Posts

Showing posts from November, 2021

வாழ்க்கைக்கு யார் முன்மாதிரி?

Image
ஏறக்குறைய 55 வயது நிறைந்த ராஜு திருமண சான்றிதழ் பெறுவதற்காக வந்திருந்தார். இவ்வளவு வயதிற்குப் பின் எதற்காக வாங்குகிறார்கள் என்று யோசித்தேன். ஏனென்றால் அவருடைய பிள்ளைகளுக்கு எல்லாம் திருமணம் ஆகிவிட்டது. Sir, என்ன விஷயமாக திருமண சான்றிதழ் வாங்க வந்துள்ளீர்கள் என்றேன்? அவர் சிரித்துக்கொண்டே திருமணவாழ்வு போர் அடித்து விட்டது. அதனால் divorce வாங்கிக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளேன் என்றார். எனக்கு சற்று அதிர்ச்சியாக இருந்தது. ஏனென்றால் சில வருடங்களுக்கு முன் அவர் accident ஆன போது அவருடைய rare blood group கிடைக்காத சூழலில் அவருடைய மனைவியே இரத்தத்தை கொடுத்து காப்பாற்றினார்கள் என்பது எனக்கு நினைவில் இருந்தது. ராஜு தன் குடும்ப பிரச்சனையை எடுத்துக் கூறினார். அப்போது ஒரு சம்பவத்தை நான் அவரிடம் பகிர்ந்து கொண்டேன். ஒருமுறை D.L மூடி என்ற ஊழியரின் மனைவி அவரிடம் வந்து நம்முடைய பகுதிக்கு மூர் ஹவுஸ் என்ற ஊழியர் வந்திருக்கிறார். அவர் கடவுள் எவ்வளவாய் அன்புகூர்ந்தார் என்று ஒவ்வொரு நாளும் பேசுகிறார். போய் பார்த்துவிட்டு வருவோமா? என்று கேட்டார். D.L மூடி மிகப்பெரிய ஊழியராக அப்போது திகழ்ந்தவர். தனக்குத

எனக்கும் உன்னை பிடிக்கலை

Image
சலோமி கண்ணீரோடு வந்து ஆலயத்தில் ஜெபித்து முடித்து விட்டு அருகே நின்று கொண்டிருந்த என்னிடம் வந்தார்கள். ஐயா எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. என் மகனை நினைத்தால் என்னால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. சிறுவயது முதற்கொண்டே நான்தான் வளர்த்துள்ளேன். அவன் அப்பா அவன் 2 வயதாக இருக்கும்போதிலிருந்து வெளிநாட்டில் தான் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அவனுக்கு இப்பொழுது வயது 16 ஆகிவிட்டது. +2 படிக்கிறான். எதற்கெடுத்தாலும் என் மீது எரிச்சலோடே நடந்து கொள்ளுகிறான். அதோடு இருந்தால் பரவாயில்லை, என்னை அவனுக்கு பிடிக்கவே இல்லையாம். என்னை பார்க்கவும் பிடிக்கவில்லை என்று என்னை பார்த்து நேரடியாகவே சொல்லுகிறான். அவன் அப்பா தான் அவனுக்கு பிடிக்கும் என்று சொல்லுகிறான். இப்படி நன்றிகெட்ட பிள்ளையை நான் வளர்த்து என்ன பயன்? இப்பொழுதே என்னை பிடிக்கவில்லை என்கிறான் என்றால் நான் இருந்து என்ன பயன்? இவனுக்காக நான் வேலைக்கே போகாமல் விழுந்து விழுந்து வளர்த்து ஆளாக்கியது எல்லாம் வீணாயிற்று என்று சொல்லிவிட்டு சிறு பிள்ளையை போல் தேம்பித் தேம்பி அழுதார்கள். நான் அவர்களை பார்த்து உங்கள் மகனுக்கு என்ன response சொன்னீர்கள் எ

கவர்ச்சியா? கண்ணியமா?

