Posts

Showing posts from June, 2021

தாக்கும் வலை தளம் தடுமாறும் குடும்பம்

Image
நாம் பார்க்கிற, கேட்கிற,வாசிக்கின்ற ஒவ்வொன்றும் நம் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும். நல்ல தகவல்கள் நல்ல குடும்பத்தை அமைக்க உதவிடும், தவறான செய்திகள் தவறான வாழ்க்கைக்கு நேராக நம்மை வழிநடத்திடும். இன்றைக்கு வலை தளங்கள் மூலம், தொலைக்காட்சிகள் மூலம் தொடர்ச்சியாக அருவிப் போன்று தகவல்கள் குடும்ப வாழ்வில் வந்து முட்டி மோதிக் கொண்டும், குடும்பங்களை உருட்டிப் போட்டுக் கொண்டும் இருக்கிறது. கிறிஸ்டியானோ ரொனால்டோ உலக பிரசித்தப் பெற்ற கால்பந்து விளையாட்டு வீரர்.   போர்ச்சுக்கலைச் சார்ந்த இவர் அநேக கால்பந்து ரசிகர்களால் தூக்கி சுமக்கப்படுகிறார்.   உலக அளவில் அதிகமான ரசிகர்களைத் தன்னகத்தே கொண்ட விளையாட்டு கால்பந்தாட்டம் தான். ஐரோப்பிய கால்பந்து விளையாட்டு போட்டிகள் நடந்துக் கொண்டிருக்கும் போது பத்திரிக்கையாளர்கள் அவரைச் சந்தித்தனர். அப்போது மேசையில் இரண்டு குளிர்பான பாட்டில்கள் இருந்தது. அவர் அதனை அகற்றிவிட்டு தண்ணீர் பாட்டிலை எடுத்துக்காட்டி, 'தண்ணீர் குடியுங்கள்' என்று கூறிவிட்டு பேசத் தொடங்கினார். இதனை உலகம் முழுவதும் பார்த்துக்கொண்டிருந்தது. அது மட்டுமல்லாமல் இந்தச் செயலா

தீர்மானிப்பதில் கவனம்

Image
"எனது ஓட்ட வாழ்க்கை முழுவதும் நான் கனவு கண்ட பதக்கமானது, தீர்மானிப்பதில் நான் செய்த சிறு பிழையால் என் கைகளிலிருந்து நழுவியது” என்று தனது சுய சரிதையில் எழுதியவர் பறக்கும் சீக்கியர் என்று புகழ்பெற்ற இந்திய தடகள நட்சத்திரம் மில்கா சிங். பாகிஸ்தானில் உள்ள கோவிந்தபுராவில் 1929ல் பிறந்தவர். இந்தியா பாகிஸ்தான் பிரிவின் போது அவரது கண் எதிரே பெற்றோர், இரண்டு சகோதரிகள், ஒரு சகோதரர் என 5 பேர் கொல்லப்பட்டனர். அவரது தந்தை உயிர் போகும் நிலை வந்த போது 'ஓடி விடு இல்லாவிட்டால் உன்னையும் சுட்டுக்கொன்று விடுவார்கள்' எனக் கூறியதால் இந்தியாவிற்குள் ஓடி வந்தவர். இந்திய எல்லையில் ரயிலில் பயணம் செய்வதவர்.   ஆனால் டிக்கெட் இல்லாமல் பயணித்ததால் திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.   டெல்லியில் இருந்த அவரது சகோதரி தான் மில்காவை விடுவித்தார். 1952ல் ராணுவத்தில் சேருவதற்கு முயற்சி எடுத்தது கைக்கூடியது. செகாந்திராபாத்தில் பணிபுரிந்த போது ஓட்டப் பந்தயத்தில் கலந்துக் கொண்டார். அவருடைய சிறப்பான ஓட்டத்தை பார்த்த பயிற்சியாளர் குருதேவ் சிங் அவரை ஊக்குவித்தார். முயற்சி திருவினையாக்கும் என்பதற்கினங்க ஆசிய விளையாட்

