Posts

Showing posts from February, 2021

முதலும் கோணல் முற்றிலும் கோணல்

Image
வீடு  சந்திப்பிற்காகச் சென்று இருந்தபோது ஒரு குடும்பத்தின் நிலை என்னைச் சிந்திக்க வைத்தது.  அப்பொழுது காலை 9.00 மணி வீட்டிற்கு முன் நின்று தட்டினேன்.  திறப்பதற்குப் தாமதம் ஆனது.  எல்லாரும் வேலைக்குச் சென்று விட்டார்களோ என்று நினைத்த போது தான் உதயமானது.  இன்று அரசு விடுமுறையாச்சே.  வேலைக்குச் செல்ல வாய்ப்பில்லை என உணர்ந்தேன்.  மீண்டும் காலிங்பெல்லை என்னோடு வந்த ஊழியர் அடித்தார்.  தட்டுத் தடுமாறி வந்து வீட்டின் கதவை வெறுப்போடு திறந்தனர்.  யாரு இப்போது வந்து தொந்தரவு பண்ணுவது என்ற உணர்வோடு. நாங்கதான் வந்திருக்கிறோம் என்பதை உணர்ந்த உடன் வீட்டிற்குள்ளே போய் பிள்ளைகளைத் தட்டி எழுப்பி, "ஓடு ஓடு, ஐயா ஜெபம் பண்ண வந்திருக்காங்க" என்று விரட்டி விட்டார் குடும்பத்தலைவர்.   ஐயா வேறு ஒன்றும் இல்லை.  இன்றைக்கு விடுமுறை அதான் கொஞ்சநேரம் தூங்கலாமே என்று தூங்கிக் கொண்டிருந்தோம். மனைவி கண்ணைத் துடைத்துக் கொண்டு ஸ்தோத்திரம் போட்டாங்க.  என்னம்மா மணி 9 ஆயிட்டே எப்பொழுது சமைப்பீர்கள் என்று கேட்டேன்.    சிரிச்சிக்கிட்டே, 'ஐயா இனி எங்க சமைக்க.  அவங்க போய் ஹோட்டல்ல சாப்பாடு வாங்கிட்டு வருவாங்க, மத்

பெற்றோரே தவறான முடிவுகளுக்கு மாதிரிகள்

Image
ஒரு தாய் தன் மூன்று பிள்ளைகளோடு தற்கொலை செய்துகொண்டார்.  காரணம் கணவன் அதிகமானப் பணத்தை வாங்கிச் செலவு செய்துவிட்டுத் திருப்பிக் கொடுக்க முடியாமல் போகவே, ஊரை விட்டுத் தப்பி ஓடி விட்டார்.  கடன் கொடுத்தவர்களின் தொந்தரவு தாங்க முடியாமல், தாய் தன் பிள்ளைகளுக்கு விஷத்தைக் கொடுத்து விட்டுத் தானும் தூக்குமாட்டி இறந்து விட்டாள் என்பது தினசரிப் பத்திக்கையில் வெளியான செய்தி. கஷ்டங்கள் வரும்போது அவைகளை எதிர் கொள்ள முடியாமல் சாவு மட்டுமே முடிவு என்ற சூழ் நிலைக்குத் தான் மட்டும் வராமல் தன் பிள்ளைகளுக்கும் வழிகாட்டுவது தவறான வழிகாட்டுதலாகும்.  மாலை வேளையில் சாலையில் செல்லும் போது, வாகனங்கள் அதிகமாக வருகின்றன.  பிள்ளைகள் கல்விக்கூடம் சென்று திரும்புகின்றனர். வேலை செய்பவர்கள் வேலை முடிந்து திரும்புகின்றனர்.  காலையில் இரண்டு சக்கர வாகனத்தில் செல்ல முடியவில்லை.  மரணம் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் மேலோங்குகிறது.  ஆயினும் யாராகிலும் வாகனத்தை ஒட்டாமல் சாலையின் ஓரத்தில் நிற்கிறார்களா? இல்லை. இளம் பெண்கள், முதியவர்கள் அனைவரும் கூட்ட நெரிசல் மத்தியில், பலர் ஏசினாலும் அதைப் பொருட்படுத்தாமல் வேகமாக வண்டியில் போக

