நாங்க Robot இல்லங்க

பிள்ளைகள் exam என்றவுடன் பயந்து போய் மம்மி எனக்கு வயிறு வலிக்கிறது, தலைவலியாக உள்ளது, மயக்கம் வருவது போல் உள்ளது என்று கூறுகிறீர்களா? எனக்குப் பயமாக உள்ளது நான் exam எழுதப் போகவில்லை என்று கூறுகிறீர்களா? எனக்குப் படித்தது எல்லாம் மறந்துவிட்டது நான் fail ஆகிவிடுவேன் என்று புலம்புகிறார்களா? நான் டாக்டர்க்கு படிப்பதற்கு லாயக்கற்றவள்? எனக்கு அந்த திறமையெல்லாம் கிடையாது என்று புலம்புகிறார்களா? என்னை நீங்க படி படி என்று சொன்னா நான் வீட்டை விட்டு எங்காவது ஓடிப்போய் விடுவேன் என்று சண்டையிடுகிறார்களா? நீங்க எனக்கு அம்மாவும் இல்ல, அப்பாவும் இல்ல எப்பப் பார்த்தாலும் என்ன படிக்கச் சொல்லி நச்சரித்துக் கொண்டு இருந்தா? இப்படியெல்லாம் பிள்ளைகள் புலம்புகிறார்கள் என்றால் பெற்றோர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பிள்ளைகள் அதிகமாக மார்க் வாங்க வேண்டும் என்று நினைப்பது தவறல்ல. அதற்காக பிள்ளைகளை exam-க்கு ஆயத்தப்படுத்துகிறேன் என்று "பார்த்துக்க என் மானத்தை வாங்கிராதே நான் உன் மார்க்க பார்த்துதான் ...