Posts

Showing posts from February, 2022

கடவுளின் செயலா?

Image
  இளைஞன் ஒருவன் எதிர்பாராதவிதமாக accident ஒன்றில் மாட்டிக் கொண்டான் . அவன் அந்த குடும்பத்திற்கு ஒரே ஒரு பையன் . அவனின் பெற்றோருக்கு வேறு பிள்ளைகள் கிடையாது . இந்த மகனை மிகவும் பாசத்துடன் வளர்த்தார்கள் . ஆனால் எதிர்பாராத விதத்தில்   பைக் accident ல் சிக்கி மரித்துப் போனான் .   பெற்றோர்களால் அவன் இழப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை . எப்பொழுதும் அவன் நினைவாகவே இருந்தனர் . சரியான உணவு உண்பதுமில்லை . எதிலும் நாட்டமில்லாமல் கணவன் , மனைவி இருவரும் கண்ணீரிலே வாழ்ந்தனர் . வருடம் ஓன்று முடியும் நிலை வந்தது . அன்று மகனின் நினைவு நாள் . இருவருக்கும் துக்கம் மேலோங்கியது . தன் மகன் இல்லாமல் இனி வாழ்வது வீண் என்று எண்ணி இருவரும் தற்கொலைச் செய்துக் கொண்டனர் . காரணம் துக்கத்திலிருந்து மீள்வதற்கு வழி தெரியவில்லை . தாங்கள் நேசித்து வளர்த்த ஒரே மகனை இழப்பது என்பது துயரத்தின் உச்ச நிலை . எதிர் காலமே தன் மகன் என்று வாழ்ந்த பெற்றோருக்கு கண் முன் இருண்டு போன எதிர்காலம் தோன்றியது .  இழப்பு என்பது உடலில் ஏற்படும் ஒரு காயத்திற்கு