ஒதுக்கப்படும் குழந்தைகள்

Image
பள்ளி வகுப்பைத் தொடர்ந்துக் கொண்டிருந்த மாணவன் திடீரென்று படிப்பதில் ஆர்வம் குன்றியது.  "பள்ளிக்குப் போவதே பிடிக்கவில்லை" என்று  அடம்பிடித்துக் கொண்டு வீட்டில் இருந்தான்.  அம்மாவோடு சண்டைப் போட்டுக்கொண்டு அம்மாவை முழுவதுமாக வெறுக்க ஆரம்பித்தான்.  பலர் advice செய்தும் ஒன்றும் பலனிக்கவில்லை.  இறுதியாக counselling கொடுத்துப் பார்க்கலாம் என்று பெற்றோர் முடிவு செய்தனர்.   மாணவன் உடன் உரையாடல் தொடர்ந்தது. அதில் தனக்கு படிப்போ, பெற்றோரா யாரும் பிடிக்கவில்லை என்று சாதித்துக் கொண்டிருந்தான்.  இரண்டு, மூன்று முறை அணுகின பின்னும் தன்னுடையப் பிடியில் உறுதியாக நின்றான்.   இறுதியாக உங்கள் குடும்பத்தைப் பற்றி ஒரு படம் வரை என்று பேப்பர், பென்சில் வழங்கப்பட்டது.  அதில் அப்பா, தம்பி, அம்மா மூன்று பேர் அருகில் இருந்தனர்.  இவனோ தொலைவில் இருப்பதாக படம் வரைந்திருந்தான். ஏன் உன்னை மட்டும் தனியாக வரைந்துள்ளாய் என்ற போது தான் உண்மை வெளிப்பட்டது.  பெற்றோர் தன் தம்பிக்கு அதிக செல்லம் கொடுப்பதாகவும், ஏதாவது ஒரு பொருளுக்காக இருவரும் சண்டையிட்டால் "தம்பிக்கு விட்டுக் கொடு" அவன் சிறுவன் என்பர்.  

நல்ல பிள்ளைகளும் எதிர்மறையான பெற்றோரும்

Image
ஒருநாள் ஒரு சிறுவனை என்னிடம் அழைத்து வந்தனர்.  ஐயா, இவனுக்காக ஜெபியுங்கள்.  இவன் ஒரு இடத்தில் இருப்பதில்லை.  அங்கும் இங்கும் ஓடுகிறான்.  எந்தப் பொருளை எடுத்தாலும் உடைக்கிறான்.  அருகில் உள்ள சிறு பிள்ளைகளை எல்லாம் அடிக்கிறான்.  ஏதாவது பிசாசுக் கோளாராக இருக்குமோ தெரியவில்லை.  நன்றாக ஜெபம் பண்ணுங்க என்று கூறினார்கள். உடைப்பது, அடிப்பது போன்ற பழக்கங்கள் சிறுபிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரையிலும் உள்ளது.  இதைக்குறித்து ஆராய்ச்சிகளும் காலம் காலமாக நடைபெற்று வருகிறது.  சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பே   ஸிஸேர் லாம்ரோஸா என்ற இத்தாலியக் குற்றவியல் நிபுணர் ஆராய்ச்சி மேற் கொண்டு "வன்முறை மனிதன்" என்ற புத்தகத்தை 1876-இல் வெளியிட்டார்.  அதில் வன்முறையில் ஈடுபடும் மனிதர்களில் தலை மற்றும் முக அமைப்பை வைத்தே கண்டுபிடித்து விடலாம் என்று குறிப்பிட்டுள்ளார் "phrenology" என்ற கலை ஐரோப்பாவில் மிகவும் புகழ்பெற்றது.  காரணம் ஒருவரின் தலை வடிவத்தை வைத்து ஒருவரின் குணத்தை நிர்ணயிப்பது.  தலையில் உள்ள மேடு பள்ளங்களை வைத்துக் கண்டுபிடித்தனர். எனவே வன்முறையில் ஈடுபடும் மனிதர்களை அழைத்து ஆராய்ச்சி ந

