Posts

Showing posts from September, 2021

Hand Feeding

Image
ஒருநாள் ஒரு வீட்டிற்கு சென்றிருந்தேன். அப்போது காலை 7:30 மணி. தன் மகன் கல்லூரிக்கு கிளம்பி கொண்டிருப்பதால் அந்த தாய் ஒரு பாத்திரத்தில் உணவை வைத்துக்கொண்டு சாப்பிடுப்பா, சாப்பிடு, இந்த ஒருவாய் மட்டுமாவது சாப்பிடு என்று வற்புறுத்தி கொண்டிருந்தார்கள். என்னம்மா சின்ன பிள்ளைக்கு ஊட்டிவிடுகிறீர்களா? என்றேன். சிரித்துக்கொண்டே என்ன செய்யணும்னு தெரியவில்லை ஐயா! ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு! அவன் சாப்பிடாமல் போனால் எனக்கு சாப்பிட முடியாது. நான் தான் அவனுக்கு dress எல்லாவற்றையும் ironing பண்ணி வைத்துள்ளேன். இனி வந்தவுடன் dressஐ அப்படி வீசி விடுவான். அடுத்த நாளுக்கு uniform வேண்டுமே, சரியான இடத்தில் வைக்காவிட்டால் தேடிக் கொண்டு அலைய வேண்டுமே என்ற அக்கறை கிடையாது. இப்படியே வளர்ந்து விட்டான் என்று தன் மகனை புகழ்ந்து கொண்டார்கள். பிள்ளைகள் எப்படியாகிலும் தாங்கள் நினைத்த படிப்பை பிள்ளைகள் படித்தால் போதும் வேறு எந்த வேலையும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று பெற்றோர்கள் எண்ணுகின்றனர். அவனுக்கென்ன/அவளுக்கென்ன  படித்தால் போதும், வேறு எந்த வேலையும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நானே எல்லாவற்றையும் பார்த்துக் கொ

எங்கேயோ இடிக்குதே

Image
நண்பர் ஒருவருடைய இல்லத்திற்கு சென்றிருந்தேன்.  அவரோடு மகிழ்ச்சியாக பேசிக் கொண்டிருந்தேன். அவருக்கு ஒரே ஒரு மகன் தான். அவன் வீட்டிற்குள்ளே தான் இருக்கிறான் என்று என் நண்பர் கூறினார். அவனைப் பார்த்துவிட்டு செல்லலாம் என்று கிளம்பும் போது கொஞ்சம் உன் மகனை கூப்பிடு என்றேன். என் நண்பன் சிரித்துக்கொண்டு அவன் உன்னை பார்த்துக்கொள்ள வாய்ப்பில்லை. நீ அவனைப் பார்க்க உள்ளே வா என்று உள் அறைக்கு அழைத்துச் சென்றான். எனக்கு அவன் மகனை பார்த்தபோது ஷாக் அடித்தது. நண்பனின் மகன் முகம் முழுவதும் வெள்ளை கலரில் தயிருடன் எதையெல்லாமோ சேர்த்து பூசி இருந்தான். கண்ணின் மேல் வெள்ளரிக்காய் போல் ஒன்றை ஒன்றை வைத்து மூடி இருந்தான். மெதுவாக Sam இடம் கேட்டேன், “ Sam உனக்கு என்ன ஆச்சு” என்றேன். அவன் சிரித்துக் கொண்டு, “Sorry, uncle முகத்தில் சில பருக்கள் வந்திருக்கிறது. அதற்கு தான் மருந்து தயார் செய்து பூசி உள்ளேன்.” இப்படி செய்ய வேண்டும் என்று எங்கே பார்த்தாய், யார் சொல்லிக் கொடுத்தார்கள் என்று கேட்டேன். Uncle எல்லாம் YouTube Doctor  தான் என்று சிரித்தான். வெளியே வரும்போது நான் படித்திருந்த “மைக்கேல் ஜாக்சன் சிண்ட்ரோம்” எ

நியாயமான கோபமா?

