அம்மா பொய் சொல்றீங்க
உத்திரபிரதேச மாநிலத்தில் இரட்டையராக பிறந்த 24 வயது நிறைந்த இருமகன்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டனர். இருவரும் 3 நிமிட வித்தியாசத்தில் பிறந்தவர்கள். ஒரே மாதிரியான உடை, ஒரே பள்ளி, ஒரே கல்லூரி என வாழ்க்கை முழுவதும் ஒன்றாகவே பயணித்தனர். இருவரும் ஐதராபாத்தில் வேலைப்பார்த்து வந்தனர். கொரோனா நிமித்தமாக வீட்டிற்கு வந்து, வீட்டிலிருந்தே அலுவலகப்பணி செய்துக்கொண்டிருந்தனர். எதிர்பாராதவிதமாக இருவருக்கும் தொற்று ஏற்பட்டது. இருவரில் ஒருவர் எதிர்பாராதவிதமாக இறந்தார். மற்றவர் போனில் தாயாரிடம் தன் சகோதரன் எப்படி இருக்கிறான் என்று விசாரித்தபோது மனதைக்கட்டுப்படுத்தி, அழுகையை கட்டுப்படுத்தி அவனை டெல்லி மருத்துவமனைக்கு மாற்றிவிட்டோம் என்று கூறினார். அதற்கு அவன் "ஏம்மா பொய் சொல்றீங்க என்று உடைந்துப் போய் பேசி போனை வைத்துவிட்டான். " சிறிது நேரத்தில் அவனும் இறந்துவிட்டான். பிள்ளைகளுக்கு நேர்மையையும், உண்மையையும், நீதியையும் கொடுத்து வளர்த்தாலும் சில வேளைகளில் நாம் பொய் சொல்ல வேண்டிய சூழல் வருகிறது. ஆனால் இவைகளை நாம் ஏற்றுக்கொள்ளுகிறோம். ஆனால் பெற்றோர்கள் நம்முடைய பிள்ளைகளுக்கு நல்ல மதிப்பீடுகளையோ