நல்ல பெற்றோரும் எதிர்மறையான பிள்ளைகளும்

Image
நல்ல பெற்றோருக்கு நல்ல கீழ்படிதலான பிள்ளைகள்தான் கிடைக்கும் என்பதல்ல.  சில வேளைகளில் பெற்றோரின் பெயரைக் கெடுப்பதற்காகவே இவள் பிறந்திருக்கிறாள் எனச் சிலர் கூறுவார்.  அப்படி நடந்தது உண்மையா? என்றால் உண்மைதான்.  ஒருவர் நல்லவராக வளருவதற்குப் பெற்றோர் மட்டுமல்ல, சமுதாயமும் ஒரு காரணம்; அதையும் தாண்டி மூளையில் ஏற்படும் மாற்றங்களும் காரணமாக அமையலாம்.   ஆண்டவருக்குப் பயந்து நடந்த ஒரு பெற்றோருக்கு ஒரே ஒரு மகள்.  அழகுபடுத்தி, கேட்டதெல்லாம் வாங்கி கொடுத்து, சீராட்டி, பாராட்டி மகிழ்ந்தனர்.  மகளை உயர்ந்த நிலைக்குக் கொண்டு வரவேண்டும் என்று மிகவும் பிரயாசப்பட்டுப் பணத்தைக் கல்விக்காகத் தண்ணீராக இறைத்தனர்.  தன் மகள் மீது அசையாத நம்பிக்கையும், பெரிய கனவுகளையும் வைத்துச் சிந்தித்துக் கொண்டிருந்த அவர்களுக்குத் திடீரென்று, காவல் நிலையத்திலிருந்து ஒரு தொலைப்பேசி வந்தது.  உங்கள் மகள் திருமணம் பண்ணிக்கொள்ள விரும்பியுள்ளாள்.  எனவே அது விஷயமாகப் பேசவேண்டும்.  காவல் நிலையத்திற்கு வாருங்கள் என அழைப்பு வந்தது.  பெற்றோர் பதறிப்போய், என் மகளா அப்படியிருக்காதே என்று போனில் கூறினர்.  இருப்பினும் காவல் நிலையம் நோக்கி வ

எதிர்மறையான பெற்றோர்

Image
சில பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு Negative Role Model-லாக வாழ்ந்து அவர்கள் வாழ்க்கையைப் பாழாக்குகின்றனர்.  சில பிள்ளைகளிடம் உங்கள் வாழ்க்கையின் (Ambition) எதிர்காலம் என்ன ?  என்று கேட்டால் மருத்துவர், இஞ்சினியர், ஆடிட்டர், கலெக்டர் என்று கூறுவது வழக்கம்.  ஆனால் இந்த வழக்கத்திற்கு மாறாகச் சில பிள்ளைகளிடம் வித்தியாசமான Ambition இருக்கிறது.  அது ஏன் என்பதை டாக்டர். விஜயராகவன் குறிப்பிடும்போது எதிர்மறையான பெற்றோர்களின் வழிகாட்டுதலும், ஊக்குவிப்பதுமே காரணம் என்கிறார்.     ஒரு இளைஞனிடம் உன்னுடைய Ambition என்ன? Role Model யார் என்றால், பக்கத்து வீட்டு Uncle தான் Role மாடல்,  அவரைப் போல் Arts College-யில் படிக்க வேண்டும்.  அந்தக் குறிப்பிட்ட துறையில் பணிபுரிய வேண்டும் சம்பளம் போக, பணம் தேடி வரும், கார், வீடு, பங்களா, வெளியே சுற்றுலா போனால் எல்லாம் இலவசம்.  இதை விட்டு விட்டு, டாக்டருக்குப் படித்து, துக்கம் இல்லாமல் வேலைச் செய்வதும், Engineer படித்து விட்டு கைகட்டி நின்று வேலைபார்ப்பதும் சுத்த வேஸ்ட் என்று கூறிமுடித்தான். காரணம் தாய் தன்னுடைய மகனைப் பார்த்து, பாருடா நீயும் அந்த Uncle மாதிரி ஜாம்