Image
திருமண வீடு ஒன்றிற்கு சென்றிருந்தேன். மணமகன், மணமகள் இருவரும் நடிகர், நடிகைகள் போன்று அலங்கரிக்கப்பட்டு இருந்தனர். Sir, Madam இப்படி போஸ் கொடுங்க, அப்படி நில்லுங்க என்று திரைப்படத்தில் சூட்டிங் எடுப்பதை போல் எடுத்துக் கொண்டிருந்தனர். ஆலயத்திற்கு 10 மணிக்கு வருவதாக அறிவித்திருந்தாலும் திருமண மண்டபத்திலே 11 மணிக்கும் நடிகர்கள் போல் ரோல், கேமரா ஆன் என்று சொல்ல விதவிதமாக நடித்துக் கொண்டே இருந்தார்கள். வெளிநாட்டு கலாச்சாரத்தைப் போன்றே ஆலயத்திற்குள்ளும் நடந்துகொண்டார்கள். செய்தி  வேளை, பாடல் வேளை எல்லாமே அலட்சியம் பண்ணப்பட்டது. வாக்குறுதிகள் எல்லாம் சிரிப்போடும், ஏனோதானோவென்று கொடுத்துக் கொண்டும் இருக்க நண்பர்கள் செல்லில் பதிவு பண்ணிக்கொண்டு சுற்றி நின்று கொண்டார்கள். ஆலயம் என்ற உணர்வை மறந்தவர்களாக அங்கும் இங்கும் நடந்து கொண்டே இருந்தார்கள். ஆலய ஆராதனை என்பது ஒரு சம்பிரதாயமாகவே அவர்களுக்கு காணப்பட்டது. பல லட்சங்களை பெற்றோர்கள் செலவு செய்து பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றி வைத்து விட்டு அப்பாடா நம்ம பொறுப்பு முடிந்தது என்று அமர்ந்தார்கள். திருமணம் முடிந்ததும் மீண்டும் கேமிராகாரர்கள் வந்து ம

சிரமப்பட்டு சிகரத்தை அடை

Image
குறுக்கு வழியில் முன்னேறுவது என்பது ஏணியில் ஏறுவது அல்ல எரிமலையில் ஏறுவது என்று ஒரு சுவரில் எழுதப்பட்டிருந்தது. காரணம் ஆயிரக்கணக்கான மாணவர்கள் அங்கு பயின்று வந்தனர். இளைஞர்கள் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் மட்டுமே வளர்க்கப்படுகிறார்கள். எந்த படிப்பை படித்தால்  அதிக சம்பளம் பெறலாம் என்ற ஒற்றை சிந்தையுடனே படிக்கின்றனர். நாம் பார்க்கப்போகிற வேலையினிமித்தம் எத்தனை பேர் நன்மைப் பெறுவார்கள் என்ற சிந்தனையே இல்லாமல் போய் விட்டது. குறிப்பாக மருத்துவ படிப்புக் கூட சேவைச் செய்வதற்கு என்ன எண்ணத்தை இழந்து வருகிறது. மருத்துவம் சேவை என்ற நிலையிலிருந்து பணம் சம்பாதிக்கும் தொழிலாக மாறிவருகிறது. எனவே கோடிகணக்கான பணத்தை MBBS படிப்பதற்கே செலவு செய்யும் பெற்றோர்கள் பெருகிவிட்டனர். எல்லா பெற்றோருக்கும் தங்கள் பிள்ளைகள் தலைசிறந்தவர்களாக வந்து விட வேண்டும் என்று எண்ணுகிறார்களே தவிர கடினமாக உழைக்க வேண்டும் என்று எண்ணுவதில்லை. அப்படியே பிள்ளைகளும், சந்தோஷமாக நேரத்தை பொழுது போக்குகளில் செலவிட வேண்டும் ஆனால் உச்சியில் அமர வேண்டும் என்று எண்ணுகின்றனர். IAS ஆக வேண்டும். ஆனால் News Paper கூட படிக்க மாட்ட