X-Ray கண்கள்

Image
மதிவண்ணன் டெல்லி பட்டணத்திலே நல்ல வேலைப் பார்த்து வந்தான். வயதான பெற்றோர்கள் சொந்த கிராமத்திலே வசித்து வந்ததால் தன் இளவயதின் மனைவியை ஊரிலேயே விட்டுச் சென்றான். தன்னுடைய மனைவி வங்கி ஒன்றில் வேலைச் செய்வதால் குடும்பத்திற்கு நல்ல வருமானம் வந்தது. மதி அடிக்கடி ஊருக்கு வந்துச் செல்வான். வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தது. கார், பங்களா என்று கிராமத்திலேயே உயர்ந்து நின்றது அவனது குடும்பம். செல்போனில் அடிக்கடி தன் மனைவியிடம் பேசிக்கொள்ளுவான். சிலவேளைகளில் அவன் பேசும்போது பிஸி பிஸி என்று வந்து விடும். இதனால் அடிக்கடி எரிச்சல் அடைய ஆரம்பித்தான் மதி. நம்மை விட முக்கியமான ஆள் யார்? யாரிடம் இவ்வளவு நேரமாக பேசிக் கொண்டு இருக்கிறாள்? மெதுவாக சந்தேகக் கோடு வாழ்க்கையில் படர ஆரம்பித்தது. ஊருக்கு வரும்போதெல்லாம் மனைவியின் செல்போனை  thorough வாக செக்பண்ண ஆரம்பித்தான். துவக்கத்தில் மனைவிக்கு புரியவில்லை.  போகப்போக சந்தேகக் கொடு சந்தோசக் கேடாக மாற ஆரம்பித்தது. தன் மனைவி யாரிடம் பேசுகிறாள்? எவ்வளவு நேரம் பேசுகிறாள்? எப்பொழுதுப் பேசுகிறாள்? சிரித்து சிரித்துப் பேசுகிறாளா? என வீட்டுக்கு அருகாமையில் உள்ளவர்கள் மூலம

எப்பொழுது கண்டிப்பது?

Image
இளைஞர்கள் குடிப்பது இன்று பெருகி வருகிறது. குறிப்பாக கிறிஸ்தவ இளைஞர்களும் இதில் மாட்டிக் கொள்ளுகின்றனர். வாலிப வயதில் வேலைக்குச் சென்று விட்டு நண்பர்களோடு இணைந்து மது அருந்த துவங்குகின்றனர். விளையாட்டாக ஆரம்பிக்கிற இந்த மதுப் பழக்கம் பின்பு விடமுடியாத அளவிற்கு போய் விடுகிறது. பெற்றோர் கண்டித்தால் பெற்றோரையே போட்டுத் தள்ளி விட வேண்டும் என்ற அளவிற்கு கொண்டுச்சென்று விடுகிறது. சமீபத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் இது போன்று ஒரு செயல் கிறிஸ்தவக் குடும்பத்திற்குள்ளே நடந்தேறியது. 60 வயது மதிக்கத்தக்க தகப்பனார் தனது மகனாலே அடித்துக்கொல்லப்பட்டார். காரணம் தனது வாலிப மகன் காலையிலேயே குடித்துவிட்டு வீட்டில் கலகம் பண்ணியுள்ளான். இதனை தகப்பனார் கண்டித்துள்ளார். இப்படியெல்லாம் குடித்துவிட்டு தொந்தரவுச் செய்கிறியே இது நல்லா இருக்குதா? என்று கண்டித்துள்ளார். இந்த வாக்குவாதமானது முற்றியது. குடித்துவிட்டு வந்த அந்த இளைஞன் அங்கு கிடந்த கம்பால் பெற்ற தகப்பனையே தாக்கியுள்ளார். நிலைதடுமாறிய அந்த தந்தை வீட்டிற்குள்ளேயே விழுந்தார். விழுந்த போது தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே மரித்துப் போய் விட்டார். இந்த