பிள்ளைகளின் திறனைப் புரிந்துக்கொள்ளும் தாய்

Image
கணவனை இழந்ததினால் தொழிலில் மிகப்பெரிய சரிவு வந்தது.  அந்தக் கைம்பெண்ணுக்கு.  எப்படியாகிலும் குடும்பக் கவுரவத்தை நிலைநிறுத்த எண்ணிப் பல இலட்ச ரூபாய் கடனாகப் பணக்காரரிடம் வாங்கினாள்.  பல்வேறு முயற்சிகள் எடுத்தாலும் அனுபவம் இல்லாததால் தொழிலில் பணம் எல்லாம் கரைந்துபோனது.   கடன்கொடுத்தவர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பணத்தைக் கேட்டார்.  அந்தப் பெண்மணியோ தன்னுடைய நஷ்டத்தின் காரணமாகப் பணத்தைத் திருப்பிக் கொடுக்க முடியவில்லை.  சீக்கிரத்தில் கொடுத்து விடுகிறேன் என்று Promise பண்ணிப்பார்த்தாள்.  ஆனால் காலம்தான் கடந்ததே தவிரப் பணம் திரும்ப வராததால் கோபத்தோடு நேரிலேயே வீட்டிற்கு வந்தார்.  கன்னா பின்னா என்று கத்திக்கொண்டே வீட்டுக்குள் நுழைந்தார்.  முன் அறைக்கு வந்தவர் திடீரென்று  வாயடைத்து நின்றார்.  கைம்பெண்ணின் மகளைப் பார்த்து ஆச்சரியப்பட்டார்.  கோபம் தானாக நீர் பட்டது போல் குளிர்ந்தது.  அந்த இளம் பெண்ணிடம், தாயார் எங்கே என்று மெதுவாகக் கேட்டார்.   கடன்கொடுத்த பணக்காரன் அந்தக் கைம் பெண்ணிடம் பேசிய பின், பணம் கொடுக்க உனக்கு முடியாவிட்டால் உன் மகளை எனக்குத் திருமணம் செய்துகொடு என்று மெதுவாகப் பேச்

படி....! படி.....! படி......!

Image
ஒரு நாள் ஒரு குடும்பத்திற்குச் சென்றிருந்தேன்.  குடும்பத்தில் உள்ள பிள்ளைகளைப் பற்றி விசாரித்தேன்.  ஒழுங்காகப் பாடகர் வரிசையில் வந்து பாடும் அவர்கள்   மகனைப் பற்றிக் கேட்டேன். ஏன் ஆலயத்திற்கே அவன் வரவில்லையே, ஏதாவது சுகம் இல்லையா என்றேன்.  பெற்றோர் சிரித்துக் கொண்டே சொன்னார்கள்.  ஐயா இரண்டு வருஷம் அவனை நீங்க இனிப் பார்க்கவே முடியாது.  அவன் +1 படிக்கிறான், எனவே +2 பாடங்களுக்கு டியூசன் போகிறான்.  ஞாயிற்றுக் கிழமையும் டியூசன் உண்டு.  அதனால பாடகர் குழுவுக்கும் வரமாட்டான்,  ஆலயத்திற்கும் வரமாட்டான்.  காலையில் 5 மணிக்கு Maths Tuition ஆரம்பிச்சு School, அப்புறம் இரவு 9 மணிக்குத்தான் எல்லாம் முடிந்து வருவான் என்றார்கள்.  எனக்கு  ஷாக்காக இருந்தது.  என்னப்படிப்பு படிக்கிறான்.  ஆலயம் கிடையாது.  பண்டிகை கிடையாது.  சுகதுக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக்கூடாது. பகலில் வீட்டில் இருக்கக் கூடாது என்றால் அவன் பிள்ளையா அல்லது Computer- ரா என்ற கேள்வி எழும்பியது.         இரண்டு வருட ம்  முடிவதற்குள் உடலே உருகிப் போயிற்று.  Medicine படிக்கணும் என்ற பெற்றோரின் ஏக்கத்திற்கு மகன் பலியானான்.  பள்ளியிலும் பாடம்