Image
தவறுதலாக ஒரு பெண்ணின் முடியை வெட்டியதற்காக ஐ.டி.சி மவுரியா ஹோட்டல் நிர்வாகத்திற்கு 2 கோடி ரூபாய் அபராதத்தை தேசிய நுகர்வோர் தீர்வு ஆணையம் விதித்துள்ளது. வாடிக்கையாளராக வந்த அந்த பெண் கூறியதற்கு மாறாக கவனக் குறைவாக கூந்தலை வெட்டிவிட்டார் பணியாள். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு காரணமாகி விட்டாராம். காரணம் அவர் VLCC மற்றும் Pantene நிறுவனங்களுக்கு மாடலிங் செய்துள்ளார். ஆனால் தன் கூந்தலை இழந்ததினிமித்தம் எதிர்பார்த்த பணி வாய்ப்புகள் கிடைக்காமல் போய்விட்டது.  4 இன்ச் முடியை வெட்டுவதில் ஏற்பட்ட சிக்கலால் 2 கோடி ரூபாய் நஷ்ட ஈடாகப் போய் விட்டது. இதை போன்ற ஒரு சம்பவம் என் கண்முன் நடைப்பெற்றது. தவறுதலாக முடிவெட்டப்பட்டதை late ஆக உணர்ந்த அந்த பெண் மிகுந்த உணர்ச்சி வசப்பட ஆரம்பித்தார். அந்த அழகு நிலையத்திலுள்ள பொருட்கள் எல்லாவற்றையும் எடுத்து வீசி உடைக்க ஆரம்பித்தார். இறுதியாக பணிபுரிந்த பெண்ணையும் அடித்து உதைக்க ஆரம்பித்தாள். இதைப் போன்று பலரும் பலவிதமாக உங்கள் வாழ்க்கையில் பார்த்திருப்பீர்கள்.  குடும்பங்களில் கூட சிலர் ஒரு பொருளை எங்கு எங்கு வைக்க வேண்டும் என்று இடம் ஒதுக்கியிருப்பார்கள். அங்கு க

இயன்றதைச் செய்வோம்

Image
சுயநலமாகவே மனிதன் வாழ விரும்புகிறான். ஒரு விபத்து நடந்தால் நாம் நமக்கு என்னவென்று போய்க்கொண்டிருப்போம். யாராவது உதவி செய்வார்கள்! நமக்கு officeக்கு நேரமாகி விட்டது என்று கண்டும் காணாமல் போய்விடுவோம். ஆனால் நாம் அடிபட்டு கிடந்தால் இந்த உலகத்தில் யாருக்குமே அக்கறை இல்லை, என்னை ஒருவரும் கண்டு கொள்ளாமல் போகிறார்கள் மனிதர்களாக அல்ல மனிதர்கள் மிருகங்களை விட மோசமாகி விட்டார்கள்! எல்லாருடைய இதயமும் கல்லாகி விட்டது!! நான் அடிபட்டு கிடக்கிறேன், ஒருவனும் உதவி செய்யாமல் போய்க்கொண்டே இருக்கிறார்கள் என்று வாயில் வந்தபடியெல்லாம் பேசுவோம். நாம் யாருக்கும் உதவி செய்யக் கூடாது. ஆனால் எல்லாரும் எனக்கு ஒரு பிரச்சனை என்றால் ஓடி ஓடி வந்து உதவி செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். பிறர் உனக்கு எதை செய்ய வேண்டும் என்று விரும்புகிறாயோ அதை நீ பிறருக்கு செய் என்று இயேசு கிறிஸ்து கூறுகிறார். திருமண வாழ்வில் ஒரு பிரச்சனை என்றால் உறவினர்கள் பேசி சரிசெய்து விடுவார்கள். அது அந்த காலம். ஆனால் இப்பொழுது மொய் பணம் கொடுப்பதோடு உறவினர்கள், நண்பர்கள் வேலை முடிந்துவிடுகிறது. அதன் பின் ஏற்படுகிற விளைவுகளுக்கு அவர்கள் பொறு