Facebook காதல் Painful காதல்

Image
நண்பர் ஒருவர் வேகமாக இருசக்கர வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தார். அந்த வழியில் ஒரு இளைஞர் மிகவும் டிப்டாப்பாக உடை உடுத்தியவர் கையைக்காட்டி லிப்ட் கேட்டார். “ஐயோ பாவம்” நல்ல படித்த நபராக இருக்கிறாரே, லிப்ட் கேட்கிறாரே என்று வண்டியை நிறுத்தினார். வந்தவர் வாகனத்தின் பின் பகுதியில் அமர்ந்துக் கொண்டார். எங்கே போக வேண்டும் என்று கேட்டுக் கொண்டே நலம் விசாரித்துக் கொண்டும் வாகனம் 2 KM  தூரம் வரைச் சென்றது. திடீரென்று பின் இருக்கையில் இருந்தவர் கத்தியை நண்பரின் கழுத்துக்கு நேராக நீட்டி வண்டியை ஓரமாக நிறுத்து என்றார். அவர் அணிந்திருந்த மோதிரம், செயின், Cell எல்லாவற்றையும் வாங்கிவிட்டு, அவரது bikeயையும் எடுத்துக்கொண்டு,'சத்தம் போட்டால் குத்தி கொன்று விடுவேன்' என்று கூறிவிட்டு சிட்டாய் மறைந்துப் போனான். முன் பின் தெரியாத நபரை வாகனத்தில் ஏற்றுவதில் இவ்வளவு சிக்கல் இருக்கிறதென்றால் வாழ்க்கை  பயணத்தில் facebook மூலம் தொடர்பு கொள்ளும் நபர்கள் எவ்வளவு கொடூரமானவர்களாக இருப்பார்கள் என்பதை உணர்த்துமாறு கேரளாவில் ஒரு சம்பவம் நடந்தது. பாலக்காடு பகுதியில் வசித்த ஒரு இளைஞர் வயநாடு மாவட்டத்திலுள்ள ஒர

இளம் சுமை தாங்கிகள்

Image
மாணவர்கள் பள்ளி வாழ்க்கையை மகிழ்ச்சியாக நினைக்கிறார்களா? அல்லது பாரமாக நினைக்கிறார்களா? என்றால் பெருமபாலான மாணவ, மாணவியர் பாரமாகவே எண்ணுகின்றனர். 25 வருடமோ 50 வருடமோ கழித்து அந்த படித்த பள்ளிக்கூடத்தை நினைத்துப் பார்த்து பழைய மாணவர்கள் ஓன்று கூடி ஆசிரியர்களிடம் ஆசி வாங்கி இன்றும் மகிழுகின்றனர். ஆனால் இப்பொழுது படிக்கிற Matric, CBSE பள்ளி மாணவர்கள் அதே மனநிலையைப் பெறுவார்களா? பிள்ளைகள் ஆசிரியர்களின் உறவு நிலை எப்படி இருக்கிறது? பிள்ளைகளுக்கு ஆசிரியர்கள் பாடங்களை மகிழ்ச்சியுடன் கற்றுக் கொடுக்க முடிகிறதா? அல்லது பாடங்களை பிள்ளைகளுக்கு திணிக்கின்றனரா? 1 லட்சம் 2 லட்சம் என்று பணம் கட்டிப் படிக்கிற பிள்ளைகள் ஆசிரியர்களை உயர்வாக மதிக்கின்றனரா? பள்ளிக்கூடத்தை கோவிலைப் போன்று புனித இடமாக கருதுகின்றனரா? என்று யோசித்தால் நிலைமை தலைகீழாக மாறி வருகிறதை உணர முடிகிறது. மத்திய பிரதேசத்தை சார்ந்த ஆம்டோ என்ற கிராமத்தில் கல்வி கற்கும் 9ம் வகுப்பு மாணவர் தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் நம்மை சிந்திக்க வைக்கிறது. தனியார் பள்ளியில் படித்து வந்த அந்த மாணவர் நேரம் தவறாமல் பள்ளிக்குச் செல்லுபவர். வழக்கம் போல்