தவறுகளை நாசுக்காகக் கூறும் பெற்றோர்

Image
ஒரு இல்லத்திற்குச் சென்றிருந்தேன்.  அந்த குடும்பத்தின் தலைவர் மகிழ்ச்சியோடு என்னை வரவேற்றார்.  மகனை எங்கே என்றேன்.  உடனே அவனை அழைத்தார்.  அந்த பையன் தயங்கித் தயங்கி என் முன் வந்தான்.  எப்படி இருக்கிறாய்? என்ன படிக்கிறாய்? என்று அன்போடு வினவினேன்.  அதற்கு மெதுவாகப் பதிலுரைத்தான்.  உடனே அந்தத் தகப்பனாருக்குக் கோபம் வந்து விட்டது.  உடனே மகனைப் பற்றிக் குறைவாகத் திட்டித் தீர்த்துவிட்டார்.  ஒழுங்காகப் பள்ளிக்குச் செல்வது கிடையாது.  எப்படியும் ஒரு பாடத்திலாவது fail ஆகி விடுவான்.  தூங்கும்போது மட்டும் கும்பகர்ணன் மாதிரி தூங்குவான் என்று மகனை என் முன்னேயே குறை கூறிக் கொண்டே இருந்தார்.  அச்சிறுவன் கண்கள் கலங்கி, கண்ணீர் தாரைதாரையாய் வடிந்தது.  உடனே அவனைப் பார்த்து, ஐயாவிடம் தான் உன்னைப் பற்றிக் கூறுகிறேன்.  ஐயா உனக்காக ஜெபிப்பாங்க.  உன் நல்ல நிலைக்காகத்தான் இப்படிச் சொல்லுகிறேன்.  எதற்கெடுத்தாலும் உடனே அழுது விடுவான் என்று மீண்டும் பேசத் தொடங்கினார். இன்றைக்குப் பலர் தங்கள் பிள்ளைகளைக் குறித்து அவர்கள் முன்னிலையிலேயே குறை கூறத் தொடங்கி விடுகின்றனர்.  இப்படிப் பேசினால் பிள்ளைக்கு மானம் போய் விடு

கலப்புத் திருமணம்

Image
கவுன்சிலிங் பெறுவதற்காக ஒரு இளம் பெண் வந்தாள்.  நல்ல ஒரு உத்யோகத்தில் இருந்தாள்.  கடவுள் பக்தியுடையவளாகக் காணப்பட்டாள்.  அதைப்போன்று அவள் வேலை பார்த்த இடத்தில் நல்ல வேலை பார்த்த இளைஞன் ஒருவன் இருந்தான்.  அவனும் கடவுள் பக்தியுடைய கிறிஸ்தவன்.  இருவரும் ஒரே சமயத்தைச் சார்ந்தவர்கள், ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்தவர்கள்.  இருவரும் திருமண வயதை அடைந்தார்கள்.  ஆகவே பெற்றோர்கள் அறிந்து திருமணம் செய்து வைக்க முன் வந்தார்கள்.  கடைசி வேளையில் தான் தெரிந்தது ஒரே இனத்தை சார்ந்தவர்களாயினும் உட்பிரிவுகளில் ஏற்றத்தாழ்வு காணப்பட்டது.  எனவே குடும்பத்தில் சலசலப்பு ஏற்பட்டது.  எப்படி நமது மகனுக்கு இந்தப் பெண்ணை முடிப்பது என்று பையனின் தாயார் முறுமுறுத்தார்கள்.  ஆனால் தகப்பனாரோ அதைப் பெரிதாகக் கருதாமல் நாம் கிறிஸ்தவர்கள் தானே.  இதுவெல்லாம் பெரிதல்ல என்றார்.     பெண் வீட்டார் மனம் உவந்து திருமணம் செய்து வைக்க முன் வந்தனர்.  இறுதியாக ஆண்டவர் சந்நிதியில் சிறப்பாகத் திருமணம் நடந்தது.  திருமணம் முடிந்த மறுநாளே மணமகளோடு மாமியார் பேசவில்லை.  மணமகளுக்கு மிகுந்த வருத்தத்தைக் கொடுத்தது.  மாமியாரோ தன் மகனைத் தனிக்குடித

அந்நிய நுகத்தில் பிணைப்படாதே...!

Image
  ஒரு பெண்ணின் தகப்பனார் என்னிடம் வந்து ஒரு விளக்கம் வேண்டுமையா என்று கேட்டார்கள்.  தயக்கத்தோடு பேச ஆரம்பித்தார்கள்.  ஐயா, என் மகளுக்கு வரன் பார்க்கிறோம்.  சில ஆண்டுகளாகவே திருமணத்திற்கு முயற்சி எடுத்தோம் எல்லா வரன்களும் சரியாக அமையாமல் போய்விட்டது.  ஆனால் தற்பொழுது நன்கு படித்த, நல்ல வேலை பார்க்கின்ற ஒரு மணமகன் கிடைத்திருக்கிறான்.  ஆனால்... என்று இழுத்தார்கள். சொல்லுங்க என்றேன்.  பையன் கிறிஸ்தவன் அல்ல.  அதுதான் ஒரு குறையாக இருக்கிறது.  கிறிஸ்தவ மார்க்கத்திற்கு வருவதற்கு பையன் வீட்டார் தயங்குகிறார்கள்.  எனவே ஆலயத்தில் வைத்துத் திருமணம் செய்யாமல், பொது இடத்திலோ அல்லது வீட்டிலோ வைத்துத் திருமணம் செய்து கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள்.   நாங்களும் திருமணத்திற்கு வரன் பார்த்து இளைத்துப்போய் விட்டோம்.  எங்களுக்கும் பையன் மிகவும் பிடித்து விட்டது.  இந்த வரனை விட்டு விட்டால் எப்படி அமையுமோ என்று நினைக்கிறோம்.  நாட்கள் ஆக ஆக எப்படியாவது என் மகள் மணமகனை நம்முடைய வழிக்குள் கொண்டு வந்து விடுவாள் என்று கூறி திருப்திப்பட்டுக் கொண்டார்கள்.   நான் கேட்டேன், ஐயா உங்கள் மகள் சண்டே ஸ்கூல்-இல் பிள்ளைகளுக

