Posts

Showing posts from January, 2022

மனித இனம் அழிந்துவிடும்

Image
குடும்ப கட்டுப்பாடு பற்றியதான கருத்தரங்கு இந்தியாவில் 1952ம் ஆண்டு நடைபெற்றது. அந்த கருத்தரங்கில் அப்பொழுது துணை ஜனாதிபதியாக இருந்த ராதாகிருஷ்ணன் பேசியது மக்களை மிகவும் சிந்திக்க வைத்தது. குழந்தைகளை, பெண்களின் கருப்பைக்கு கடவுள் அனுப்பி வைக்கிறார். அவர் விருப்பத்தில் நாம் எப்படி குறுக்கிட முடியும் என்று பலர் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால் அவர்களுக்கு எனது பதில் என்னவென்றால் குழந்தைகளை நமக்குக் கொடுக்கும் கடவுள் நமக்கு அறிவையும் கொடுத்திருக்கிறார். எதிர்காலத்தில் ஏற்படும் விளைவுகளை நாம் மனதில் கொண்டு நமது அறிவை நாம் பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால் மனித இனமே அழிய நேரிடும் என்று கூறினார்.   அன்று குடும்ப கட்டுப்பாட்டை வலியுறுத்தி பேசினார் துணை ஜனாதிபதி. ஆனால் இன்று இயற்கை முழுவதுமாக இரசாயணத்தினால் பாதிப்புக்குள்ளாகி வருகிறது. சமையலுக்கு பயன்படுத்தப்படும் வெண்டைக்காய் கூட பளபளப்பாக சந்தையில் வந்து இறங்கியதும், மக்கள் fresh ஆக இருக்கிறதே என்று அள்ளிக் கொண்டு போய் சமையல் செய்கின்றனர். ஆனால் அந்த வெண்டைக்காய் பறிப்பதற்கு முன்தினம் உயிரைப் பறிக்கக் கூடிய விஷம் நிறைந்த மருந்துகளை அடித்து அவ்வ

ஜெயிக்க வைக்கும் அம்மாக்கள்

Image
  வாழ்க்கையில் அம்மாவின் role என்பது ஆண் பிள்ளைகளாயினும், பெண் பிள்ளைகளாயினும் கொஞ்சம் ஓவராகவே தாக்கத்தை ஏற்படுத்திவிட்டுத்தான் உலகத்தை விட்டுப் போவார்கள். அதனால் பலருக்கு அம்மாதான் உலகமாகவே இருந்து வருகின்றார்கள். வீர சிவாஜி, மகாத்மா காந்தி போன்றோர் வாழ்க்கையில் தாயார் உள்ளத்தில் போட்ட விதையானது பின் நாட்களில் ஆல் போல் வளர்ந்து சிறந்த மதிப்புமிக்க ஆளுமைகளாக மாற்றி விட்டது. பெண் குழந்தைகள் வாழ்விலும் அம்மாக்களின் தாக்கம் என்பது அளவிட முடியாத அளவுக்கு இருக்கிறது. தமிழ் குடும்பத்தில் அவதரித்த இந்திரா நூயி என்ற குழந்தை சென்னையிலுள்ள Holy Angels பள்ளியில் கல்வியைக் கற்றுத் தேர்ந்தார். அதைத் தொடர்ந்து சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் வேதியியல் பாடத்தில் இளங்கலைப் படிப்பை முடித்து விட்டு, கல்கத்தாவில் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் MBAவை கையோடு முடித்தார். இந்தியாவில் கல்வி கற்று தேர்ந்த ஒருவர் எப்படி PepsiCo நிறுவனத்தில் தலைவராக மாறினார்? 'டைம்' பத்திரிக்கையின் புள்ளி விபரப்படி 2007 மற்றும் 2008க்கான உலகில் தாக்கத்தை ஏற்படுத்தும் 100 பேரில் ஒருவராக எப்படி மாறினார்! Forbes பத்திரிக்கை

மாற்றம் தேவை யாரிடம்?