பாச மழைக்கு poison மழை

Image
குளிக்கும் அறைக்குள் இருந்து முக்கல் முனகல் சத்தம் கேட்டுக்கொண்டு இருந்தது. ஒரு நாள் இரண்டு நாளல்ல சில நாட்களாகவே கேட்டது. அந்த குளியல் அறை வீட்டோடு சேர்ந்திராமல் தனித்து இருந்தது. ஆகவே தெரு வழியாகச் செல்லும் அந்த கிராம மக்கள் காதுகளில் முனகல் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது. கிராமமாக இருந்ததால் துணிந்து மக்கள், குளியல் அறையை தட்டினர். திறந்து பார்த்தால் மக்களுக்கு தூக்கிவாரிப்போட்டது. 95வயது மதிக்கத்தக்க  அந்த தாயை மகன் குளிக்கும் அறைக்குள்ளே அடைத்து வைத்துள்ளார். வீட்டில் இருந்தால் வீடு நாற்றம் அடிக்கும் என்று குளியல் அறையையே அந்த தாய்க்கு வீடாக மாற்றிவிட்டார் அந்த கல்நெஞ்சர். தாய்க்கு வந்த பென்சன் பணத்தையும் எடுத்துப் பயன்படுத்தி விட்டு, தாயை வீட்டில் வைக்க மனம் அற்றுப்போனான். கிராமமக்கள் முதியோர் இல்ல நிர்வாகிகளுக்கு தகவலைத் தெரிவிக்க இறுதியாக அந்த தாயை முதியோர் இல்லத்தில் சேர்த்தனர். இன்று ஒரு ஆண் குழந்தைப் பிறந்து விட்டால் வீடெல்லாம் கூடி ஸ்வீட் வழங்கி ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். முதலாவது பிறந்த நாளுக்கு உறவுகளைக் கூட்டி பிரியாணிப் போட்டு கலக்கி விடுகின்றனர். மகன் படித்து பெரியாளா

சோம்பேறியே நீ எறும்பினிடத்திற்கு போ

Image
ஆபிரகாம் லிங்கன் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தபோதும் தன்னுடைய வேலைகளைத் தானேச் செய்துகொள்ளுவார். ஒரு முறை தன்னுடைய ஷூ (Shoe) விற்கு பாலிஷ் போட்டுக் கொண்டிருந்தார். அந்த நேரம் பார்த்து அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர் (செனட்டர்) ஒருவர் அதைப் பார்த்து விட்டார். ஆச்சரியப்பட்ட அவர் ஆபிரகாம் லிங்கனிடம் மிஸ்டர் பிரசிடெண்ட், உங்கள் ஷூவிற்கு நீங்களா பாலிஷ் போடுகிறீர்கள் என்றுக் கேட்டார். ஆபிரகாம் லிங்கன் சிரித்துக்கொண்டே "நீங்கள் மற்றவர்கள் ஷூ விற்கெல்லாம் பாலிஷ் போடுவீர்களா?" என்று கூறினார். எந்த பணியும் கேவலமானதல்ல, மனிதன் எவ்வளவு தான் உயர்ந்தாலும் தன்னுடைய பணியைச் செய்வதில் வெட்கப்பட வேண்டியதில்லை. உலகத்தில் உயர்ந்த பணி, தாழ்ந்த பணி என்று எடுத்துக்கொண்டு ஒரு வேலையும் எனக்கு ஏற்றப்படி செட் ஆகவில்லை. எனவே தான் நான் திருமணம் செய்துகொள்ளவில்லை என்று சில வாலிபர்கள் கூறுகின்றனர். கல்லூரிக்குச் சென்று படித்தவுடன் விவசாய வேலைச்செய்வது அற்பமானதாக எண்ணக்கூடாது.   பெற்றோர்கள் செய்கிறவேலையை அவமானமாக கருதி, அவர்களை பெற்றோர் என்று கூறுவதற்கு வெட்கப்படுகிற இளைஞர்கள், இளம்பெண்கள் பெருகி விட்டனர். நீங