சிரமங்களை ஏற்க ஊக்குவிக்கும் தாய்

Image
ஒரு குடும்பத்திலே தன் பிள்ளைகளுக்கு எந்த ஒரு வேலையையும் கொடுக்காமல் தாயே அத்தனை வேலைகளையும் இழுத்துப் போட்டுச் செய்தார்கள்.  சாப்பாடு செய்யக் கூடப் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்கவில்லை.  தன் பிள்ளைகள் தன்னைப் போல் வேலை செய்து கொள்ளமாட்டார்கள்.  வேலைக்காரி வைத்துக் கொள்ளுகிற வீட்டில் தான் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்று பெருமையாகப் பேசிக் கொள்வார்கள்.  பிள்ளைகளுக்குத் திருமணமும் செய்து கொடுத்தார்கள்.   தனிக்குடித்தனம் சென்றனர்.  வேலைக்காரியை வைத்து வேலை செய்தனர்.  வேலைக்காரி திடீரென வேலைக்கு வராமல் நின்று விட்டாள்.  முன் பின் தெரிவிக்காததால் உணவு செய்ய முடியவில்லை.  முதல் நாள் Hotel-இல் வாங்கிச் சாப்பிட்டனர்.  இரண்டாவது நாளும் வேலைக்கு வரவில்லை.  உடனடியாகப் புதிய வேலைக்காரியும் கிடைக்கவில்லை.  கணவன் தன் மனைவியைப் பார்த்துச் சாப்பாடு செய்யச் சொன்னார்.  மனைவியோ உணவைப் பாயாசம் போல் சமைத்து வைத்தாள்.  குழம்பை வாயில் வைக்க முடியவில்லை.  கணவன், மனைவி மீது கோபப்பட்டார்.  நீ போய் உங்கள் அம்மாவிடம் 15 நாள் சமையல் படித்து விட்டுப் பின்பு வீட்டிற்கு வந்தால் போதும் என்று அனுப்பி வைத்தார்.  இப

குணசாலியான பெண்ணின் இரகசியம்

Image
என் மகள் நான் சொல்லுகிறதைக் கேட்கவே மாட்டேன் என்கிறாள், குறிப்பாக Dress விஷயத்தில் எனக்கும், என் மகளுக்கும் இடையே எப்பொழுதும் யுத்தம்தான் நடக்கிறது.  ஜவுளிக் கடைக்கு மகிழ்ச்சியாகச் சென்று திரும்ப முடியல.  அவள் போடுகிற Dress ஐப் பார்த்து மத்தவங்க எல்லாம் சிரிக்கிறாங்க.  ஏன் இப்படிப் பிள்ளையை வளர்க்கிறாய் என்று என்னிடம் கேட்கிறார்கள்.  எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை என்று கண்கலங்கினார்கள்.  சரி கவலைப்படாதிங்க.  அவள் எப்பொழுது இருந்து இப்படி மாறியிருக்கிறாள் என்றேன்.  அதற்கு அவள் சிறு பிள்ளையாக இருக்கும் போதே இப்படித்தான் dress போடுகிறாள் என்றார்கள்.   அப்படியானால் சிறு பிள்ளையாக இருக்கும் பொது நீங்க தானே dress select பண்ணியிருப்பீங்க என்றேன்.  ஆமா, அப்பொழுது modern dress போடும் போது அழகாக இருந்ததால் போட்டு மகிழ்ந்தேன்.  ஆனால் இப்பொழுது பெரிய பிள்ளையாகி விட்டாய் இப்படி போடாதே என்றாள் அதற்கு உடன்படமாட்டேன் என்கிறாள் என்றார்கள்.   குணசாலியான பெண்களே dress விஷயத்திலே உங்கள் பிள்ளைகளைச் சரியாக வழிநடத்துவது உங்கள் கரத்தில்தான் இருக்கிறது.  சிறு பிள்ளையாக இருக்கும்போதே சரியான உடைகளைத் தேர்

