்துக் கொள்ள வேண்டும். அப்பொழுது சரியான பாதையில் மீண்டும் ஓடி சாதனைகளைப் படைத்திடலாம். இளைஞர்களே உங்களுக்கு எதிர்காலம் உண்டு. போதைக்கு டாடா சொல்லிவிட்டு வாருங்கள்.
இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள்.
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
Comments
Post a Comment