குடும்பத்திற்கு நியாயமான வருமானம்

Image
குடும்ப வாழ்விற்கு வருமானம் என்பது முக்கியமான ஒன்று. அப்பொழுது தான் குடும்பத்தை சரியாக வழி நடத்திச் செல்ல முடியும். எனவே தான் திருமணத்திற்கு வரன் பார்க்கும் போதே மணமகன் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார். எவ்வளவு வருமானம் ஈட்ட முடிகிறது என்பதை பார்க்கின்றனர். ஆனால் வருமானம் சரியான வழியில் ஈட்டுகிறார்களா என்று கவனிப்பதில் சரியாக இருக்க வேண்டும். கிறிஸ்தவர்கள் தானே நியாயமாகத்தானே வாழ்வார்கள் என்று நினைத்த காலம் மலையேறிவிட்டது போல் தோன்றுகிறது. தூத்துக்குடியில் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவன் கைது செய்யப்பட்டான். அவன் பெயர் ஜோனத்தான் தோர்ன். இங்கிலாந்து  சட்ட அமலாக்க அமைப்புகள் மூலம் பல முறை போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். ஏறக்குறைய 21 முறை தண்டனையும் பெற்றுள்ளார். 2017 ஆம் ஆண்டு இந்தியாவிற்குள் நுழைந்தவர் யாரிடமும் சிக்காமல் வந்துள்ளார். இலங்கைக்கு தப்ப முயன்றபோது கியூ   பிரிவு போலீசாரிடம் மாட்டிக் கொண்டார். கிறிஸ்தவ பெயர்களைக்கொண்டவர்கள் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு செய்தித்தாள்களில் வரும் போது இறைப்பெயருக்கு அவமானத்தை கொண்டுவருவதாக அமைந்துவிடுகிறது. இறைமக்கள் நல

எங்கு போய்க்கொண்டிருக்கிறோம்?

Image
இன்றைய திருமண வாழ்வு என்பது பல்வேறு மாறுதல்களுக்குள் உட்பட்டு வருகிறது. குறிப்பாக ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு அமெரிக்காவில் 73% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்ற செய்தி இறைவனின் திட்டத்திற்கு எவ்வளவு மாறாக சென்று கொண்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஒரு ஆணோடு மற்றொரு ஆணும், ஒரு பெண்ணோடு மற்றொரு பெண்ணும் திருமண வாழ்வில் ஈடுபடுவதை பல நாடுகளும் அங்கீகரித்து வருகிறது. அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களில், முதல் முதலாக மாகா சூசெட்ஸ் மாகாணத்தில் தான் இந்த திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் கிடைத்தது. அதன் பின்பு இந்த சிந்தனை மற்றும் மாகாணங்களுக்குள்ளும்  பரவி அங்கீகரிக்கும் சூழல் ஏற்பட்டது. இறுதியாக அமெரிக்க உச்ச நீதிமன்றத்திற்கு போன வழக்குகளால் நாடு முழுவதும் ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொள்ள தடை இல்லை என்று 2015ஆம் ஆண்டு ஜூலை அங்கீகாரம் வழங்கியது. இவ்வகையான திருமணத்திற்கு 1996இல் 27% மட்டுமே ஆதரவு தெரிவித்தனர். ஆனால் தற்பொழுது நிலைமை முற்றிலும் மாறி 75% பேர் ஆதரவு அளிக்கும் நிலைக்கு மாறிவிட்டது என்பதை “கோல்ப்” என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. குறிப்பாக இளைஞர்களே மிக அதிகமாக