இணையதளத்தில் பிள்ளைகளுடன் பெற்றோர்

Image
காலை வேளையிலே ஒரு குடும்பத்தைச் சந்திக்க சென்றிருந்தேன்.  வீடு மிகவும் அமைதியாக இருந்தது.  இருட்டறையில் உட்கார்ந்திருந்த அவர்கள் மகனைப் பார்த்தேன்.  அவன் Computer Game- இல் மூழ்கியிருந்தான்.  அப்பொழுது தான் புரிந்தது இன்று இளம் தலைமுறையினரை எந்த அளவிற்கு  internet  and  computer game பிறரிடம் இருந்து பிரிக்கிறது என்பது. ஆண்கள் ஆங்காங்கே சுற்றி வந்தாலும், ஒருதாய் தன் பிள்ளையைச் சரிதானப் பாதையில் வழி நடத்த வேண்டியது மிகவும் முக்கியம்.  நமது பிள்ளைகள் சிறுவர்களாக இருக்கும் போது சாலையைக் கடக்க முற்படும் போது, அவர்கள் கரங்களைப் பிடித்து வழி நடத்துவோம் அல்லவா! அதைப் போன்று வலைத் தளங்களில் பிள்ளைகள் நுழையும் போது வழி நடத்துவது மிகவும் அவசியம்.   கல்லூரிக்குச் செல்வதற்கு முன்பே பிள்ளைகள் வலைத் தளங்களில் நுழைந்து விடுகிறார்கள்.  Project பண்ண வேண்டும் என்று கூறி வலைத்தளத்திற்குள் சென்று விடுகின்றனர்.  WhatsApp, Facebook -இல் முகம் தெரியாத பல நபர்களிடம் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளுகின்றனர்.    பலசிக்கலான நபர்களிடம் தொடர்பு கொண்டு, தவறான வாழ்வுக்குள் செல்லக்கூடிய சூழலும் ஏற்படுகிறது.  குறிப்பாக இரவ

பிள்ளைகளுக்கு தைரியமூட்டும் பெற்றோர்

Image
கவுன்சிலிங் பெறுவதற்காக ஒரு பெண்ணை அழைத்து வந்தனர்.  அப்பொழுது அந்தப் பெண்ணின் பெற்றோர் முதலில் என்னிடம் பேசினார்கள்.  ஐயா என் பிள்ளைக்கு வயது 35 ஆகிறது.  திருமணம் செய்து கொடுத்து விட்டேன்.  ஏதாவது சின்னக் காரியத்தை வீட்டில் யாராகிலும் சொல்லி விட்டால் அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் உடனே எனக்குப் போன் பேசிவிடுகிறாள்.  நீங்க கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்கய்யா என்கிறாள்.  அலுவலகத்தில் பணி புரியும் போதும் ஏதாவது பிரச்சனையென்றால் வீட்டிற்கு அழுதுகொண்டே வருகிறாள்.  சாப்பிட மாட்டேன் என்கிறாள்.  எனவே அவளுக்குத் தைரியத்தை நீங்கள் கொடுக்க வேண்டும் என்றார்கள்.   அந்தப் பெண்ணிடம் பேசும்போது, சிறுவயது முதலே பெற்றோரின் அரவணைப்பில் இருந்தவள் என்பதைப் புரிந்து கொண்டேன். பெற்றோரின் தன் பிள்ளைகள் மீது அதிக அன்பு வைத்திருந்தார்கள்.  என்ன பிரச்சனையென்றாலும் பெற்றோரே பேசி சரி செய்துவிடுவார்கள்.  பிள்ளைகள் தங்களது தேவைகள் எது இருந்தாலும் அதனையும் பெற்றோரிடம் கேட்டுத்தான் பெற்றுக் கொள்ள வேண்டும்.  கேள்விகளைக் கேட்டால் பெற்றோரே எல்லா விடைகளையும் சொல்லி விடுவார்கள்.  பிள்ளைகள் 100% பெற்றோரையே சார்ந்து இருந்தனர். 