Image
சார்லஸ் தன் மகன் பிரவின் காலை 8.00 மணி ஆகியும் படிக்காமல் படுத்து கிடப்பது எரிச்சலை ஊட்டியது. இரவு 9 மணிக்கே தூங்கிவிட்டான். இப்படி கரடி மாதிரி தூங்கி   விழித்தால் எப்படி MBBS  படிப்பான். அடித்துப் பார்த்தால் அவரை முறைத்துப் பார்க்கிறான். ஏசிப்பார்த்தால் ஏற இறங்க பார்க்கிறான். இவன் படித்து என்ன சாதிக்கப் போகிறானோ தெரியவில்லை என்று முணுமுணுத்துக் கொண்டே வெளியே கிடக்கிற நாயின் பக்கம் போனார். Friends சொன்ன மருந்தைக் கொடுத்துப் பார்ப்போம் என்று மருந்து பாட்டிலை எடுத்துக் கொண்டு, நாயைப் பிடித்து, வாயைப் பிளந்து, ஊற்றி விட்டார். நாய்க்கு சுவை பிடிக்கவில்லைப் போல், கத்திக் கொண்டே போனது. மாலை வேளையில் பிரவின் டியூசன் போகாமல் நண்பர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்தான். சார்லஸ்க்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. வாயில் வந்த படியெல்லாம் திட்டினார். நீ எல்லாம் படித்து என்னத்தை செய்யப் போகிறாய் என்று தெரியவில்லை. என் பணம் தான் wasteஆகப் போகும் போல் தெரிகிறது என்று புலம்பிக் கொண்டே போனார். வீட்டிற்குள் போனவர் முகத்தை கழுவி விட்டு வந்த போது பப்பி மிகவும் சுட்டியாக இருந்தது. உடனே ஞாபகம் வந்தது. ம

மூழ்கி விடுவேனோ?

Image
மா-சே-தூங் சீன தேசத்தின் சிற்பி என அழைக்கப்படுகிறார். சீனாவின் ஹீனன் மாநிலத்தில் உள்ள ஒரு சிற்றூரில் பிறந்தவர். படிப்பை முடித்து ஆசிரியராகவும், நூல் நிலையத்திலும் பணியாற்றியவர். பின்னர் கம்யூனிஸ்ட் கொள்கையில் ஈடுபாடு கொண்டு, கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து மன்னராட்சியை எதிர்த்தவர். 1934ல் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராகி, 1949 அக்டோபரில் சீனா குடியரசு நாடாக மலர்ந்த போது முதல் அதிபராக பதவி ஏற்றவர். நீச்சல் அடிப்பது அவருக்கு அலாதி பிரியம். நீச்சல் அடித்தால் உடல் வலிமையாக இருக்கும். எனவே அனைவரும் நீச்சல் அடிக்கும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும் என்று கூறுபவர். சீனாவில் புரட்சியை ஏற்படுத்திய இவர் நீண்ட விவாதங்கள் செய்ய வேண்டுமென்றால் கூட ஒரு நீண்ட நீச்சலைப் போட்டு விட்டு தான் மனிதர் வந்து அமருவார். வயது 60 ஆனாலும் நீச்சலை மட்டும் விட்டு விடவில்லை. குறிப்பாக சீனாவின் அதிபரான பின்பும், பாதுகாவலர்களின் எச்சரிக்கையையும் மீறி அலைகளுக்கு மத்தியில் நீச்சல் அடித்து வந்தால் தான் அவரின் மனதுக்கு ஆறுதலாக இருக்கும். என்ன மனுஷன், கொஞ்சம் கூட பயம் கிடையாதா என்று கேட்டவர்களுக்கு அவர் சொல்லும் பதில், "நாம்

மதிப்பை உயர்த்திக்கொள்ளுங்கள்

Image
இந்திய குத்துச்சண்டை வீராங்கனை L.சரிதா தேவி (Laishram Saritha Devi), மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்தவர். 2014 ஆம் ஆண்டு தென் கொரியாவில் நடை பெற்ற குத்துச் சண்டை போட்டியில் Lightweight பிரிவில் பங்குக் கொண்டார். அவர் விடும் குத்தில் எதிரில் உள்ளவர்கள் சரிந்து விழ, அரை இறுதிக்குள் நுழைந்தார். தீப்பொறியாய் குத்துவிட்டு வெற்றி பெற்று விடுவேன் என்று நிமிர்ந்து நிற்கும் போது, நடுவருடைய முடிவு அவருக்கு அதிர்ச்சியை கொடுத்தது. நடுவரின் முடிவை தவறு என்று விமர்சித்தார். அவரோடு இணைந்து அவருடைய கணவரும் நடுவர்களை தடித்த வார்த்தைகளால் திட்டினார். தொடர்ந்து நடந்த பதக்கத்தை பெறும் நிகழ்விலும் பதக்கத்தை வாங்க மறுத்து விட்டார். இவைகள் அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்த ஆசிய ஒலிம்பிக் குழு (Olympic Council of Asia) சரிதா மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழலுக்குள் சென்றது. அதன் பின்பு தனது கோபம், எரிச்சல், நடந்துக் கொண்ட விதம் தன் விளையாட்டு வாழ்க்கையையே முடமாக்கி விடும் என்று அறிந்து தனது தவறான  நடத்தைக்காக நிபந்தனையற்ற மன்னிப்பைக் கேட்டார்.  இறுதியாக அவருடைய மன்னிப்பு கடிதத்தை ஏற்று ஒழுங்காக பொறுப்புடன் நடந்த