திருமணம்: இன்று உன் முறைப்படி, நாளை என் முறைப்படி

Image
கல்யாணமாவது,  கத்திரிக்காயாவது என்ற தலைப்பில் ஒரு செய்தியை வாசித்தேன். அது இன்றைய இளைய தலைமுறையை திருச்சபை வழிநடத்துவதில் எவ்வளவு தவறியிருக்கிறது என்பதைக்காட்டும் செயலாக உணர்ந்தேன். மேற்கு வங்கத்தைச் சார்ந்த பிரபல நடிகையும், பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் நுஸ்ரத் ஜகான் என்பவர், கொல்கத்தாவை சார்ந்த தொழிலதிபரான நிகில் ஜெயின் என்பவரை 2019 ஜூலை மாதம் 19ல் இந்து சடங்குகளின் படி படி துருக்கியில் திருமணம் செய்துக்கொண்டார். பின்னர் இரண்டு நாளுக்கு பின் ஜூலை 21 அன்று இருவரும் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். இரண்டு வருடங்கள் கூட தாக்கு பிடிக்காத இந்த திருமண வாழ்வு பிரிவில் போய் நின்றது. திருமணம் துருக்கியில் அந்நாட்டு சட்டப்படி நடந்ததால் இந்தியாவில் அது செல்லாது. எனது திருமணம் சட்டப்பூர்வமானது அல்ல. இது திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்ததாகத்தான் அர்த்தம் என்று அலட்சியமாக கூறிவருகிறார் நுஸ்ரத் ஜகான். திருமண வாழ்க்கை என்பது குடும்ப வாழ்வின் அடித்தளமாக அமைகிறது என்பதை  புரியாமல் இருக்கும்போது அலட்சியங்கள் தொடர்கின்றன. திருமறையானது ஒரு கிறிஸ்தவர் மற்றொரு கிறிஸ்தவரை திருமணம் செய்துகொள்

வறண்டு போன வாழ்வு

Image
இரவு வேளையில் திடீரென்று “ஓ ஓ” என்று சத்தம் கேட்கும், சற்றுநேரத்தில் விசில் பறக்கும். யார் இப்படி மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்கள்? இரவு வேளையில் ஊரே  தூங்கிக் கொண்டிருக்கும்போது யார் இப்படி விழித்திருந்து சத்தமிடுவது? திகைத்துப் போனான் டேவிட். புதிதாக வேலை நிமித்தமாக நகரத்துக்கு வந்தவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. சற்று மெதுவாக ஜன்னல் வழியாக உற்றுப்பார்த்தால், வாட்டசாட்டமான இளைஞர்கள் மூவர் நின்று கொண்டிருந்தனர். அவர்களுக்குள் சிரிப்பும், மகிழ்ச்சியும் ஓடிக்கொண்டிருந்து இது நடுநிசி என்பது அவர்களுக்கு மறந்துபோனது. சற்று நேரம் அமைதி, தொடர்ந்து விசில், ஓ ஓ என்ற சத்தம்  தெருமக்களுக்கு காதுகளைக் கிழிக்கும் வண்ணம் வந்துக்கொண்டே இருந்தது.   பொறுத்துக்கொள்ள முடியாத மக்கள் வெகுண்டு எழுந்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க, காவல் வண்டி வந்து சேர்ந்தது. நடு இரவில்  பஞ்சாயத்து. டேவிட்டுக்கு ஒன்றும் புரியவில்லை. காலையில் எழுந்தவுடன் அருகிலுள்ள வீட்டுக்காரரிடம் மெதுவாக நேற்று நடந்த சம்பவம் குறித்து கேட்டபோது பகீர் என்று இருந்தது. இதுவெல்லாம் சகஜம் சார். என்னச்சொல்லுவது. எங்க ஊரை குறிவச்சே கஞ்சாவை விற்கி

