பிறர் தலையீடு
குடும்ப வாழ்க்கையில் நல்ல நண்பர்கள் உதவியாக இருந்தால் வாழ்க்கை மிகவும் இன்பமாக அமையும். ஆனால் தவறான நபர் வாழ்க்கையில் தலையிட்டால் வாழ்க்கையே தலைகீழாக மாறிவிடும். ஒரு இளம்பெண், திருமணம் முடிந்ததும் மிகுந்த மகிழ்ச்சியோடு கணவன் வீட்டிற்குச் சென்றாள். வீட்டில் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் முழுக்குடும்பமும் மாமியார் மற்றும் மாமியாரின் தங்கை ஆகியோரால் ஆட்டுவிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. அணுவேனும் மாமியாரின் சொல்லின்றி அசைய முடியாது. வீட்டிற்கு வந்த மருமகள் அவள் சொந்தக் காரியங்கள் எதைச் செய்தாலும் மாமியாரின் அனுமதியோடு தான் செய்ய வேண்டும். சுதந்திரப் பறவையாக வாழ்ந்த பெண்ணுக்கு இது பிடிக்கவில்லை. உடனே தன் பெற்றோருக்குச் செய்தியைச் சொல்ல, அந்த அன்பிற்குரிய பெற்றோர் உடனே தங்கள் மகளைத் தங்களோடு வைத்துக் கொண்டார்கள். தனித்து வாழ்வதற்கான பேச்சுக்க இடமில்லை என்று மாமியார் மறுக்க, நீதிமன்ற வாசலை மிதிக்கும் இழிவான நிலை. திருமணம் தங்கள் பிள்ளைகளின் நன்மைக்காக நடந்த்துகிறோமா அல்லது நமது சமுதாய அந்தஸ்துக்காக நடத்துகிறோமா என்ற கேள்வி எழுகிறது. பிள்ளைகளின் விருப்பு, வெறுப்புகளை விட மாமியார