உம் ... என்று இருக்காதீங்க

Image
Dr. அப்துல் கலாமோடு பணிச் செய்கிறவர்கள் ஏதாவது தவறு செய்து விட்டால் அதனை கூச்சல் போட்டு பேசாமல் சிரித்துக் கொண்டே பேசி விடுவார். அதேப் போல் மற்றொரு தலை சிறந்த விஞ்ஞானி ஐன்ஸ்டீன் தன்னுடைய சார்பு நிலைக்கோட்பாட்டைப் பற்றி மக்களுக்கு விளக்கும் போது 'ஒரு அழகான பெண்ணுக்கருகில் 2 மணி நேரம் அமர்ந்திருந்தாலும் அது 2 நிமிடமாகத்தான் தான் தெரியும். ஆனால் ஒரு சூடான அடுப்பின் மீது 2 நிமிடம் இருந்தால் அது 2 மணி நேரம் போல் தான் தெரியும்' என்று அறிவியலை இளைஞர்களுக்கு சிரிக்க சிரிக்க கூறும் பழக்கம் உடையவராக இருந்தார். பிறரை சிரிக்க வைத்து மக்களை தன் வசப்படுத்துபவர்கள் எல்லாம் மிக சிறந்த படைப்பாளர்களாக, திறமைசாலிகளாக, மக்களை எப்பொழுதும் தன்வசப்படுத்துகிறவர்களாகவும், பிரச்சனைகளை லாவகரமாக கையாளும் சக்தி நிறைந்தவர்களாகவும் காணப்படுகின்றனர். நகைச்சுவை உணர்வு என்பது இன்று அனேகருக்கு என்னவென்றே தெரியாமல் போய் விடுகிறது. குழந்தைகளுக்கு ஒரு சிறிய சத்தம் கொடுத்தாலும் அதை கேட்டு உடனே சிரித்து விடும். நாம் விதவிதமாக சத்தம் கொடுக்க கொடுக்க பிள்ளைகள் சிரித்து சிரித்து வயிறு வலிக்கும் அளவிற்கு சென்று விடும். S

Home Accident

Image
மலைவாழ் மக்களிடையே பணிச்செய்வதற்காக இந்தியாவின் வட மாநிலப் பகுதிக்கு ஒரு குடும்பத்தினர் விருப்பப்பட்டு சென்றிருந்தனர். மக்களோடு மக்களாக பழகி வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தனர். ஒரு நாள் அவரின் மனைவி தண்ணீர் எடுப்பதற்காக அருகில் உள்ள ஓடை பகுதிக்கு சென்றிருந்தார். திடீரென்று மூச்சு இறைக்க ஓடி வந்தார். செத்தோம் பிழைத்தோமென வந்த அவர் வீட்டில் உள்ள கட்டிலில் அப்படியே விழுந்து விட்டார். என்ன என்ன நடந்ததென்று அவர் கணவர் கேட்க, மனைவி வாயிலிருந்து பூ...பூ.. என்று சொன்னாரேயன்றி வேறு ஒரு வார்த்தையும் வரவே இல்லை. என்ன நடந்ததென்று அவரால் சொல்லவும் முடியவில்லை. கண்களை மூடிக்கொண்டு வேர்த்து வியத்தவராக படுத்துக் கொண்டாள். சில மணி நேரத்திற்கு பின்பு ஆசுவாசப்படுத்திக் கொண்ட பின் எழுந்து உட்கார்ந்தார். தான் தண்ணீர் பிடிக்கப் போன ஓடையில் ஒரு புலிப் படுத்திருப்பதை அறியாமல் அருகில் போய் விட்டாள். பின்பு சுதாகரித்துக் கொண்டு தலை தெரிக்க உயிரைப் பிடித்துக் கொண்டு ஒடி வந்துள்ளாள். இப்படிப்பட்ட சூழல்களில் மனிதர்களை காத்துக் கொள்வதற்காக உடலில் ஹார்மோன்கள் சுரக்கிறது (Adrenaline Cortisol). இவைகள் தான் மனிதனுக்குள

மன்னிக்க வேண்டுகிறேன்!