அவசரம் வேண்டாம்

Image
இறைப்பணியாற்றிக்கொண்டிருக்கும் ஒருவர் ஒரு நடந்த சம்பவத்தை பகிர்ந்துக்கொண்டார். அது இன்றைய இளைஞர்களுக்கும், திருமணவாழ்விற்கு  ஆயத்தப்படுபடுகிறவர்களுக்கும்  பயனளிக்கக்கூடியது. ஒரு இளைஞர் பதறிக்கொண்டு வந்தார். ஐயா என் ஊரில் உள்ள அத்தை இறந்து போய்விட்டார்கள் என்று கதறினார். போதகர் கேட்டார், “அதற்கு ஏன் இவ்வளவு மனங்கசந்து அழுகிறாய். நீ ஒரு வாலிபன், உனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது என்று கேள்விப்பட்டேன். அழாதே என்றார்.” இளைஞனோ, இல்லை என் வாழ்க்கையே போய்விட்டதே என்று மீண்டும் அழுதான். போதகர் மீண்டும் ஏன் உன் வருங்கால மனைவியின் தாயாரா? ஏன் உன் திருமணம் தடைப்பட்டுவிடுமா? அல்லது திருமணத்தை தள்ளி வைத்து விடுவார்கள் என்று வருத்தப்படுகிறாயா? என்று மீண்டும் கேட்டார்.  இளைஞனோ இல்லை, ஆனால் அந்த aunty  எச்ஐவியால் இறந்துள்ளார்கள். அவர்களோடு தவறான உறவை நான் வைத்திருந்தேன். எனவே எனக்கும் எச்ஐவி இருக்கும். எனவே திருமணம் செய்தால் என் வருங்கால மனைவிக்கும் வந்துவிடும். என் வாழ்க்கையே வீணாய் போய் விட்டதே என்று கதறினான். நீ முதலில் போய் மருத்துவமனைக்குச்  சென்று check பண்ணிவிட்டு வா என்றார் போதகர். இளைஞனு

திடீர் பாசம்

Image
தெலுங்கானா மாநிலத்தில் திடீரென்று மாமியார் ஓடிவந்து மருமகளை கட்டிப் பிடித்தார். இந்த பாசப் போராட்டத்திலிருந்து மருமகள் விடுவித்துக்கொண்டு போலீசில் போய் தன் மாமியார் மேல் புகார் கொடுத்துள்ளார். இது என்ன இவ்வளவு மோசமான மருமகளா என்று நினைக்கிறீர்களா? தெலுங்கானா மாநிலத்தில் ஒரு வாலிபருக்கும், ஒரு இளம் பெண்ணுக்கும் திருமணமானது. இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது. கணவர் வேலை நிமித்தமாக ஒரிசா மாநிலத்தில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இச்சூழலில் மாமியார்-மருமகள் பனிப்போர் அடிக்கடி நடந்துக்கொண்டே இருந்தது. இந்த சூழலில் மாமியாருக்கு கொரோனா தொற்று உறுதியானது. தனிமையில் இருந்த மாமியாருக்கு மருமகள் மேல் பாசம் பொங்கியது. தான் பெற்ற இன்பத்தை மருமகளுக்கும் கொடுக்க வேண்டும் என்ற அவா பெருகியது. எழுந்து புறப்பட்டார் மருமகளைத்தேடி, மருமகளைப் பார்த்தவுடன் கட்டிப்பிடித்துக்கொண்டார். அருகில் இருந்த குழந்தையையும் அணைத்து முத்தமிட்டு அன்பை வெளிப்படுத்தினார். தற்போது மருமகளுக்கும் கொரோனா உறுதியானது. மருமகளை பழிவாங்கும் மாமியார், மாமியாரை பழிவாங்க நினைக்கும் மருமகள் என்று எங்கு பார்த்தாலும் இந்த மோதல்கள் இருந்த

