விட்டுக்கொடுத்தல்
வாழ்வில் விட்டுக்கொடுத்து அனுசரித்து வாழ்வது என்பது இன்றியமையாததாகும். விட்டுக்கொடுத்தல் என்பது மனைவிக்கு மட்டும் அல்லது கணவருக்கு மட்டும் உரியது அல்ல. இருவருக்கும் உரியதாகும். விட்டுக்கொடுத்தால் நமது பிரிஸ்டிஜ் என்ன ஆகும்? என்று யார் குடும்பத்தில் நினைக்கிறார்களோ அவர்கள் குடும்பம் சிக்கலைச் சந்திக்க நேரிடும். விட்டுக் கொடுப்பதால் ஒருவர் தாழ்ந்து விடுவதாகவும், மற்றவர் ஆதிக்கம் செலுத்துவதாகவும் நினைப்பது தவறு. நாம் செய்வது தவறு. எனவே இந்த காரியத்தில் நாம் பிடிவாதம் பிடிக்காமல் விட்டு விட வேண்டும் என்று நினைக்க வேண்டும். வறட்டு கவுரவம் பாரத்தல் கூடாது. ஆணாதிக்கச் சிந்தனையோ, பெண்ணாதிக்கச் சிந்தனையோ வாழ்வை வாழ்வை வளப்படுத்தாது. அவை வாழ்வை அழித்து விடும். ஒரு குடும்பம் இணைந்து வாழ வேண்டுமானால், விட்டுக்கொடுத்து அனுசரித்து வாழ்வது என்பது பல்வேறு சூழலில் இன்றியமையாதது. குறிப்பாக ஒருவர் தவறு செய்தும் விட்டுக் கொடுக்கவில்லையாயினும் பிரச்சினையை அப்பொழுது தற்காலிகமாக விட்டு விட வேண்டும். ஏனெனில் கோபத்தின் விளைவாக தான் நினைத்ததை சாதித்தே ஆக வேண்டும் என்ற மனப்பான்மை ஏற்படுவது வழக்கம். கோபத்தில் எ