Teen Age
"காதல் ஏழு வினாடி துக்கம் வாழ்க்கை பூராவும்" என்பது பழமொழி. காந்தம் இழுத்த ஊசியைப் போல தனக்கென்று ஒரு வழியில்லாமல் தன்னிலை இழந்து பலர் வாழ்கின்றனர்.
ஒரு இளம்பெண் வழி கேட்டால் கல்லூரி மாணவர்களெல்லாம் வழி சொல்லி முடிந்தால் போக வேண்டிய இடத்திற்கே கொண்டு போய் விட்டு விடுவார்கள். அவள் தெரிந்தவளாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை! என்றாவது ஒரு நாள் மீண்டும் சந்திக்க போகிறோமா அதுவும் இல்லை, சொந்தம் பந்தமா? அது கூட no தான். ஆனால் ஏன் இவ்வளவு உதவிடும் மனப்பான்மை. அதுவே ஒரு ஆண் வழி கேட்டால் கல்லூரி மாணவர்கள் அவர்களைப் பாத்து, இது கூட தெரியாம ஏன் சார் நீங்க எல்லாம் இந்த ஊருக்கு வருகிறீங்க. மனுஷன் மண்டையே சூடா இருக்குது. இதுல வேற நீங்க பேஜார் பண்ணுறீங்களே" என்று செல்லை நோண்டிக் கொண்டு வழி சொல்ல விருப்பம் இல்லாமல் இருந்துக் கொள்வர். இதுக்கெல்லாம் காரணம் அந்த 'limbic system' என்னும் மூளைப் பகுதி பண்ணுகிற பாடுதான்! பாவம் என்னச் செய்வாங்க இளைஞர்கள்!! ஒரு மாணவியை பெண்கள் கல்லூரியில் திட்டினால் அவளுக்கு 20% அவமானம். அதுவே ஒரு ஆண் ஆசிரியருக்கு முன்னால் திட்டினால் 40% அவமானம். அதுவே co-educationல் திட்டினாள் 80% அவமானம். உடனே சாலில் தொங்கி விடுவர்! என்ன ஆச்சு அந்த பெண்ணுக்கு யாரையாவது அந்த பெண் வகுப்பறையில் விரும்புகிறாளா? 'No', வேற யாராவது அவளை விரும்புகிறாளா? அதற்கும் பதில் 'No', ஆனால் அவள் ஒரு Heroine. அது கருப்போ, சிவப்போ அது மேட்டர் அல்ல!
Teen Age வந்ததுமே பிள்ளைகளின் பார்வையே வேறு. பெற்றோரின் கை விரலை பிடித்து நடந்தவர்கள், மெதுவாக விலக ஆரம்பித்து விடுவார்கள். அம்மா அப்பாவிடம் இதுவரைக் கதைக் கேட்டவர்கள் சக நண்பர்களுடன், நண்பிகளுடன் அரட்டை அடிக்க விரும்புகின்றனர். இன்னும் கொஞ்சம் சொல்லப் போனால் எதிர்பாலினரிடம் தங்கள் எண்ணங்களையும், உணர்வுகளையும் பகிர்ந்து கொள்வது மனதிற்கு பிடிக்கும். இவ்வாறு ஒரு ஆண் பெண்ணுடனோ, பெண் ஆணுடனோ உருவாக்கும் நட்பே இனக்கவர்ச்சியாக மாறுவதற்கு வாய்ப்பு கிடைத்து விடுகிறது. ஆனால் Teensல் உள்ளவர்கள் 20% பேர் Stress மற்றும் depression ஆல் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது தான் ஆச்சரியமான விஷயம். காரணம் அவள்/ன் என்னை வெறுக்கிறார் என்பது தான் முக்கியமான மேட்டர் அவர்களுக்கு! திருவள்ளுவர் காலத்திலேயே இந்த இடியாப்ப சிக்கல் இருக்கிறது. ஆகவே அவர் இப்படி எழுதியுள்ளார்.
"காதல் அவரிலர் ஆகநீ நோவது பேதமை வாழிஎன் நெஞ்சு"
இதன் பொருள் அவனுக்கு அல்லது அவளுக்கு நம்மிடம் காதல் இல்லாத போது நீ மட்டும் அவரை/ளை ஓயாமல் நினைத்து சாப்பிடாமல், குடியாமல் இருப்பது அறியாமை தான் என்கிறார்.