Image
நானாவது அவனை மன்னிப்பதாவது? நான் உயிரோடு இருக்கும் வரையில் அது மட்டும் நடக்காது! நான் மன்னித்தாலும் எங்க அம்மாவைப் பற்றி பேசிய வார்த்தைகளை மட்டும் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது!! அதை எப்படி மன்னிக்க முடியும்? என்னைப் பற்றி பற்றி பேசியது கூட பரவாயில்லை என்று எடுத்துக் கொண்டாலும், மற்றவர்களைப் பற்றி பேசியதை என்னால் மறக்கவும் முடியாது, மன்னிக்கவும் முடியாது. நான் உயிரோடு இருக்கும் வரையில் அது மட்டும் நடக்காது என்று வீரவசனம் பேசுகிறவர்கள் தான் காவல் துறை வாசலிலும், நீதிமன்ற வாசலிலும் காத்து கிடப்பவர்கள். மன்னிப்பு கொடுப்பதும், மன்னிப்பை வேண்டுவதும் வாழ்க்கையில் இன்றியமையாதது. சிறிய தவறுகள் நாம் செய்வதால் கூட மற்றவர்கள் மனம் புண்படுமானால் அதற்கு வருத்தம் தெரிவிக்கப் பழகிக் கொள்ளவேண்டும். அப்பொழுதுதான் குடும்ப வாழ்வு என்பது மகிழ்ச்சி நிறைந்ததாகவே இருக்கும். குறிப்பாக சில பெற்றோர் கூட பிள்ளைகளை தவறாக தண்டித்து விட்டால் அதற்காக மனம் வருந்தி பிள்ளைகளிடம் வருத்தம் தெரிவித்துவிட்டால் பிள்ளைகள் பெற்றோர் உறவு என்பது வலுவாகவே அமையும்.  எனவே மன்னிப்பு என்பது செயலாக மாறும் போது மனிதனிடம் உள்ள உணர்

Window Shopping

Image
பண்டிகைக்கு துணி எடுப்பதற்காக ஒரு ஜவுளிக் கடைக்குள் என் குடும்பத்துடன் நுழைந்தேன். சில இருக்கைகள் மட்டும் போடப்பட்டிருந்தது. பெரும்பாலும் ஆண்கள் அவைகளில் உட்கார்ந்துக் கொண்டு கையில் செல்போனை நோண்டிக் கொண்டு இருந்தனர். பெண்களெல்லாரும் பரபரப்பாக ஒவ்வொரு துணியாக எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒரு பெண் அங்கே கடையின் அடுத்த பக்கத்திற்கு போய் விட்டாள். கணவரோ செல்லைப் பார்த்துக் கொண்டே இருக்க, அந்த பெண் அவரைப் பார்த்து இப்படி ஒரு மனுஷனைப் பார்க்கவே முடியாது! ஒரு interestயே கிடையாது. ஏனோ தானோவென்று உட்கார்ந்துக் கொண்டே இருப்பார். என்னோடு சேர்ந்து பிடித்திருக்கிறதா, பிடிக்கவில்லையா என்று ஒன்றும் சொல்லாமல் இப்படி வந்து உட்கார்ந்திருக்கிறார் என்று அவரைப் பார்த்து சத்தம் போட்டாள். அவரும் சமாளித்துக் கொண்டு அந்த chair ல் இருந்து எழும்பி அவள் பார்த்துக் கொண்டிருந்த பகுதிக்குள் வந்து அடுத்த ஒரு chair ல் இடம் பிடித்துக் கொண்டு மீண்டும் cellயை எடுத்தார். அப்படியே நான் அந்த இடத்தை விட்டு நகண்ட போது  எனது இனிய நண்பர் ஒருவர் அங்கே வந்திருந்தார். Hello என்று பேசிக்கொண்டிருக்கும் போது அவர் cell, ri

எப்பொழுது சுனாமி வரும்?

Image
குடும்ப வாழ்வில் கணவன் மனைவி இருவரும் ஒருமித்து 7 ஆண்டுகள் வாழ்ந்து விட்டால் அவர்கள் குடும்பம் ஏறக்குறைய சரியாக கரை போய் சேர்ந்து விடும். அதற்கு இடையிலே சுனாமி வீசி பிரிந்துப் போகக் கூடிய சூழல் வருமானால் காப்பாற்றி சேர்த்து வைக்க முற்பட வேண்டும். அவ்வாறு சேர்த்து வைத்து 7 வருடம் தள்ளிவிட்டால் அப்புறம் தடம் புரளாமல் செல்ல வாய்ப்பு கிடைக்கும். இந்தியாவிலிருந்து வெளிநாடுகள் முற்றிலும் மாறுபட்டு காணப்படுகிறது. குறிப்பாக அமெரிக்க ஐக்கிய தேசத்தில் 2010 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புள்ளி விபரத்தை நாம் வாசிக்கும் போது அப்பாடா நாம பரவாயில்லை போலிருக்குது என்போம். திருமணமாகி ஆனந்தமாய் 5 வருடம் வாழ்ந்து மகிழ்ச்சியோடு இருப்பவர்கள் 82%, சரி கொஞ்சம் சேர்ந்து வாழ்ந்து தான் பார்ப்போம் என்று 10 ஆண்டை நிறைவு செய்பவர்கள் 65%, 25 வருடம் வரை வாழ்ந்து வீரசாகசம் புரிபவர்கள்  33% பேர் தான், திருமணம் என்ற மல்யுத்தத்தில் இறுதி வரை போராடி இணை பிரியாமல் வந்து சேர்வது 5% மட்டும் தான். தற்பொழுது திருமண வாழ்வில் 53% பேர் அமெரிக்காவில் விவாகரத்தை பெற்று விடுகிறார்கள். இவர்களில் 7 வருடம் வரை நீடிப்பது தான் அதிகபட்சம். இப்ப