இன்னும் காலி பண்ண வில்லையா

Image
நடுத்தர குடும்பத்தில் வாழ்ந்து வந்த அவர்கள் வீட்டில் இரண்டு படுக்கை அறை, ஒரு விருந்தினர் வரும் அறை, மற்றொன்று சமையலறை. ரெபெக்காள் தன் கணவர் டேவிட் உடன் 50 வருடம் குடும்பம் நடத்தியவர். வயது மூப்பின் காரணமாக டேவிட் இறைவனின் சமூகம் சென்றடைந்தார். இப்பொழுதுதான் ரெபெக்காளுக்கு டேவிட்டின் அருமை தெரிந்தது. கணவனும் மனைவியுமாக இருந்தால் பேசிப் பேசி நேரம் போவதே தெரியாது. பழைய கதையாக இருந்தாலும், பலமுறை பேசி இருந்தாலும் அதை ஒருவர் சொல்லும் போது நேரம் போய்க்கொண்டே இருந்தது. இப்பொழுது பேரப்பிள்ளைகளோ, மகனோ, மருமகளோ வந்து உட்கார்ந்து கதை விடுவதற்கு யாரும் வருவதில்லை. தனிமை வாட்டி வதைத்தது. ஒருநாள் மகன் அருகில் வந்து உட்கார்ந்தான். அம்மா உங்கள் பேரப் பிள்ளைக்கு அடுத்த வாரம் திருமணம் நடக்கப்போகிறது நியாபகம் இருக்குதா, அது விஷயமாக தான் உன்னிடம் பேச வந்தேன். தன் மகன் வீட்டுக் காரியங்களை பற்றி பேச வந்திருக்கிறான் என்ற உடன்  ரெபெக்காளுக்கு மிகவும் சந்தோஷம். அம்மா வந்து... என்று மெதுவாக இழுத்து கதைக்கு வந்தான் ராபர்ட். அதான் பேரனுக்கு திருமணமானா எந்த அறையை கொடுக்கிறது என்று யோசித்தோம். ஜேம்ஸ்க்கு புதிதாக தி

நல்ல பாம்பு

Image
ரயில் பயணம் என்பது இனிமையானது. முன்பின் தெரியாத பலரை நாம் சந்திக்கிறோம், பிரிகிறோம். சில வேளையில் ரயிலில் சந்தித்த நபர்களை நாம் நண்பர்களாக மாற்றிக் கொள்ள நமது தொலைபேசி எண்களை கொடுக்கிறோம். ஆனால் அவர்கள் நல்லவர்களா அபாயகரமானவர்கள் என்பது நமக்குத் தெரியாது. யாரும் தான் மோசமானவன் என்று வெளிப்புறமாக சொல்லிக் கொண்டு அலைவது இல்லை. பாம்புக்கு பெயர்தான், நல்லபாம்பு ஆனால் விஷம் நிறைந்தது. ராமச்சந்திரன் ஒரு நல்ல பாம்பு என்று தெரியாமல் ரயிலில் போகும்போது சிரித்தாள். நட்பை தொடர்ந்தாள். பொறியியல் படித்த அவன் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தான். அவள் சென்னையில் டிப்ளமோ படிப்பை கல்லூரியில் படித்தாள். சிலரிடம் பழக ஆரம்பித்தாள். அவர்களின் குணம் வெளிப்படும். பாம்போடு விளையாடும்போது நன்றாகத் தான் தெரியும். ஆனால் அது முற்றிலுமாக உடலை சுற்றிக் கொண்டு நம்மை நெறிக்க ஆரம்பிக்கும். அப்பொழுது இந்த விளையாட்டு வினையாக அல்லவோ மாறிப்போகும் என்று நினைத்து விடுபட நினைத்தாலும் பாம்பு விடாமல் நம்மை நெறித்து தீங்கு செய்ய ஆரம்பித்துவிடும். அதுபோல் தான் ஸ்வேதா பேச்சை ராமச்சந்திரனுடன்  நிறுத்தினாலும் அவன் தொடர விரும்பினான

Party வைக்கக்கூடாதா?

Image
பெண்கள் மது அருந்துவதை தூண்டுவதாக நடிகை அமலா பால் மீது கண்டனங்கள் எழுந்துள்ளது. Bachelor party ஒன்றை இந்த நடிகை ஏற்பாடு செய்து தனது தம்பிக்கும், அவரது நண்பர்களுக்கும் விருந்து வழங்கினார். இந்த விழாவில் நண்பர்களுடன் மது அருந்தி விட்டு பாடலுடன் நடனமும் ஆடியுள்ளார். இது அவருடைய தனிப்பட்ட விஷயமாக பார்க்கப்பட்டாலும் இதை video எடுத்து instagramமில் பதிவிட்டதால் பெண்கள் மது அருந்துவதற்கு தூண்டுதலாக இருந்து வருகிறது என்பதே சமூக ஆர்வலர்களின் கவலை. சினிமாவில் நடிப்பவர்கள், விளையாட்டு வீரர்கள் போன்றோரை பலர் வலைத்தளங்களில் பின் தொடர்ந்து வருகின்றனர். அவர்கள் செய்கிற ஒவ்வொரு செயலுமே சமூகத்தில் ஒரு மாற்றத்தை உருவாக்க கூடியது. எனவே தான் விளம்பரங்களில் அவர்களை பயன்படுத்துகின்றனர். மதுப்பழக்கம் என்பது ஆண் சமுதாயத்தை எவ்வளவு பாழ்படுத்தியுள்ளது என்பதை உலகமே பார்த்துக்கொண்டிருக்கிறது. அதே வேளையில் சில சமூகங்களில் போதைக்கு பெண்களும் அடிமையாகுவதை காணமுடிகிறது. பொதுவாக மது அருந்துவது அவமானமாகக் கருதுவதால் பெண்கள் barகளுக்கு செல்லாமல் வீட்டிலேயே மது அருந்துகின்றனர். ஆனால் இதுபோன்று நடிகைகள் செய்கிற செயலானது ப

