இவனா திருந்தப் போகிறான்?

போதை தலைக்கு ஏறினவுடன் மனைவி, பிள்ளை, பெற்ற தாய், தகப்பன் என்று கூடப்பார்க்காமல் அடித்து உதைப்பதை நாம் பார்த்தால், இவனெல்லாம் ஒரு நாளும் திருந்த மாட்டான். சாவுகிற வரைக்கும் இவன் இப்படித்தான்!   இவன் உயிரோடு இருக்கும் வரைக்கும் இவன் மனைவி இப்படித்தான் உதை வாங்க வேண்டும் என்று கூறுவோம்.

குடிப்பவர்கள் திருந்தினது சரித்திரத்தில் உண்டா? என்று கேட்கிறீர்களா? நிச்சயம் உண்டு. குடித்து குடித்து சொத்தை, நகையை காலிச் செய்வதவர்கள் கூட மனம் மாறி வாழ்கிறார்கள் என்பதை நான் நன்கு அறிவேன். எனவே நம்பிக்கையை விட்டு விடக்கூடாது.

சில பெண்கள் குடித்து விட்டு தொந்தரவு செய்யும் கணவனை எரிச்சல் மிகுதியால் அடித்துக் கொன்று விடுவதும், பெற்ற மகனின் டார்ச்சர் தாங்க முடியாமல் பெற்றவர்களே பிள்ளையைப் போட்டு தள்ளுவதும் தினசரி செய்தியாக வந்துக் கொண்டே இருக்கிறது. காரணம் இவன் ஒருக்காலும் திருந்தமாட்டான் என்பது தான் இப்படி நினைப்பவர்களுக்கு தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்கள் ஒரு நடந்த சம்பவத்தை தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்கள்.

பாயசீத் பிஸ்தாபி என்ற ஒரு பெரியவர் வழியிலே சென்றுக் கொண்டிருந்தார். அப்பொழுது குடிகாரன் ஒருவன் நன்றாக குடித்து விட்டு தெருவில் நின்று இசைக்கருவியில் பாடலை வாசித்துக் கொண்டும், பாடிக்கொண்டும் இருந்தான்.

வழியில் செல்லுகிறவர்களை வம்பு சண்டைக்கு இழுத்துக் கொண்டே இருந்தான்.   அப்பொழுது அந்த பெரியவர் அவன் நிலையைக் கண்டு வருத்தப்பட்டு, அறிவுரைச் சொன்னார்.

அவனோ அறிவுரை கூறினவரிடம் சண்டைக்குச் சென்றான். தான் வைத்திருந்த இசைக்கருவியால் பெரியவரின் தலையில் ஒரு போடு போட்டான். இசைக்கருவி இரண்டாக பிளந்தது. பெரியவரின் தலையில் இருந்து இரத்தம் சொட்ட ஆரம்பித்தது. ஆனாலும் அமைதியாக இருந்தார்.

மறு நாள் காலையில் தான் அவன் Normal ஆனான், இசைக் கருவி இரண்டாகப் போனதை உணர்ந்தான். அப்பொழுது ஒரு மனிதன் வந்து ஒரு பார்சலையும், கொஞ்சம் பணத்தையும், ஒரு கடிதத்தையும் கொடுத்தான்.

அவனைப் பார்த்து நீங்கள் யார்? என்றான். அவரோ நேற்று ஒரு பெரியவர் தலையை உடைத்தாயே, அவர் அனுப்பிய ஆள் தான் நான் என்று கூறினான்.

கடிதத்தை வாசித்துப் பார்த்தான்.  உள்ளே கீழ்கண்டவாறு எழுதியிருந்தது, "தம்பி உங்கள் இசைக்கருவி உடைவதற்கு நான் காரணமாகிவிட்டேன் அதற்காக வருந்துகிறேன். இந்த பணத்தைக் கொண்டு புதிய இசை கருவியை வாங்கிக் கொள்ளுங்கள். அதோடு இந்த இனிப்பை எடுத்து சாப்பிடுங்கள். உங்கள் நாவில் உள்ள கசப்பு மாறிவிடும்" என்று எழுதியிருந்தார்.

இதை வாசித்த போது அந்த குடிகாரன் கண் கலங்கினான். பெரியவரை தேடி போய் அவரிடம் மன்னிப்புக் கேட்டான், வாழ்வை மாற்றிக் கொண்டான்.

என்னை இந்த பாவ சுபாவத்திலிருந்து மீட்பது யார்? நான் நிர்பந்தமான மனிதன். நான் விரும்புகிறதைச் செய்யாமல் விரும்பாததையேச் செய்கிறேன் என பவுலடியார் குறிப்பிடுகிறார். வாழ்க்கையில் பலவேளை நாம் விரும்புகிற காரியத்தைச் செய்யாமல் விரும்பாத காரியத்தைத் திரும்ப திரும்பச் செய்வதற்கு முயலுகிறோம். ஆனால் கர்த்தர் ஒருவரே நம்மை மீட்பதற்கு முடியும். குடியின் மீது, போதை பொருள்கள் மீது வெறுப்பு வர வேண்டும். அதற்கு இறைவன் தான் உதவிச் செய்ய முடியும். நாம் அவரிடத்தில் தான் மன்றாட வேண்டும். அவர் தான் நம்மை விடுதலைச் செய்ய வல்லவர்.

தேவைப்படும் போது போதை பொருள்களில் இருந்து விடுதலைப் பெற மருத்துவரை அணுகுவதும் சால சிறந்தது. 

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் :  என் ரூபவதியே
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

Comments

Popular posts from this blog

கலாச்சார நீரோடையில் அடித்துச் செல்லப்படும் திருச்சபை

நற்கிரியை செய்யும் பெண்

கவர்ச்சியா? கண்ணியமா?