குணசாலியான பெண்ணும், டீன் ஏஜ் மகளும்

Image
ஒரு வீட்டிற்கு ஜெபிப்பதற்காகச் சென்றிருந்தேன்.  அவர்களோடு பேசிக் கொண்டிருக்கும் போது தன்னுடைய டீன் ஏஜ் பிள்ளைகளைப்பற்றி என்னிடம் குறைகூற ஆரம்பித்தார்கள்.  என் மகள் என்னைப்பார்த்து "நான் ஏன் தான் உங்கள் வீட்டில் வந்து பிறந்தேனோ இப்படி உங்க நிமித்தமா நான் வேதனைப்படுகிறேன்" என்று என்னைப்பார்த்துக் கேட்கிறாள்.  நான் எதைக் கூறினாலும் அதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளுவது இல்லை.  என்னை மதிப்பதும் இல்லை.  என்னைப்பார்த்து, "உலகமே தெரியாத உங்களிடம் பேசுவதே சுத்த வேஸ்ட்" என்று கூறுகிறாள் என்றார்கள்.   அவர்கள் மகள் அருகில் நின்றுகொண்டிருந்தாள்.  என்னைப்பார்த்து சிரித்துக்கொண்டே, "அதுவெல்லாம் ஒன்னும் இல்லங்கைய்யா, எதெடுத்தாலும் advice பண்ணிக்கிட்டு, அங்கே போகாதே, இங்கே போகாதே, போனையே வச்சிக்கிட்டு இருக்காதே என்று நச்சரிச்சிக்கிட்டே இருக்காங்க.  அதனால்தான் எனக்குக் கோபம் வருது" என்று தன்னுடைய நியாயத்தை எடுத்துக் கூறினாள். சிறுவயதில் அம்மாவை விட்டுப் பிரிக்க முடியாத அளவு பாசத்தில் திளைத்து இருக்கும் பிள்ளைகள், டீன் ஏஜ் வந்ததும் அவர்களுடைய பேச்சும், கோபமும், எதிரான பார்வை

தனி அறையா...? சிறை அறையா...?

Image
  சிலர் மனைவி அல்லது கணவனை இழந்து தனியாக வாழ்கின்றனர்.  அவர்களின் பிள்ளைகள் அமெரிக்காவிலோ, ஆஸ்திரேலியாவிலோ, மும்பையிலோ வசிக்கின்றனர்.  பிள்ளைகள் பெற்றோரைத் தன்னிடம் வைத்துப் பார்க்க இயலவில்லை.  அமெரிக்கச் சுற்றுச் சூழல் வயதான பெற்றோருக்கு ஒதுக்கி கொள்வதில்லை.  சிலருக்கு அங்கு செல்வதற்கு விசா கிடைப்பதில்லை.  இச்சூழலில் தனது கிராமத்தில் தனித்து விடப்படுகின்றனர்.  கீழே விழுந்தால் தூக்கி விடுவதற்கு ஆள் இல்லை, சுகவீனம் வந்தால் தண்ணீர் கொடுப்பதற்கு ஆள் இல்லை.  அருகில் உள்ளவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று நினைத்தால் இறந்த பின் தான் தெரிவிப்பர்.   பெற்றோர் இறந்து உடன் ஆளுயர மாலை கொண்டு வந்து போட்டு விட்டு, கோயில் போன்று கல்லறையை அமைத்து, அணையா விளக்கை எரியவிட்டு, பிரியாணி சாதம் போட்டு அனைவருக்கும் விருந்து வைத்து விட்டு வாழ்கிற பிள்ளைகள் பலர் பெருகி வருகிறார்கள்.   மாரடைப்பு வந்ததும் நெஞ்சை பிடித்துக் கொண்டு உதவிக்குப் பிறரைக் கூப்பிடச் சென்றால் பிள்ளைகள் பல  மைலுக்கு அப்பால் உட்கார்ந்து கொண்டு கவலைப்படாதே அம்மா, உனக்கு ஒன்றும் செய்யாது, பக்கத்திலே யாரையாவது கூப்பிட்டுச் சென்று ஆஸ்பத்திரியி