நேரம் நல்ல நேரம்

Image
ராஜேஷ் வீட்டிற்கு சென்றிருந்தேன். அப்பொழுது அவர்களுடைய வாலிப வயது மகன், மகள் பற்றி என்னிடம் பகிர்ந்துக் கொண்டார். அப்பொழுது மகனும் நானும் பேசி 12 வருடங்கள் ஆகிறது என்று வருத்தப்பட்டுக் கொண்டார். நாங்கள் இருவரும் ஏதாவது பேசினாலே உடனே சண்டை வந்து விடும். எனவே பேசுவதே இல்லை. ஏதாவது பேச வேண்டுமானால் என் மனைவியிடம் அவன் சொல்லுவான். அதேப்போல் நான் அவனிடம் கூறவிரும்பினால் என் மனைவியின் மூலமாகவே பேசி communicate பண்ணிக் கொள்ளுவோம் என்றான். பிள்ளைகளிடம் படிப்பை பற்றி மட்டும் பேசினால் இப்படித்தான் சண்டை வந்துக் கொண்டே இருக்கும் என்பதை நண்பர் மறந்துவிட்டார். ஏனென்றால் பள்ளிக் கூடங்கள் எல்லாம் பிள்ளைகளை மதிப்பெண் எடுக்கவைக்கும் Computer என்று தான் நினைத்துக் கொள்ளுகிறார்கள். வாரத்தில் ஏழு நாளும் பள்ளி கூடம் நடத்த வேண்டும். 24x7 என்பது போல் பிள்ளைகள் படித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று பிள்ளைகளை பாடாய்படுத்துகிறார்கள்.  பிள்ளைகளின் மன நிலையைப் பற்றி கொஞ்சமும் அக்கரை இல்லாமல் தங்கள் பள்ளிக்கூடத்தில் படித்த பிள்ளைகள் அதிகம் பேர் மருத்துவம் படிக்கிறார்கள், உயர்ந்த  வேலை வாய்ப்பு பெற்றிருக்கிறார்கள்

நம்பிக்கை இழப்பா?

Image
கணவன் மனைவியின் மீது நம்பிக்கை இழப்பதும், கணவன் மனைவி மீது உள்ள நம்பிக்கைக்கு துரோகம் செய்வதும், பிள்ளைகள்  பெற்றோர் மீது உள்ள நம்பிக்கையை இழந்து விடுவதும், பிள்ளைகளால் பெற்றோருக்கு நம்பிக்கை துரோகம் செய்வதும் ஆங்காங்கே நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதனால் பலவேளை நல்லவர்களையும் சந்தேகக் கண்ணோடு பார்த்து பார்த்து, பின்தொடர்ந்து நரக வேதனைகளை அனுபவிக்கிறோம். இருப்பினும் அளவுக் கடந்த நம்பிக்கை என்பது பலவேளை கண் இருந்தும் பார்வையற்றவர்களாக மாற்றிவிடும் தன்மை உண்டு. தான் எந்த விதத்திலும் சந்தேகத்திற்கு உட்பட மாட்டேன் என்று எண்ணும் சிலர் துணிகரமாக தீமை இழைப்பதற்கும் தயங்குவதில்லை. எனவே கவனமாக இருப்பதும், விழிப்பாக இருப்பதும் அவசியம் தான். ஜூலியஸ் சீசர் கி.மு 47 மற்றும் 48லேயே சர்வாதிகாரியாக இருந்தாலும் அரசியல், சமூகம், பொருளாதாரம் மற்றும் சட்ட சீர்திருத்தங்களைக் கொண்டு வந்த பெருமைக்குறியவர். ஆனால் பிறர் வெறுக்கும் அளவிற்கு நிரந்தர சர்வாதிகாரியாக செயல்பட்டு யாரையும் மதிக்காமல், மனம் போன போக்கில் போன போது அவருக்கே அவர் வைத்துக் கொண்ட சூன்யமாக மாறிப்போனது. சீசர் தன் மகனைப் போல புரூடஸ்சை நேசி

