வெற்றியுள்ள வாழ்வுக்காக போராடு
Tom Dean என்ற பெயரை வாசித்த உடன் உங்களுக்கு நியாபகம் வருவது ஒலிம்பிக் போட்டி (2021). அதில் 200 மீட்டர் freestyle பிரிவில் தங்கம் வென்ற வீரர் தானே என்பது உண்மை தான். ஆனால் Tom Dean ஒலிம்பிக் போட்டியில் விளையாடுவாரா என்பதே கேள்வி குறியாக இருந்தது. கொரானா தொற்றினால் இரண்டு முறை பாதிக்கப்பட்டவர் தான் Tom Dean. வயது 21 தான் ஆகிறது. ஆனாலும் உள்ளம் தளராமல் உறுதியுடன் பயிற்சி செய்து தங்கத்தை தட்ட மனவலிமை இருந்துள்ளது. துவக்கத்தில் பிரிட்டன் ஒலிம்பிக் அணிக்குள் இடம் பிடிக்க முடியுமா என்று சந்தேகித்தனர். கொரானா தொற்றினால் முதல் முறை பாதிக்கப்பட்டவர் எதிர்பாராத விதமாக இரண்டாம் முறையும் கொரானாவின் கோரப்பிடியில் மாட்டிக் கொண்டார். இதன் விளைவால் நுரையீரல் பாதிக்கப்பட்டது. இருமலால் கஷ்டப்பட்டார். நீச்சல் பயிற்சிச் செய்வதற்கு இவை மிகவும் தடையாகவே இருந்தது. ஆனால் Tom Dean உள்ளமோ எப்படியாகிலும் ஒலிம்பிக் போட்டியில் பங்கு கொண்டு வெற்றியைப் பெற வேண்டும் என்ற அவா பெருகிக்கொண்டேப் போனது. உலகில் கோடிக்கணக்கான மக்கள் கொரானாவினால் பாதிக்கப்பட்டதில் சிலர் விரக்தியடைந்து தற்கொலைச் செய்துள்ளனர், பலர் மன