கிறிஸ்தவர்களின் ஆடை புரட்சி

Image
பெண்கள் மாநாடு ஒன்றிலே பெண்மணி ஒருவர் பேசிக் கொண்டிருந்தார். அப்பொழுது இன்றைய தலைமுறையினர் மத்தியில் நடக்கும் ஆடைப்புரட்சியைக் குறித்து கண்டிக்க ஆரம்பித்தார். குறிப்பாக முக்காடு போடுதல் என்று ஆரம்பித்து பின்பு சால் போடுதல், திருமணத்திற்கு பெண்கள் உடுக்கும் உடுப்பு வரைப் பேசி மக்களை உலுக்க ஆரம்பித்தார். நாம் உடுத்துகிற உடை என்பது இராஜாதி இராஜாவுக்கு முன்பாக நிற்கிறோம் என்ற உணர்வுடன் தான் ஆலயத்திற்கு வரும்போது ஆடைகளை உடுத்தி வர வேண்டும் என்றார். அதற்கு ஆதாரமாக லேவியராகமம் 16 ஆம் அதிகாரத்தில் இறைவனுக்கு முன் நின்று பணிவிடைச் செய்கிற ஆரோனும், அவன் பிள்ளைகளும் தங்கள் வஸ்திரங்களை சுத்தமாக வைக்கவும், பரிசுத்தமாக இருக்கவும் கவனமாக இருக்கும்படி கர்த்தரே மோசே மூலம் கட்டளையிடுகிறார். அதேப் போன்று வெளிப்படுத்தின விசேஷம் 19:4 ல் மூப்பர்கள் சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கும் கடவுள் சமுகத்திற்கு முன்பாக தங்களைத் தாழ்த்தி பணிந்துக் கொள்ளுகிறார் என்றார். அப்படி என்றால் ஆடை விஷயத்தில் அவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறதா என்று யோசித்துக் கொண்டிருந்த போது தான் ஆடைக்கு பின்னால் அனேக காரியங்கள் மறைந்திருப்பதை

பேராசையா?

Image
‘இந்த உலகத்தில் எல்லா மனிதர்களுடைய தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். ஆனால் ஒரு தனி மனிதனின் பேராசையை நிறைவேற்ற ஒருநாளும் முடியாது’ என்று மகாத்மா காந்தி கூறினார். ஏழை குடும்பங்களில் இருந்து வாழ்வில் உயர்ந்தவர்கள் கூட, உயர்ந்த பதவிக்கு வந்ததும் ஆடம்பரத்தை தேடி செல்லுகிற மனிதர்களாக மாறி விடுகிறார்கள். கடைநிலையிலிருந்து உயர்ந்ததை மறந்து கை நீட்டி லஞ்சம் வாங்குகிறவர்களாக மாறி விடுகின்றனர். பிள்ளைகள் மற்றும் மனைவியின் ஆடம்பரத்திற்காக சம்பளத்தையும் தாண்டி கிம்பளத்தால் பாக்கெட்டை நிறைப்பது இறைவன் கொடுத்த வாழ்க்கைக்கு அழகல்ல. வரம்பை மீறிய பேராசை என்றாவது ஒருநாள் நம்மை நடுத்தெருவுக்கு கொண்டு வந்துவிடும். சகாயம், நீ பெரிய கலெக்டரா ஆகணும், உதவி கேட்டு வருகிறவர்களுக்கு நீ உதவி செய்கிறவனாக மாறனும்டா என்று சிறுவனாக படிக்கிறபோதே சகாயம் IASன் தாயார் கூறுவார்களாம். கலெக்டர் ஆவதற்கு என்ன படிக்க வேண்டும், எங்கே படிக்க வேண்டும் என்று தெரியா விட்டாலும் அந்த குக்கிராமத்தில் உள்ள அந்த அன்னை தன் மகனை சரியாக போதித்து வளர்த்தார்கள். லட்சம் லட்சமாக பணத்தை திரட்ட நினைக்காமல் நீதி நேர்மை உண்மை என்று வாழ்வதற்காக

திருந்தவா போகுது?

