கிரஸா சரஸா
சமீபத்தில் ஒரு பள்ளியில் நடந்த நிகழ்ச்சி வீடியோவாக வைரலாகி கொண்டிருந்தது. அந்த பள்ளி மாணவர்கள் கஞ்சாவை பயன்படுத்துகின்றனர். அவர்களுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியையிடம் தர்க்கம் செய்யவும், அவர்களுடைய கைப்பையை எடுத்து வீசுவதும், chairயைக் கொண்டு தாக்குவதும், துப்பட்டாவை இழுத்து வீசுவதுமாக இருந்தது. இறுதியாக பள்ளி ஆசிரியை மாணவர்களால் தான் தாக்கப்பட்டதைக் குறித்து complaint கொடுத்துள்ளதும் வெளியானது. பள்ளிக்கூட மாணவர்கள் போதைப் பொருட்களை பயன்படுத்தும் அளவிற்கு போய்விட்டதா என்று நீங்கள் நினைக்கலாம். இதற்கு ஆதாரமாக தினகரன் செய்திதாளில் 27-12-21ல் ஒரு செய்தி வெளியானது. “திருப்பூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்யும் வகையில் பதுக்கி வைத்திருந்த 33 கிலோ போதை சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது” என. மாணவர்களை இன்று போதைக்குள் தள்ளுவதற்கான செயல்பாடுகள் மறைமுகமாக நடக்கின்றன. அதோடு மட்டுமல்லாமல் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்ய 120 வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இளம் வயதுள்ளவர்களை குறிவைத்தே பெட்டிக் கட