பாம்பு சட்டை

Image
வினோதினியின் கணவர் அவளை எல்லாருக்கும் முன்பாக அவமானப்படுத்தி விட்டதாக நினைத்து வருத்தத்தோடே குடையைப் பிடித்துக் கொண்டு மழைக்குள் வேகமாக மாலை வேளையில் ஆலயத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். எப்படி இருந்தாலும் எல்லாருக்கும் முன்பாக என் சாப்பாட்டை நாய் தான் சாப்பிட முடியும் என்று கூறி அவமானப்படுத்தி விட்டாரே! ஒரு நாளா, இரண்டு நாளா எப்பொழுதும் பிறருக்கு முன் என்னை அவமானப்படுத்தி அழவைப்பதில் அவருக்கு என்னதான் கிடைக்கப் போகிறதோ தெரியவில்லை என்று முணு முணுத்துக் கொண்டே ஆலயத்திற்குள் நுழைந்தாள். தன் கணவனை நினைத்து கண்ணீர் வடித்தாள். கடவுளே என் கணவன் சுபாவத்தை மாற்றுவீரா அல்லது விவாகரத்தை வாங்கப்போகட்டா? என்னால் சகிக்க முடியவில்லை என்று தேம்பினாள். ஆலயத்தின் முன் புறத்தில் போடப்பட்ட வெளிச்சத்தில் அனேக  ஈசல்கள் பறந்து வந்து தொந்தரவு செய்துக் கொண்டிருந்தது. அதில் சில ஆலயத்திற்குள் ஜெபித்துக் கொண்டிருந்தவர்கள் மீதும் விழுந்து  எரிச்சலை ஊட்டியது. சே சே.. இந்த முழு இரவு ஜெபத்தில் கூட நிம்மதியாக இருக்க முடியவில்லை. வீட்டில் தான் தொந்தரவு அவமானம் என்றால், இங்கே வந்தால் இந்த ஈசலால் நிம்மதியாக ஜெபிக்க முட

எப்பொழுதும் டென்சனா?

Image
வாழ்க்கையில் ரிலாக்ஸாக இருக்க வேண்டும்.   தேவைப்படும் போது மட்டுமே கோபம், எரிச்சல் வர வேண்டும். எப்பொழுதுமே நமது அலுவலகத்திலோ, குடும்பத்திலோ டென்சனாக காணப்பட்டால் எல்லாரும் நம்மை வெறுத்து ஒதுக்கிவிடுவார்கள். இது டென்சன் பேர் வழி என்று நல்ல காரியங்கள் எதிலும் நம்மை சேர்த்துக் கொள்ள மாட்டார்கள்!   பதறிய காரியங்கள் சரியாக வராது என்பது தான் உண்மை. சின்ன சின்ன காரியங்களுக்கும் நாம் டென்சனாகவே இருந்தால் நாம் மன நோயாளியாகவே மாறி விடுவோம். குடும்பங்களில் பிள்ளைகள், கணவன், மனைவியோடு மனமகிழ்ந்து நேரத்தை செலவிடாமல் எப்பொழுதும் சண்டைப் போட்டுக் கொண்டு இருந்தால் கணவனுக்கு மனைவியோடு பழகுவதற்கு பிடிக்காது. மனைவிக்கு கணவன் ஏன் இப்பொழுதே வீட்டுக்கு வந்துவிட்டார், ஏதாவது பிரச்சனையை ஆரம்பித்து விடுவாரே என்று பயப்படத் தொடங்கி விடுவார்கள். அலுவலகத்தில் டென்சனாக இருந்தால் வீட்டிற்கு வரும் போது ரிலாக்ஸ் பண்ணிக் கொள்ள வேண்டும். பிள்ளைகளோடு/மனைவி/கணவனோடு சிறு விளையாட்டுகள் விளையாடுவது பேசி மகிழுவது என்பது நம்மை ரிலாக்ஸ் பண்ணுவதற்கு சிறந்த வழிகள். ஒரு முறை அறிஞர் ஒருவர் அக்பர் மன்னரைக் காண வந்திருந்தார். அவர் உ