Image
பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு அறிவுரை சொல்லுவார்கள், மனைவி கணவனுக்கு idea சொல்லிக் கொடுப்பார்கள். கணவன் மனைவியை திருத்த முயற்சியை மேற்கொள்ளுவான். ஆசிரியர்கள் எப்படியாகிலும் தன் மாணவ, மாணவியரை திருத்தியே  ஆகவேண்டும் என்று கடினமான தண்டனைகள் கொடுப்பார்கள். போதகர்கள் தங்கள்  மக்கள் திருந்த வேண்டும், நல்வழிப்படுத்த வேண்டும் என்று சில வேளை கடினமான வார்த்தைகளை கூட பயன்படுத்திவிட்டு வருந்துவது உண்டு. இவை எல்லாவற்றையும் செய்து பார்த்த பின்னரும் ஒரு மாற்றமும் நாம் நினைத்தபடி நடக்கவில்லை என்றால், மனம் வருந்தி, என்ன சொன்னாலும் திருந்தவா போகிறார்கள் என்று மனதை, நத்தை தன் உடலை சுருக்கி கொள்வது போல் சுருக்கிக்கொண்டு வருத்தத்தோடு வாழ் வாழ்வோம். மரகத நாட்டை கிமு 491 ஆம் ஆண்டு பிம்புசாரன் என்ற அரசன் ஆண்டு வந்தான். தன் ஆத்மா புண்ணியம் பெற ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான ஆடுகளை பலியிட்டு வந்தான். ஒரு நாள் புத்தர் அவன் அரண்மனைக்கு சென்றார். அனேக ஆடுகள் நிற்பதைப் பார்த்து “எதற்காக?” என்றார். அதற்கு பிம்புசாரன் ‘என் ஆத்துமா புண்ணியம் பெறத்தான்’ என்றான்.  புத்தரின் உள்ளம் வருந்தியது. உடனே அவனைப்பார்த்து ‘ஆயிரக்கணக்கான

முகநூலின் முகத்திரை

Image
முகநூலில் பழகும் நட்பு என்பது ஆபத்தானது என்பது அடிக்கடி நடக்கும் சம்பவங்கள் நமக்கு சுட்டிக் காட்டுகிறது. முகநூலில் நட்போடு பழகி கொலை செய்யும் அளவிற்கு கொண்டு சென்று விடும் என்பதை உணர வேண்டியது அவசியம். அமுதா என்ற இளம்பெண் முகநூலில் உலாவி வந்தாள். அவளுடைய அழகிலும், பேச்சிலும் சொக்கிப் போனான் ஒரு இளைஞன். நாட்கள் ஆக ஆக நட்பு மிகவும் வலுப்பட்டது. எப்பொழுது அமுதாவை சந்திக்கலாம் என்று வாய்ப்புக்காக காத்துக் தவம் கிடந்தான். பச்சைக் கொடியை அமுதா காட்டுவதற்காக வாய்ப்பு வந்தது அதுதான், “பிப்ரவரி 14 காதலர் தினம்”. காஞ்சிபுரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு பலத்த கனவோடு காதலியை சந்திக்கப் புறப்பட்டான். எப்படி நம்மை சந்திக்க போகிறாளோ? இவ்வளவு துணிச்சலாக முன்பின் நம்மை பார்க்கா விட்டாலும்  வரச் சொல்லி இருக்கிறாளே அவளுக்கு என் மேல் எவ்வளவு நம்பிக்கை! அன்பு!! நினைக்க நினைக்க உள்ளமெல்லாம் சிறகடித்து பறக்க ஆரம்பித்தது. தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் வந்து இறங்கியபோது அவன் கண்கள் அமுதாவை தேடியது. அமுதாவை காண முடியவில்லை ஆனால் அதற்கு பதிலாக ஒரு இளைஞர் வந்து நான் தான் அமுதா என்று அறிமுகமான போது தான் பு

