Operation Barbarossa
இளைஞர்கள் இன்று பல்வேறு நெருக்கங்களுக்குள் தள்ளப்படுகின்றனர். எதை படிப்பது? எதை படித்தால் வேலை கிடைக்கும்? எதை படித்தால் pocket நிரம்பும்? எதை படித்தால் உட்கார்ந்து கொண்டே சம்பளம் வாங்க முடியும்? என்று எண்ணி எண்ணி எதைப் படிக்க என்றே தெரியாமல் திக்குமுக்காடுகின்றனர். பொறியியல் படிப்புகளை படிக்கும் போதே கலைக் கல்லூரியில் சேர்ந்திருந்தால் வேலை கிடைக்குமே என்று மனம் மறுதிசைக்கு தாவுகிறது. எனவே பொறியியல் முடித்துவிட்டு மீண்டும் கலைக்கல்லூரிகளில் வந்து சேருகின்றனர். சிலர் B.E முடித்துவிட்டு Bank Examகாக ஆயத்தமாகுகின்றனர். இவ்வாறு இளம் சமுதாயம் தன்னுடைய நிலைப்பாட்டை சரியாக வைக்க முடியாததற்கு காரணம் அவர்களுக்கு என்று ஒரு focus இல்லை என்பதுதான். இவ்வாறு மன சிதறல் அடைகிறவர்கள் எதையும் பெரிதாக சாதிக்க முடியாதவர்களாக மாறி விடுகின்றனர்.
பெற்றோர் ஒரு ஆலோசனை கூற, பிள்ளைகளுக்கு அதில் நாட்டம் இல்லாமல் இருக்கிறது. பிள்ளைகள் தெரிவு செய்யும் course எதிர்காலத்திற்கு பயன்தராது என்று பெற்றோர்கள் அனுபவத்தின் அடிப்படையில் கூறிவிடுகின்றனர். இவ்வாறு முடிவெடுக்க முடியாமல் பிள்ளைகள் எதையாவது விருப்பமில்லாமல் படித்து முடிக்கின்றனர். தங்கள் நண்பர்கள் கூறுகிறதை 100% உண்மை என்று மனதை அலையவிட்டு கடைசியில் 30 வயதான பின்பும் வாழ்க்கையில் ஒரு பிடியும் இல்லாமல் பரிதாபமாக பெற்றோரின் நிழலில் வாழ்ந்து வருகின்றனர்.
வாழ்க்கையில் படிப்பில் மட்டுமல்ல, ஒவ்வொரு நிமிடமும் நம்முடைய சிந்தனை சிதறாமல் செயல்பட வேண்டியது அவசியம் என்பதை (Hitler)ஹிட்லருடைய வாழ்க்கை நமக்கு எடுத்துக் காட்டுகிறது.
யூதர்களைக் கொன்று குவித்த ஹிட்லர் இரண்டாம் உலகப்போரில் அனைத்து நாடுகளுக்கும் அச்சுறுத்தலாக இருந்தார். கட்டுப்படுத்த முடியாத அவருடைய திறமைகளையும், நினைத்ததை நிறைவேற்றிக் காட்டும் அவருடைய ஆற்றலையும் கண்டு உலக நாடுகள் மிரண்டன. ஒரே நேரத்தில் பல நாடுகள் மீது தாக்குதல்கள் ஏற்படுத்தி தன் திறமைகளை உலகிற்கு வெளிகாட்டிக் கொண்டிருந்தார். குறிப்பாக ரஷ்யாவை சிதறடிக்கும் நோக்கத்தோடு சீறிப் பாய்ந்தது ஜெர்மானியப் படை. இந்த படையெடுப்பு ஜூன் 22, 1941 அன்று துவங்கியது. அந்த படையெடுப்புக்கான பெயர்தான் Operation Barbarossa. இந்தப் படையெடுப்பில் ஜெர்மானியப் படை வீரர்கள் 43 லட்சம் பேர் மடிந்து போனார்கள். இதுதான் ஜெர்மானிய வீழ்ச்சிக்குக் காரணமாய் அமைந்தது. தவறான தீர்மானங்களும் ஒரே நேரத்தில் பல்வேறு செயல்களில் ஈடுபடுத்திக் கொண்டு சிந்தனையில் focus இல்லாமல் போவதும், நல்ல பலனைத் தராது என்பதற்கு நல்ல உதாரணமாக அமைந்துள்ளது
இறைவன் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு எதிர்காலங்களை வைத்திருக்கிறார். யாரும் சும்மா இருப்பதற்காக படைக்கப்படவில்லை. “தாயின் கருவில் இருக்கும் போதே என்னை அறிந்து கொண்டார்” என்ற நம்பிக்கை எரேமியா இறைவாக்கினருக்கு இருந்தது. தாம் எதற்காக படைக்கப்பட்டிருக்கிறோம் என்ற உறுதி எரேமியாவுக்கு இருந்ததினால் தன்னுடைய செயல்பாட்டில் மிக தெளிவாக இருந்தார். இதை போன்று உங்கள் வாழ்க்கையிலும் கூட இறைவனின் திட்டம் நிறைவேற பொறுமையுடனும் நிதானத்துடனும் படியுங்கள். மனதை தளரவிடாதீர்கள்.
இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள்.
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம்
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
Comments
Post a Comment