சோர்ந்துப் போகாதே

Image
ஒவ்வொரு மனிதர்களும் ஊக்கம் இருக்கும் வரையில் தான் முயற்சி செய்து முன்னுக்கு வர நினைப்பார்கள். கொரானா பரவல் அதிகரித்த போது கிரிக்கெட் போட்டி பார்வையாளர்கள் இன்றி நடத்த தீர்மானித்தனர். ஆனால் பார்வையாளர்கள் இல்லாமல் விளையாடினால் நன்றாக இருக்காது என்று பலர் மனதுக்குள் முறுமுறுத்தனர். காரணம் உற்சாகமான கைத்தட்டும், விசில் சத்தமும் விளையாடுகிறவர்களுக்கு ஊக்க மருந்து போல் மாறி விடுகிறது. ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னும் ஓரு பெண் இருக்கிறாள் என்று கூறக்காரணம் எந்த ஒரு மனைவி கணவனின் செயல்களுக்கு ஊக்கம் கொடுக்கிறார்களோ அவ்வளவுக்குத்தான் கணவன் எழும்பி பிரகாசிப்பான். எதிர்மறையாக கணவனின் அல்லது மனைவியின் செயல்பாடுகளை சாடினால் சீக்கிரமே எல்லா முயற்சியையும் மூடிவிட்டு நீட்டி நிமிர்ந்து படுத்து விடுவார்கள். ஒரு சிறுவனுக்கு அவன் தந்தை கடிகாரம் ஒன்றை வாங்கிக் கொடுத்தார். அவனோ அதனை அக்குவேர் ஆணிவேராக பிரித்துப் பார்த்து விட்டு அப்படியே மீண்டும் சேர்த்து ஓடவிட்டான். இந்த அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு நண்பர்களின் வீட்டு கடிகாரங்களைப் பழுது பார்த்துக் கொடுத்தான். அந்த சிறுவன் பெரியவனாக மாறிய போது கிளாரா ஜே

சாவியாக இருங்கள்

Image
இன்றைய இளைஞர்கள் கல்லூரிக்கு விடுமுறை கொரானா என்ற பெயரால் பெறுவதினால், நேரத்தை செலவிட தெரியாமல் மணிக்கணக்காக கைப்பேசியில் கண் மயங்கி கிடக்கின்றனர். வாழ்க்கையில் செலவு செய்த நேரங்கள் மாத்திரம் திரும்ப ஒரு நாளும் வரப் போவதில்லை. உருண்டு கொண்டிருக்கும் பூமியை யாரும் நிறுத்தி வைக்க முடியாது. நாம் தான் பூமியோடு சேர்ந்து உருண்டு, திரண்டு கல்விச் செல்வத்தை சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும். பாட கல்வியை மட்டும் தேர்ந்தெடுத்தல்ல, விருப்பமுள்ள புத்தகங்களைக் கற்று மூளையை புஷ்டிப்பாக்கிக் கொள்ள வேண்டும், இல்லையென்றால் மூளையை கரையான் போன்று செல்போன் கொஞ்சம் கொஞ்சமாக கரைத்து விடும். அறிஞர் அண்ணா சிறந்த முதலமைச்சர். ஆனால் S.S.L.C யில் இரண்டு முறை தவறி, மூன்றாம் முறை கரை சேர்ந்தவர். M.A  முடித்து சட்டக் கல்லுரியில் காலடி எடுத்து வைத்தார். ஆனால் வறுமை அவர் காலை தட்டி விடவே fees கட்ட முடியாமல் மூன்று மாதத்திலே வெளி நடப்பு செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனால் பல நாட்டின் அரசியல் சட்டங்களை அரசியலுக்காகக் கற்று இந்திய அரசமைப்பையே மாற்ற வேண்டும் என்று உரக்க குரல் எழுப்பி அனைவரின் கைகளையும் பிசைய வைத்தவர். கல்வி