உன் கொடி பறக்கட்டும்

Image
மாலை வேளையில் ஒரு நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றிருந்தேன். அந்த வீட்டின் முன் அறையில் மூன்று வயதுக்குட்பட்ட மூன்று குழந்தைகளை பார்த்தேன். சோபாவில் மூன்று குழந்தைகளும் கையில் செல்போனை வைத்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். பெரியவர்கள் அந்த நிகழ்ச்சிக்கான காரியங்களை பார்த்துக்கொண்டு பிஸியாக இருந்தார்கள். என்னை பார்த்ததும் அந்த பிள்ளைகள் சற்றும் அலட்டிக்கொள்ளாமல் cellளிலேயே மூழ்கி  போனார்கள். எனக்குள்ளே எழுந்த கேள்வி, பெரியவர்கள் தங்களை பிள்ளைகள் தொந்தரவு செய்யக் கூடாது என்பதற்காக ஆளுக்கொரு போனை கொடுத்து அமைதிப்படுத்துவது சிறுபிள்ளைகளின் எதிர்காலத்திற்கு சிறந்ததா? பிள்ளைகளிடம் நேரம் செலவிடுவது என்பது சுத்த வேஸ்டா? பிள்ளைகள் ஒன்றும் செய்யாமல் சும்மா இருந்துவிட கூடாதா? அவ்வாறு ஒன்றும் செய்யாமல் இருந்தால் அழுது விடக்கூடாது என்பதற்காக cell phone கண்டிப்பாக கொடுக்க வேண்டுமா? இவ்வாறு cellயை சிறு வயதிலேயே பயன்படுத்த ஆரம்பித்தால் பிள்ளைகளின் கண்பார்வை பாதிக்கப்படாதா? இயந்திரத்தோடும், Networkவோடும் வளரும் பிள்ளைகள் எதிர்காலத்தில் பெற்றோர்களை எப்படி கவனிப்பார்கள்? பெற்றோர்கள் வயதானபின் பேசிக்கொண்டிருப்பது

மாற்று பாதையில் பயணி

Image
நீட் தேர்வு எழுதும் முன்னும், எழுதிய பின்னும் வருகிற பயத்தினால் மாணவிகள் தற்கொலை புரிந்து கொண்டுள்ளனர் என்பது வருத்தத்திற்குரியது. டாக்டர் ஆக வேண்டும் என்ற இலட்சியத்துடன் தான் சவுந்தர்யா, கனிமொழி, அனிதா போன்றோர் இரவு பகலாக படித்துள்ளனர். தேர்வு நேரத்தில் மட்டுமல்லாமல் எப்பொழுதும் படிப்பு படிப்பு என்றே இவர்கள் வாழ்ந்தார்கள். தங்கள் லட்சியத்தை எப்பொழுதும் கனவு கண்டு வந்துள்ளனர். நீட் தேர்வுக்காக பயிற்சி எடுத்தும் சரியாக எழுத முடியாத போது கனவுக் கோட்டை தகர்ந்து விடுமோ என்ற அச்சம் உள்ளத்தை அசைத்து விட்டது. இதனால் யாரிடமும் பேசாமல் விரக்தியாக இருந்துள்ளனர். சிலவேளை தனிமையாக இருந்துள்ளனர். பெற்றோர்கள் உடன் எந்த இடத்திற்கும் செல்லாமல் தவிர்த்துள்ளனர். வீட்டிற்குள்ளேயே முடங்கிக் அதை யோசித்து யோசித்து வேதனைப்பட்டுள்ளனர். குறிப்பாக இப்படிப்பட்ட சூழலில் பிள்ளைகள் தனிமையாக இருப்பதை தவிர்க்க பெற்றோர்கள் முற்படவேண்டும். மாற்று வழிகளில் பிள்ளைகள் மருத்துவம் சம்பந்தமான பிற courseளை தேர்ந்தெடுக்க உதவிடலாம். MBBS மட்டும்தான் மருத்துவ படிப்பு அல்ல. மருத்துவம் சார்ந்த அநேக படிப்புகள் இருப்பதால் அதனை துவக்