மன்னிக்க பெலன் தாரும்

Image
மக்களிடையே சிறந்த இறைப் பணியாற்றிய நண்பர் ஒருவர் தன் மகனுடன் வந்து திருமண சான்றிதழ் தருமாறு கேட்டார். எதற்காக? என்று அவரிடம் கேட்டேன். அதற்கு அவர் என் மருமகளை divorce செய்வதற்காக என்றார். சற்று அதிர்ந்து போன நான், “ஏன் என்னப் பிரச்சனை என்று கேட்டேன்?” என் மகன் உடனும் என்னுடனும் அவள் ஒத்துப்போவதில்லை என்றார். எங்கள் குடும்பத்தின் மீது அவளுக்குப் பாசமே இல்லை. என் மனைவி என்னை விட்டு விட்டு திருமணமான 5 வருடத்திலேயே மரித்துப் போய் விட்டாள். நான் இவனை 4 வயதிலே இருந்தே தனியாக வளர்த்து வந்தேன். இவன் என்னை விட்டு பிரிந்ததே இல்லை. ஆனால் மருமகளோ தனிக் குடித்தனம் போக வேண்டும் என்று ஒத்தகாலிலே நிற்கிறாள். வீட்டில் எப்பொழுதும் செல்போனும் கையுமாகத்தான் இருக்கிறாள். குடும்பத்தைக் குறித்து அக்கறையே இல்லை. நான் எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் அவள் கேட்க மாட்டேன் என்கிறாள். பல முறை நான் advice செய்து விட்டேன். என் மகன் பல முறை அவளை அவள் வீட்டிலிருந்து அழைத்து வருவான். இனி அவளை வைத்து ஒன்றும் செய்ய முடியாது என்றார். நான் ஒரு முறை மீண்டும் மன்னியுங்கள் என்றேன். அதற்கு அவர் “மன்னித்து மன்னித்து என் மகனோடு அவள்

ஆண்டவர் கவனிக்கிறார்

Image
மனிதன் எப்பொழுதுமே பிறரின் அரவணைப்போடு, உதவியோடு வாழவே விரும்புகிறான். எவ்வளவு வயதானாலும் பேசி மகிழுவதற்கு மனிதன் மனிதனையேத் தேடுகிறான். சிலர் தங்களை யாரும் கவனிப்பதில்லை, தன்னை யாரும் கண்டுக்கொள்வது இல்லை. நான் தனிமையாய் வாழ்கிறேன். எனவே எனக்கு வாழ்க்கை வெறுப்பாக இருக்கிறது என்று சொல்வது உண்டு. குறிப்பாக முதியவர்களுடன் பிள்ளைகள், பேரக் குழந்தைகள் பேசாமல், கண்டும் காணாதவர்களாக போகும் போது முதியவர்கள் தங்களை ஒரு சமூக விலங்கைப் போல் மதிக்கப்படுவதாக எண்ணி வருந்துகின்றனர். தங்களால் யாருக்கும் பயனில்லை. எனவே யாரும் தங்களைக் கண்டுக் கொள்வதில்லை என்று வேதனைப்படுகின்றனர். இதைப் போன்று தான் சார்னி என்ற ஒரு மனிதர் பிரான்ஸ் நாட்டில் மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்தார். அந்த நாட்களில் நெப்போலியன் மன்னராக இருந்தார். இவர் மீது நெப்போலியனுக்கு ஒரு சந்தேகம் வரவே இவரைப் பிடித்து சிறையில் தள்ளினான். மன்னரின் கோபத்துக்குள்ளானதால் யாரும் அவரைப் பார்க்க வரவே இல்லை. தனிமையில் சிறையில் வாடினார். வருத்தத்தினால் சிறையின் சுவரில் “யாரும் கவனிக்கவில்லை (No body Cares)” என்று எழுதி வைத்து வேதனையை வெளிப்படுத்தினார்.