"வாழ்ந்தால் உன்னோடு இல்லையே மண்ணோடு' என்று பாடியவர்களெலாம் வாழ்ந்து கொண்டிருக்க நீங்கள் மட்டும் ஏன் தற்கொலைச் செய்துக் கொள்ள முடிவெடுக்க வேண்டும். தற்கொலைச் செய்துக் கொள்கிறவர்கள் எதை சமாளிக்க முடியாமல் தவிக்கின்றனர்? யாருக்கு தண்டனைக் கொடுக்க வேண்டும் என்று முடிவெடுக்கின்றனர்? யாருக்கோ தண்டனைக் கொடுக்க எண்ணி, யாருக்கோ தண்டனையை வழங்கி விடுகிறோம்.
எந்த ஒரு நபருக்கும் பிரச்சனையின் முடிவு விரக்தியாக அமையப் போவதில்லை. பிரச்சனையின் முடிவுக்கு முந்திய கட்டம் தான் விரக்தி, வேதனை. ஆனால் சற்று தாமதம் பண்ணினாலே அந்த பிரச்சனை விடும். வழியும் திறந்து விடும். இறப்பதற்கு காரணத்தை தேடுகிறீர்கள். ஆனால் அதற்கு பதிலாக வாழ்வதற்கான வழிகளை தேடிப் பார்த்தால் கண்ணுக்குப் புலப்படும் அநேக காரியங்கள்! இந்த கழுதைப் போனால் ஒரு குதிரை கிடைக்கும் என்று முடிவெடுங்கள்.
உலகத்திலே நான் நன்றாக படிக்க முடியவில்லை. சரியான Courseயை தேர்ந்தெடுக்க முடியவில்லை என்று தற்கொலையை நாடுகிறவர்கள் வெகு சிலரே. ஆனால் கல்லூரிக்கு வந்து காதலுக்காக தற்கொலை செய்பவர்கள் தான் அநேகர். சின்னத்திரை, பெரிய திரை அத்தனையும் 'காதல் தான் வாழ்க்கை' என்று ஆணி அடித்தார் போல் உங்கள் மூளைக்குள் ஆழ்ந்து விட்டது. எனவே தான் முடிவெடுப்பதில் இத்தனை தடுமாற்றங்கள். நீங்கள் என் விருப்பம் என்று தவறான முடிவை எடுக்கலாம். ஆனால் உங்களை வளர்த்து ஆளாக்கிய குடும்பம் கண்ணீரில் இருந்து வெளியே வருவது எப்பொழுது தெரியுமா? அவர்களின் மரணத்தில் தான்.
வாழ்க்கையில் வரும் சிறு ஏமாற்றத்தை, இழப்பை எதிர்த்துப் போராடி பழகினால் தான் வாழ்க்கையில் பல்வேறு சாதனைகளை நீங்கள் செய்ய முடியும். இதைப் போன்று பிரச்சனைகளை சந்தித்த பலர் நம் கண்களுக்கு முன்பாக வாழ்ந்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். தவறான முடிவுகளை எடுப்பதற்கு நமக்கு உரிமை இல்லை. இறைவன் கொடுத்த வாழ்க்கை, அதை வாழ்ந்து பார்ப்போம் என்ற உத்வேகம் வரவேண்டும். நம் உயிர் இறைவன் கொடுத்த வரபிரசாதம். அவர் விருப்பப்படி வாழ ஒப்புக் கொடுங்கள். நீங்கள் நினைத்த நபர்களைக் காட்டிலும் நல்ல குணமுள்ள நபர் உங்கள் வாழ்க்கையை அலங்கரிக்க வருவார்கள். "எழில் ஏமாற்றும், அழகு அற்றுப் போகும்" என்பது சாலமோன் அரசரின் வார்த்தை. அழிந்து போகிற அழகுக்காக அழகான உங்கள் வாழ்க்கையை தொலைத்து விடாதிருங்கள். உங்களை உண்மையாய் நேசிப்பவர்கள் உங்கள் பெற்றோரே! எல்லாருக்கும் மேல் உங்கள் நல் வாழ்க்கையில் இறைவனுக்கு அக்கரை உண்டு என்பதை மறந்து விடாதிருங்கள்.
Comments
Post a Comment