தயவுசெய்து தூக்கிக் கொண்டு வர வேண்டாம்

Image
அன்று ஒரு அறிவிப்பு வெளியானது. அரசன் மகனுக்கு திருமணம். நாடே மகிழ்ச்சி வெள்ளத்தில் உருண்டோடியது. ராஜாவின் அரண்மனைக்கு அருகில் வாழ்ந்த பிச்சைக்கார பெண்மணிக்கும் அந்த திருமணத்தில் பங்கு கொள்ள மிகவும் ஆசை. இந்தக் கோலத்தில் போனால் உள்ளே விட மாட்டார்களே என்ன செய்வது? ஒரே யோசனை! திடீரென்று ஒரு எண்ணம் உதித்தது!!. அரசி சிலவேளை இந்த வழியாகத்தானே  செல்வார்கள். அவர்களிடம் அவர்கள் பயன்படுத்திய ஒரு ஆடையை கேட்டால் என்ன? அரசியின் வருகைக்காக ஒவ்வொரு நாளும் ஏக்கத்தோடு காத்திருந்தவளுக்கு வாய்ப்பு கிடைத்தது. அரசியை கண்டதும் மனதில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு கேட்டாள். எதிர்பார்க்காமல் அரசியும் ஆச்சரியப்படும் அளவிற்கு தான் பயன்படுத்திய ஒரு ஆடையைக் கொண்டு வந்து கொடுக்க பணிப்பெண்ணுக்கு ஆணையிட்டாள். அதோடு மட்டுமல்ல, அரசி அந்த பிச்சைக்கார பெண்ணிடம் “இந்த ஆடை எளிதாக கிழிந்து போகாது தண்ணீரில் அலசாமல் இருந்தாலும் நாற்றமும் அடிக்காது. எனவே பழைய துணியை எல்லாம் வீசிவிட்டு கல்யாண விருந்துக்கு வந்து சேர்” என  அழைப்பு கொடுத்தாள். மகிழ்ச்சி என்றால் அந்தப் பெண்ணுக்கு தாங்க முடியவில்லை. காலையில் குளித்து அரச விருந்துக்கு

அருவிகள் பார்த்து பாயட்டும்

Image
சந்தோஷ், சாலினி இருவரும் திருமணத்திற்கு முன் ஆலோசனை (Premarital counselling) பெறுவதற்காக காத்திருந்தார்கள். இருவர் கையிலும் Cell phone விளையாடிக் கொண்டிருந்தது. திருமணத்திற்கு சில நாட்கள் தான் இருந்தாலும் நேரடியாக பேசிக்கொள்ளாமல் இருவரும் Whatsapp ல் மூழ்கி தங்களுக்குள் சிரித்துக் கொண்டிருந்தனர்.     Father  வர்கிஸ் அவர்கள் மன நிலையை கண்ணாடி அறைக்குள் இருந்து புரிந்துக்கொண்டார். துவக்க நிலையிலே சில உண்மைகளை இளம் தம்பதியாக போகிறவர்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று உள்ளத்தில் உந்தப்பட்டார்.      இருவரையும் உள்ளே அழைத்தார். தன்னுடைய மேஜையில் ஒரு கண்ணாடி பாத்திரம் ஓன்று வைத்திருந்தார். அருகில் ஒரு சிறிய பாத்திரத்தில் வைத்திருந்த மணலை அந்த கண்ணாடி பாத்திரத்திற்குள் தட்டி நிரப்பினார். பின்பு அழகான கிரிகெட் பந்துகளை எடுத்து இதனை அந்த கண்ணாடி பாத்திரத்திற்குள் வைக்க முடியுமா என்று கேட்டார். சந்தோஷும், சாலினியும், ம்.கூம்.. என்று தலையை அசைத்தனர். உடனே Father வர்கிஸ் சொன்னார். இந்த மணல் போன்றது தான் facebook, whatsapp,Twitter, SMS, Chatting, Youtube. இவைகளால் ஒரு மனிதன் தன் வாழ்க்கையை நிர

என் பாதை தனி பாதை

Image
மாலை வேளையில் அப்பா கூப்பிட ஓடோடி வந்தான் அந்த குட்டி பையன். என்னப்பா கூப்பிட்டிங்களா என்றான். ஆமாடா கண்ணு கொஞ்சதூரம் அப்படியே walking போயிட்டு வருவோமா என்று கூப்பிட, அவனுக்கு சந்தோஷம் வெளியே போய் விட்டு வர, சரி என்று daddy கையைப் பிடிச்சுக்கிட்டு பேசிக்கொண்டே போனான். போகப் போகத் தான் புரிந்தது dady நீங்க என்னப் பேசிறிங்க எனக்கு ஒன்னும் புரிய மாட்டேங்குது. பாவம் அந்த குட்டி பையன், அப்பா குடித்துவிட்டு போதையில் உளறுகிறார் என்பதை புரிந்துக் கொள்ள முடியவில்லை. நேரம் ஆக ஆக அப்பா லம்பிக் கொண்டே போக, மெதுவாக வீடு வந்து சேர்ந்தான். ஓடி போனான் அம்மாவிடம், அம்மா,அம்மா, அப்பா வாயிலிருந்து நாற்றமாக அடிக்கிறது, குடித்திருப்பார்களோ? அம்மா பதிலுக்கு அது ஒரு மனுஷ ஜென்மமா! அது குடிக்காத நாள் தான் ஏது? அதிர்ந்து போன அச்சிறுவன், தொடர்ந்து நடந்த சம்பவங்களைப் பார்த்த போது மனதிற்குள் ஒரு உறுதிக் கொண்டான் 'நான் எங்க அப்பா போன்று ஒரு குடிகாரனாக இருக்க மாட்டேன்'. அச்சிறுவன் தன் வாழ்நாள் முழுவதும் தன் தந்தை குடிகாரன் என்பதற்காகவே வெறுத்து ஒதுக்கினான். தந்தையை மட்டுமல்ல தந்தையின் பெயர் கூட தன்னுடைய பெயர

