இன்னும் கொஞ்சம்
ஒரு பேராயர் தன்னுடைய மனைவியின் நினைவு நாள் ஜெபக்கூட்டத்தில் பேசும் போது “தன் மனைவியுடன் நான் அதிகமான நேரத்தை செலவுச் செய்து, அன்பு செலுத்துவதற்கு நேரம் ஒதுக்கவில்லை என்ற குற்ற உணர்வு என்னை இப்பொழுது வருத்துகிறது. நான் அவளை இழந்த பின்பு தான் அதை நான் உணருகிறேன்” என்று வருந்தினார். பலவேளைகளில் நமது துணையின் அருமையை நாம் உடனே உணருவதில்லை. இவனை/ளை விட ஒரு நல்ல துணையை நாம் தேர்ந்தெடுத்தால் என்ன? என்று இருக்கிற கணவனை/மனைவியை வேண்டாம் என்று divorce பண்ணி விடுகிறோம். அவர்களை இழந்த பின்பு தான் அவர்களுடைய அருமையை நாம் உணருகிறோம். இவனை/ளைக் காட்டிலும் முதலில் நாம் திருமணம் செய்த நபரே எவ்வளவு better என்று சிலர் உணருகின்றனர். சிலர் இரண்டாவது திருமணம் செய்துக் கொள்ளாமல் பிள்ளைகளுடன் வாழும் போது தான், சே சே .. எவ்வளவு அவசரப்பட்டு divorce வாங்கி விட்டோம். இப்படி நாம் வாழ்வதை விட கணவனோடு/மனைவியோடு வாழ்ந்திருந்தால் எவ்வ்ளவு நன்றாக இருந்திருக்கும் என்று எண்ணி வருத்தப்படுகின்றனர். ஒரு பெண் தன் கணவனோடு கஷ்டப்பட்டு வாழ்ந்துக் கொண்டிருந்தாள். தன் கணவனை பாரமாகவும், வேண்டா வெறுப்போடும் பார்த்த