ஈகோ என்ற செருப்பு

Image
நீதிபதி S.வைத்தியநாதன் அவர்கள் குடும்ப வன்முறை சம்பந்தமான ஒரு வழக்கை விசாரித்து விட்டு கணவன் மனைவியாக வாழ விரும்பாத அவர்களைப் பார்த்து கூறிய அறிவுரை மிகவும் நேர்த்தியானது. “திருமணம் என்பது ஒப்பந்தம் அல்ல. அது ஒரு அருட்சாதனம் என்று தற்போதைய தலைமுறையினர் உணர்ந்துக்கொள்ளவேண்டும். ஈகோ, சகிப்புத்தன்மையின்மை ஆகியவற்றை காலில் அணியும் செருப்பாக கருதி வீட்டுக்கு வெளியில் விட்டுவிட வேண்டும். இல்லாவிட்டால் குழந்தைகள்தான் பாதிக்கப்படுவர்” என கூறிய பொன்மொழிகள் உலக மக்கள் அனைவருக்கும் பொருந்தக்கூடியது. மேற்கண்ட அறிவுரை கூறுவதற்கு ஒரு காரணம் இருந்தது. கணவர் அவர் மனைவியிடம் உள்ள கருத்து வேறுபாடு நிமித்தமாக விவாகரத்து கோரி வெற்றி பெற்றார். உடனே மனைவி குடும்ப வன்முறை தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்து கணவரின் அரசு வேலையை பறித்து ஆனந்தமடைந்தார். இவ்வாறு மற்றவர்களை துன்புறுத்துவதும், தங்கள் வாழ்க்கையில் ஈகோவுடன் போட்டிப்போட்டு தனியாக வாழ்ந்து காட்டுவதில் முன்னெடுப்பது, குடும்பங்களை எவ்வளவு சிதைத்து விடுகிறது என்பதை உணர்ந்தார். ஆகவே தான் ஈகோ,சகிப்புத்தன்மையின்மை போன்றவற்றை செருப்புக்கு ஒப்பிட்டார். ஆனா

சேலஞ்ச்

Image
வீரம் நிறைந்த அரசர் ஒருவர் இருந்தார். திறமையாக ஆளுகை செய்துவந்தார். பகைவர்களை புறமுதுகு காட்டி ஓடச் செய்து வந்தார். அவருக்கு ஒரு மகன் இருந்தான். தன்னை போல வீரம் நிறைந்தவனாய் நெஞ்சை நிமிர்த்தி தனக்குப்பின் ஆளுகை செய்ய வேண்டும் என்று விரும்பினார். எனவே போர் கலைகளை கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்தார். புலிக்கு பிறந்தது பூனையாகுமா? அவ்வளவு வீரம் செறிந்தவனாய் எதிராக சண்டை செய்தவர்களை துவேஷம் செய்யும் அளவிற்கு தேறினான். ஒரு நாள் பயிற்சி அளிக்கும் குரு அரசனை பார்க்க வந்தார். உங்கள் மகன் இன்னும் வீரக்கலைகளை கற்க வேண்டும். எனவே நாளை தினம் உங்கள் மகனை நம் நாட்டில் உள்ள அடர்ந்த காடுகளும், கொடிய வன விலங்குகளும் நிறைந்த காட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும். அப்பொழுதுதான் நல்ல வீரனாக திகழ முடியும் என்றார். அரசன் அதிர்ந்து போனான். மன அளவில் சற்று தடுமாறிய அரசன் வெளியே காட்டிக்கொள்ளாமல் தலையை அசைத்தான். அன்று மாலை குருவுடன், மகன் அம்புகளையும், வீரவாளையும் எடுத்துக் கொண்டு சென்றான். மிகுந்த அடர்ந்த காடு, எப்பக்கம் திரும்பினாலும் வனவிலங்குகளின் சத்தம் காதை கிழித்தது. எங்கும் இருள் சூழ்ந்துக்கொண்டே வந்தது. 