செருக்குற்ற இதயம்

Image
சீனாவில் ஹாய்சோ என்ற நகரில் ஏழை குடும்பத்தில் 1964ம் ஆண்டு பிறந்தவர் ஜாக்மா. சிறுவயதிலே வெளிநாட்டில் இருந்து சீனாவிற்கு வருகிறவர்களுக்கு வழிகாட்டியாக இருந்து வருவாயை ஈட்டியவர். மெதுவாக ஆங்கிலப் புலமை பெற எண்ணி இளங்கலை பட்டப்படிப்பை முடித்தார். பின்னர் ஆங்கிலம் கற்றுக் கொடுக்கும் ஆசிரியராக மாறினார். இணையதளத்தின் வருகையால் அவர் வாழ்க்கையில் ஜாக்பாட் அடித்தது. மூளையை கசக்கி பிழிந்த அவருக்கு கிடைத்தது தான் ‘Alibaba’ நிறுவனம். இணையத்தை பயன்படுத்தி மக்கள் பொருள்களை வாங்குவதற்கும், விற்பதற்கும் ஏற்ற விதமாய் அமைத்து பார்த்தார். ஜெட் வேகத்தில் அவர் நிறுவனம் வளர்ச்சியை நோக்கி செல்ல ஆரம்பித்தது. ஒரு லட்சத்திற்கு மேலாக ஊழியர்கள் அவரது நிறுவனத்தில் பணிபுரிய ஆரம்பித்தனர். சீனாவின் நாயகனாக வலம் வந்தவர் நாளடைவில் நாளடைவில் உலக நாயகனாக உருவெடுத்தார். தொழில் அதிபராக மட்டும் விளங்காமல் அவ்வப்போது அரசை விமர்சிக்கும் நாவை எடுத்தார். உன் நாவை எல்லாக் காவலோடும் காத்துக்கொள் என்பது ஜாக்மாவிற்கு தெரியாமல் போய்விட்டது. உள்ளம் மேட்டிமை அடைந்ததை அவர் புரிந்து கொள்ளவில்லை. “அழிவு வருமுன் மனுஷனுடைய இருதயம் இறுமாப்ப

எங்கே போகப் போகிறாய்

Image
சைக்கிள், bike, car, பஸ், train, விமானம் என்று எதில் பயணத்தை மேற்கொண்டாலும் ஒரு நோக்கத்துடன் தான் பயணத்தை மேற்கொள்ளுவோம். எங்கே போகிறாய் என்று யாராவது கேட்டால் “எங்கு செல்லப் போகிறேன் என்று எனக்குத் தெரியவில்லை”என்று கூற மாட்டோம். ஆனால் மாணவச் செல்வங்களே! NEET எழுதுகிறேன் JEE எழுதுகிறேன், எது எதுவெல்லாம் opportunity உண்டோ எல்லாவற்றையும் எழுதி பார்த்துவிட வேண்டியதுதான், எது கிடைக்கிறதோ அதை படிக்க வேண்டியது தான் என்று எண்ணுகிறீர்களா?” அப்படி என்றால் கிடைக்கிற பஸ்ஸில் ஏறி பயணம் பண்ண போகிறீர்கள் அப்படித்தானே? உங்களுக்கென்று ஒரு நோக்கம் கிடையாதா? கடினமாக உழைத்தாலும் நமக்கென்று ஒரு ambition இருக்கவேண்டும். அப்பொழுதுதான் வாழ்வில் உயர உயர பறக்க முடியும். சிறந்த குறிக்கோளோடு வாழ்ந்த மடாலய குரு ஒருவர் வயதான நிலையில் படுத்த படுக்கையில் இருந்தார். தன்னுடைய வாழ்க்கைக்கு பின் இந்த மடத்தை நடத்துவதற்கு திறமையான தகுதியுடைய நபரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று விரும்பினார். தன்னால் மதிப்பை பெற்ற ஒரு சீடனை அழைத்து தன் வயதான நிலையை எடுத்துக்கூறி “வெகு தொலைவில் உள்ள குறிப்பிட்ட ஒரு மடாலயத்திலிருந்து தகுதியா