கடவுள் காட்டட்டும்

Image
அனேக குடும்பங்களில் பிள்ளைகளின் வாழ்க்கையைக்  குறித்தும், எதிர்காலத்தைக் குறித்தும் குறிக்கேட்பது போல் கேட்டு அதன் படி நடக்கிறார்கள். ஒரு வீட்டைக் கட்டினால்  அதற்கு நல்ல நேரம் பார்த்து திறப்பதும், வாஸ்து பார்க்க மாட்டோம் என்று வெளியே சொல்லிக் கொண்டாலும் பெரியவர்கள் சொல்லுகிறார்கள் என்று சம்பிரதாயங்கள் செய்வதும் இன்றும் குறைந்து விடவில்லை. மூடப்பழக்கம் என்பது பல்வேறு விதங்களில் குடும்பங்களில் மறைமுகமாகவும், நேரடியாகவும் நடந்துக் கொண்டே இருக்கிறது. திருமண வரன் பார்ப்பதில் ஜோதிடம் பார்ப்பது போல் மக்கள் ஊழியர்களிடம் குறிக் கேட்க ஆரம்பிக்கின்றனர். ஊழியர்கள் தங்கள் மனதில் உள்ளபடி கூறி மக்களை முட்டாள்களாக மாற்றி விடுகின்றனர். சிலர் நயவஞ்சகமான செயல்களையும் ஜெபம், தீர்க்கதரிசனம் என்ற பெயரில் செய்து விடுகின்றனர். விஜய பேரரசில் ஒரு அரசர் இருந்தார். அவருக்கு ஜோதிடம் மேல் அதிக நம்பிக்கை. எந்த காரியத்தைச் செய்தாலும், ஜோதிடரிடமே கேட்டுச் செய்வார். இந்த weaknessயை வேங்கை நாட்டு அரசன் புரிந்திருந்தான். அன்று வேங்கை மீது போர் புரிவதற்காக சூழுரைத்தான் விஜய பேரரசன். உடனே இந்த போரைத் தடுப்பதற்கு வேங்கை அரச

Powerful பெண்கள்

Image
ஆண்களைக் காட்டிலும் பெண்கள் மிகவும் புத்திசாலித்தனமாக பிறரை கணித்துவிடுகின்றனர். "நான் கூட இப்படி நினைக்கவில்லை, நீ எப்படி சரியாக அவன்/அவள் உள்நோக்கத்தை கண்டுபிடித்து விட்டாய்?" என்று ஆச்சரியமாக மனைவியைப் பார்த்து கணவன் கேட்பதுண்டு. பெண்களைப் பற்றி உளவியல் நிபுணர் டாக்டர் சாலினி அவர்கள் குறிப்பிடும் போது "...the female of the species is deadlier than the male” என்று குறிப்பிடுவார். காரணம் பெண் இனமானது ஆண்களைக் காட்டிலும் பழங்காலங்களிலே வேட்டையாடுவதிலும், தன்னுடைய குட்டிகளைப் பாதுகாப்பதிலும், ஞானமாக பிழைக்கும் திறன் உடையவர்களாகவே வாழ்ந்து வருகின்றனர். பெண் மிருகங்கள் எப்படி வேட்டையாடி தன் இனத்தை வாழ வைக்கிறதோ அப்படித்தான் மனித இனமும் கூட தன் பிள்ளைகளை காப்பதிலும், எதிர்காலத்தை அமைத்துக் கொடுப்பதிலும் மிகவும் கருத்தாக இருப்பார்கள். அன்று வட்டிக்கு கொடுத்தவர் வீட்டிற்குள் வந்து கண்டபடியெல்லாம் திட்டு திட்டு என்று திட்டித் தள்ளினான். தன் தந்தை தலை குனிந்து நின்றுக் கொண்டே இருந்தார். தந்தையின் நிலையை கண்டு மனம் உடைந்த சாலினி மெதுவாக தந்தையின் நிலையைக் கண்டு வருந்தி சமையல் அறை