திருமணம் திருச்சபையின் பொறுப்பு

Image
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது மூன்றாவது திருமணத்தை வெஸ்ட்மினிஸ்டரில் அதில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் செய்துக்கொண்டார். பிரதமர் போரிஸ் ஏற்கனவே இரண்டு  முறை திருமணம் செய்து விட்டு விவாகரத்து செய்துள்ளார். அவருடைய இரண்டாவது மனைவி மரீனாவீலருக்கு நான்கு குழந்தைகள் உள்ளது. கடந்த 2018ம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்து கொண்டு பிரிந்து வாழ்கின்றனர். இதனை தொடர்ந்து கேரி சைமண்ட்ஸ் என்ற பெண்ணை விரும்பி சேர்ந்து வாழ ஆரம்பித்தார். இவர்களுக்கு 2021 ஏப்ரலில் ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. இச்சூழலுக்கு பின்பு இரண்டு பேரும் திருமணம் செய்துக்கொள்ள விரும்பி கத்தோலிக்க தேவாலயத்தில் வைத்து திருமணத்தை செய்துக்கொண்டனர். இந்த திருமணத்தைப் பொறுத்தவரையில் திருச்சபையின் பங்கு என்ன? திருமணத்தைப் பொறுத்தவரையில் திருச்சபையின் விளக்கம் இறுதியானதா? அல்லது திருமறையின் விளக்கம் இறுதியானதா? என்ற கேள்விகள் நமக்குள் எழுகின்றன. திருச்சபை ஒருவருக்கு எத்தனை முறைதான் திருமணம் செய்து வைக்கும்? குழந்தைகள் பிறந்த பின்பு ஒருவருக்கு திருச்சபை திருமணம் செய்து வைக்கிறது என்றால் ஆயர்களுடைய பங்களிப்பு என்ன? மக்கள் எப்படி வ

அப்பா நான் பார்க்கிறேன்

Image
ஒருமுறை ஒரு மாமரத்தோட்டத்தில் உள்ள மாங்காய்களைத் திருட நினைத்த ஒருவர் தன் மகனோடு சென்றார். தன் மகனை சற்று தூரத்தில் விட்டுவிட்டு அவர் மரத்தில் ஏறத் தொடங்கினார். தன் மகனிடம், மகனே யாராவது என்னை பார்க்கும் சூழல் வந்தால் எனக்கு ஒரு சத்தம் கொடு நான் மறைந்துக்கொள்ளுகிறேன்  என்றார். மகனும் சரி என்று கீழே நின்று கொண்டான். அவர் மேலே ஏறி காய்களை பறிக்க தொடங்கினார். மீண்டும் தன் மகனிடம் யாராவது என்னை பார்க்கிறார்களா என்று கேட்டார். மகன் “இல்லை” என்றான். அவர் தொடர்ந்து மாங்காய்களை திருடிக் கொண்டே இருந்தார். மீண்டும் மகனிடம் கேட்டார் யாராவது என்னை பார்க்கிறார்களா? மகன் பதிலாக ஆமா என்றான். பதறிப்போன அந்த மனிதர் வேகமாக மரத்திலிருந்து இறங்கி கீழே வந்தார். எங்கே இருந்து, யார் பார்க்கிறார்கள் என்று பதட்டத்துடன் மகனிடம் கேட்டார். மகன் தகப்பனிடம் நான் தான் உங்களை பார்த்து கொண்டிருக்கிறேன். உங்களுக்கு மற்றவர்கள் பார்க்கிறார்களா  என்று கவலை. ஆனால் நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று  கவலையே  இல்லையே அப்பா என்றான். நாம் நம்முடைய பிள்ளைகளை எப்படி வளர்க்கிறோம் என்பதே பலருக்கு தெரியவில்லை. நம்முடைய பிள்ளைகள