தேன் தடவிய வார்த்தைகள்

 


உறவினர் ஒருவரின் வீட்டிற்கு சாப்பிட உட்கார்ந்திருந்தேன். உணவு பரிமாறப்பட்டுக் கொண்டிருந்தது. நான் சாப்பிட ஆரம்பிக்கும் போது ஒரு முடி ஓன்று இருப்பது போல் தெரிந்தது. மெதுவாக எடுத்து வெளியே வைத்தேன்.

உறவினர் பார்த்து விட்டார்கள் என்னது முடியா? என்றார்கள். நான் அது ஓன்று மில்ல, "நம்முடைய உறவு வளருது வேறு ஒன்றுமில்லை" என்று கூறிவிட்டு சாப்பிட ஆரம்பித்தேன்.

எனக்குத் தெரியும் என் உறவினர் ஒரு கோபக்கார ஆசாமி. மனைவியை வறுத்தெடுத்து விடுவார். ஆனால் நான் முந்திக் கொண்டதால் மனைவியும் கணவனும் சிரித்துக் கொண்டே மீண்டும் சாதத்தை என் இலையில் வைத்தார்கள்.

வார்த்தைகள் என்பது கொல்லவும் செய்யும், உயிர்பிக்கவும் செய்யும். சில வேளைகளில் உணர்ச்சி வசப்பட்டு பேசும் வார்த்தைகள் தடித்ததாக, பிறரைக் காயப்படுத்துவதாக அமைந்து விடுகிறது.    

சில வேளைகளில் மனைவி, கணவனிடையே பேசப்படும் வார்த்தைகளில் கொஞ்சமும் ஈரபசை இல்லாமல் அனல் வீசும் வார்த்தைகளாக தொடர்ச்சியாக வரும் போது வாழ்க்கையை பாலைவனமாக்கி விடுகிறது. அன்று அப்படிதான் யூசின் பில்டு என்பவர் தடித்த வார்த்தைகளைக் கேட்டு கேட்டு மனம் வருந்தினவராக ஹோட்டல் ஒன்றுக்குள் பசி இல்லாமல் உள்ளே நுழைந்தார்.

அங்கே இருந்த வேலையாட்கள் அவர் இருந்த Table யை நன்றாக வைத்து விட்டு, 'Sir, உங்களுக்கு என்ன வேண்டும்?' என்று கேட்டனர்.

அவர், அவர்களைப் பார்த்து, 'எனக்கு அன்பான வார்த்தைகளோடு ஒரு ஆரஞ்சு பழம் போதும்' என்றார்.

கணவன் அல்லது மனைவி வேலைக்குச் சென்று வீடு திரும்பும் போது எப்பொழுதும் மணமணக்கும் உணவு தான் பரிமாறப்பட்ட வேண்டும் என்று எதிர்பார்ப்பதில்லை. அப்படி எதிர்பார்த்தால் நல்ல ஹோட்டலுக்குப் போய் வரலாம். ஆனால் அன்பான வார்த்தைகள், கனிவான வார்த்தைகள் வீட்டில் கிடைத்தாலே போதும். வேலை முடிந்த அடுத்த நிமிடமே வீட்டிற்கு வந்து நிற்பர்.  

முந்தைய காலங்களில் நாற்று நடும் போதும், இரயில்வே தண்டவாளங்களை மனிதர்கள் போடும் போதும், படகு தண்டு வலிக்கும் போதும், ஏற்றம் இறைக்கும் போதும் பாடல்களைப் பாடியுள்ளனரே எதற்காக? வலி தெரியாமல் இருக்கத்தானே!   இன்று வேலையில் கிடைக்கும் வலியைக் காட்டிலும் வீட்டிற்குள் கிடைக்கும் வார்த்தையின் வலி அதிகமாகிப் போவதினால் தான் பலர் வீட்டிற்கு வருவதைக் காட்டிலும் அலுவலகத்திலே நேரத்தை செலவு செய்து விடுகின்றனர்.

இயேசு கிறிஸ்து பேசின வார்த்தைகள் மக்களுக்கு தேனாமிர்தமாக இருந்ததால் மூன்று நாட்கள் உணவுப் பற்றி கொஞ்சமும் கவலை இல்லாமல் கேட்டுக் கொண்டே இருந்தனர். அவருடைய வார்த்தைகள் மக்களுக்கு பிற காரியங்களைக் குறித்து கவலைப்படாமல் இருக்கும் அளவிற்கு அமைந்துள்ளது.

இன்று பலர் கணவன் அல்லது மனைவியைப் பார்த்து நீ பேசினாலே பிரச்சனைத் தான். நாம் இருவரும் பேசாமல் இருப்பதே நல்லது என்று பேச்சையே நிறுத்தி விடுகிறார்கள்.

ஒற்றுமையாக இருப்பதற்குரிய காரியங்கள் மட்டுமே பேச முற்படுங்கள். பிரச்சனையை ஏற்படுத்தும் காரியங்களை பற்றி பேசுவதை கொஞ்சம் தவிருங்கள். கால போக்கில் அவை சரியாகி விடும்.

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் :  என் ரூபவதியே
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

Comments

Popular posts from this blog

கலாச்சார நீரோடையில் அடித்துச் செல்லப்படும் திருச்சபை

நற்கிரியை செய்யும் பெண்

கவர்ச்சியா? கண்ணியமா?